Amritha Mugizhambikai sametha Uktavedeeswarar, Kuththalam
Location :
Kutthalam is a small town located in kumbakonam – mayavaram bus road. This is not a place where there is a Kutralam waterfall. That is in Tirunelveli district. Kuththalam is the place where Uththala tree came from Devaloka with shiva. 10 km from Mayiladuthurai and 25 km from Kumbakonam.
Sthala puranam and temple information : (Detailed sthalapuram is available in Tamil below)
Uthrasanman
Uthrasanman wanted to go to Kasi to worship Lord Siva. But Siva wanted him to know that this place was equivalent to Kasi and so deputed one of his ganas to take the form of a serpent and scare the devotee. But Uthrasanman invoked the Garuda Mantram, making the snake faint. Then Siva Himself came down in the form of a snake charmer, and provided relief to the snake.
Realizing that only Siva could break the spell of the Garuda Mantram, Uthrasanman fell at the Lord’s feet, and worshipped Him here as he would at Kasi. This incident is depicted on the southern side of the main shrine in the outer prakaram (to the right of Dakshinamurti).
Siva’s marriage to Parvathi
This is one of the temples in the vicinity that is connected to the story of Siva’s marriage to Parvati. After being born as a calf at Tiruvavaduthurai, She was brought up at this place, as the daughter of sage Bharatha. This is also the central point of the Kuttalam Pancha Krosha Sthalams.
Prior to the wedding, Lord Siva came here. Not wanting to be affected by the heat, He wore footwear and brought the Udhdhala tree (which gave him shade) with Him from Indralokam. After the wedding ceremonies, He left his footwear by the Uddala tree here, and both remained here after the wedding. There is an image of footwear by the tree, the temple’s sthala vriksham, which is believed to be those worn by Siva. Because of this temple’s association with the celestial marriage, it is a prarthana sthalam for those seeking to get married.
Siva kept His word that He would marry Parvati on earth, so he is also known here by the name Sonnavaaru Arivaar (the one who keeps his promise).
The ancient name of this place is Tiruturutti. Turutti in Tamil denotes a place like a mound or an island. Even today, the place is located between the Kaveri river and the Manjalaru river. The name of the place today – Kuttalam – derives from the Uddala tree.
It is said that Agni worshipped Siva here, because everything he (Agni) touched was being destroyed. After being blessed, he is said to have become a useful form of energy.
Vikrama Chola‘s wife – Komala – suffered from small pox, which was cured after worshipping at this temple.
It is said when Parvati came to be born here, Vinayakar accompanied here. So he is known as Thunai Vanda Vinayakar.
Sundaramurti Nayanar regained his complete eyesight that he had lost (due to Sangili Nachiyar‘s curse at Tiruvotriyur, and had been partially restored at Kanchipuram) after bathing in temple Teertham. There is a shrine for Sundarar near the Teertham, which bears his name. He also sang a pathigam afterwards, at Velvikudi.
This is a Chola temple, and has some excellent architecture as well as plaster (suthai) sculptures. According to one interpretation of inscriptions from the time of Raja Raja Chola I, this temple was constructed by Sembian Madevi.
அமிர்த முகிழாம்பிகை சமேத உக்தவேதீஸ்வரர், குத்தாலம்
அமைவிடம் :
குத்தாலம், நாகையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். குற்றால அருவி இருக்கும் ஊர் அல்ல இது. அவ்வூர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இவ்வூர் கும்பகோணம் , மாயூரம் பேருந்து மற்றும் இருப்புப்பாதையில் உள்ள ஒரு சற்றே பெரிய ஊர். தேவலோகத்திலிருந்து ஈசனோடு வந்த உத்தால மரம் உள்ள தலம் என்பது மருவி குத்தாலம் என்றானது. மயிலாடுதுறையிலிருந்து 10 கிமீ, கும்பகோணத்திலிருந்து 25 கிமீ.
பண்டைய வழக்கில் ஆற்றிடைக்குறையாக இருக்கும் ஊர்களுக்கு துருத்தி என்ற பெயர் வழங்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாரே அக்காலத்தில் காவிரி இவ்வூரின் இருபுறமும் ஓடியதால் இவ்வூர் துருத்தியானது. தற்போது காவிரி ஊரின் வடபுறம் ஓடுகிறது. திருத்தலமானதால், அக்காலத்தில் இவ்வூர் திருத்துருத்தி என்ற பெயர் பெற்றது. மேற்கு நோக்கிய தலம் ஊரின் நடுவில் உள்ளது. ராஜகோயபுரம் உள்ளது. உள்நுழைந்ததும் பலிபீடம், கொடிமரம் உள்ளன. வலப்பால் உள்ளது உத்தால மரம், தலவிருக்ஷம். இடப்புறம் தெற்கு நோக்கிய தனிக்கோயிலாக அம்பிகை உள்ளார். மிக அழகிய திருமேனி. அம்பிகையின் பெயர் அமிர்த முகிழாம்பிகை. நேரே தெரிகிறார் மூலவர், உக்தவேதீஸ்வரர். தமிழில் அழகிய பெயராக சொன்னவாறு அறிவார் என்றுள்ளது. கோயிலில் இரண்டு பிரகாரங்கள், ஈசனைச்சுற்றி ஒன்றும் , ஈசனின் கோயிலுக்கு வெளியே ஒன்றும் உள்ளன.
தலபுராணம் :
இறைவனை பூஜித்த அம்மைக்கு காட்சி தந்த இறைவன் அம்பிகையின் கரம்பற்ற , அம்பிகை தன் பெற்றோர் மனம் மகிழ விதிமுறைப்படி மணக்க வேண்டினார். இறைவனும் அதற்கிசைந்து நாமே விதித்த விதியின்படி நடந்து உம்மை மணங்கொள்வோம் என்று அருள்புரிந்தார். அதனால் இறைவனுக்கு சொன்னவாறு அறிவார் என்ற பெயர் வந்தது. உண்மையை மணந்துகொள்ள வந்த உருவம் -மணவாள நாதர், பாதுகையாக வந்த வேதமே -குடையாக, உத்தால மரமாயிற்று திருமணத்திற்கென கோலங்கொண்ட திருமேனியாகிய உமையம்மையாருஞ்சாந்தின முலையம்மையாக உள்ளார். மணக்க வந்த இறைவனுக்கு துணையாக வந்த விநாயகர் -துணைவந்த விநாயகர். இவரே தலவிநாயகராவார்.
வருணன் வழிபாட்டு ஜலோதரம் என்ற பிணி நீங்கியதும், காளி வாழப்பட்டதும், வசிஷ்டர், காங்கிரசார், மார்க்கண்டயேயர், புலஸ்தியர், அகஸ்தியர், காஷ்யபர் மற்றும் கௌதமர் ஆகியசப்த ரிஷிகளும் வழிபட்ட சிறப்புடைய தலமாகும். சுந்தரருக்கு உண்டான உடற்பிணி இத்தலத்தில் நீங்கியது. ஐயடிகள் காடவர்கோன் இத்தலத்தைப் பாடியுள்ளார்.
பாரத முனிவர் அம்பிகையை பெண்ணாக பெற்று வளர்க்க வேண்டும் என்று விரும்பினார். அவரது விருப்பத்திற்கிணங்க, ஈசன் அவரது வேள்விக்குண்டத்திலொரு பெண்ணாக அம்பிகையை தோன்றுமாறு பணித்தார். பின்னர் அங்கு வந்து அவள் திருக்கரம் போற்றுவதாக வாக்கும் அளித்தார். அவ்வண்ணமே அம்பாள் , முனிவரின் வேள்விக்குண்டத்தினின்றும் தோன்றினாள். பின்னர் ஈஸ்வரனை திருமணம் செய்துகொள்ளும் பொருட்டு தினமும் பூஜை செய்யத் தொடங்கினாள். அதற்காகக் காவிரிக்குச் சென்று நதியின் நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து , கருவறை மதில்களமைத்து அபிக்ஷேக ஆராதனைகள் செய்து வந்தாள்.
இவ்வாறு ஏழு நாட்கள் கடந்தன. எட்டாவது நாள் இறைவனே வந்து , அம்பாள் வருவதற்கு முன்னரே கருங்கல்லால் ஆலயம் அமைத்து லிங்க வடிவமாய் எழுந்தருளினார். அங்கு வந்த அம்பிகை கற்றளியையும் , லிங்க வடிவத்தையும் கண்டு எல்லையற்ற ஆனந்தம்கொண்டு அபிக்ஷேக ஆராதனைகள் புரிந்து , மெய்மறந்து தியானத்தில் ஆழ்ந்து நின்றாள். இறைவன் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அம்பிகையின் திருக்கரம் பற்றினார். நாணமுற்ற அம்பிகை , இறைவா, சாஸ்திரங்களில் சொல்லப்பட்டது போல என்னை நீங்கள் பெற்றவர் மனம் மகிழ, ஊரார் மற்றும் சுற்றத்தினர் கூடியிருக்க மணமுடிக்க வேண்டும் என்று வேண்டினாள் .உன்னிஷ்டப்படியே திருமணம் நடக்கும் என்று இறைவன் உறுதியளித்தவுடன் இல்லம் அடைந்தாள்.
இறைவன் தான் முன்பே வகுத்த விதியின்படி இவ்வாறு இறைவியிடம் கூறி பின் அவ்வாரே மணந்தமையால் இறைவனுக்கு உக்தவேதீஸ்வரர் , அதாவது சொன்னவாறுஅறிவார் என்ற பெயர் வந்தது. இத்திருமணம், மேலுழுகிலிருந்து வந்த உத்தால மரத்தினடியில் , அம்மரமே குடையாக , இறைவன் மணவாளனாதராக எழுந்தருள நடைபெற்றது. இந்நிகழ்வை வலியுறுத்தும் இரண்டு பாதுகைகளை இம்மரத்தினடியில் இன்றும் காணலாம்.
மணவாளனாதர் வந்தபோது , அம்பிகை மணப்பெண்ணாக , மலர் மாலைகள் மற்றும் நறுமணம் கமழும் சாந்து முதலியானவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். எனவே , பாதுகைகளை எதிரே , அம்பிகை தென்கிழக்கில் நறுஞ்சாந்தஇளமுலையம்மையாக திருச்சந்நிதி கொண்டுள்ளாள்.மணவாளனாதர் பரிமளசுகந்தநாயகியின் திருக்கரம் பற்ற வந்தபோது கயிலையிலிருந்து பலரும் உடன் வந்தனர். அவர்களில் விநாயகரும் ஒருவர். அவர் துணை வந்த விநாயகராக , வெளிப்பிரகாரத்தில் தென்மார்க்கு மூலையில் எழுந்தருளியிருக்கிறார். பிரகாரத்தில் சுதையாலான சிற்பங்கள் அழகுடனும் , பெரியதாயும் இருப்பதால் நன்கு கண்டு ரசிக்க முடிகிறது. அதில் ஒரு வேதியரும் பாம்பாட்டியும் உள்ள சிற்பம் தனித்து கவனத்தை ஈர்க்கிறது.
அதன் பின்னல் இருக்கும் வரலாறு வருமாறு….
ருத்ர ஷர்மா :
ருத்திட ஷர்மா என்னும் வேதியர் காசிக்குச் செல்ல திட்டமிட்டு , மனைவி மக்களை விடுத்து காவிரியைக்கடந்து சென்றார். விந்திய மலையை நெருங்கிக்கொண்டிருக்கும் போது , இறைவன் அவருக்கு குத்தாலத்தில் மகிமையை உணர்த்த விரும்பினார். குண்டொதரனை அழைத்து , நீ பாம்பு வடிவம் எடுத்து ருத்ர ஷர்மா போகும் இடமெல்லாம் வழியில் குறுக்கவே படுத்துக்கொண்டு , முன்னேற விடாமல் தடையாய் இரு என்று உத்தரவிட்டார். அவ்வாரே குண்டொதரனும் பெரிய பாம்பாக மாறி வழியை மறித்துக்கொண்டான். ருத்ர ஷர்மா பயந்து போனாலும் எவ்வாறாயினும் பாம்பைக் கடந்து சென்றுவிடலாம் என்று முயன்றார். அதனைக் கண்ட பாம்பு பெரிதாக படமெடுத்து ஆடி அவரை அச்சுறுத்தியது. அந்தணர் கருட மந்திரத்தை ஓதினார். பாம்பு மயங்கி தலையை கீழாய் சாய்த்தது. அதன் மூச்சுக்கு காற்றால் காடுகளெல்லாம் கருகின. உயிர்களெல்லாம் மயக்கமுற்றன. இதையெல்லாம் கண்ட ருத்ர ஷர்மா உண்மையை ஒருவாறு புரிந்து கொண்டார். இது குத்தாலநாதனின் திருவிளையாடலாக இருக்கலாம் என்று அவருக்கு புலப்பட்டது. உதவிக்கு வரும்படி கோரி உக்தவேதீசரை உரக்க அழைத்தார். பக்தனின் ஓலம் கேட்டதும் பெருமான் ஒரு பாம்பு பிடாரன் உருக்கொண்டு அந்தணர் முன் தோன்றினார். சாமீ , குத்தாலநாதரின் கட்டளைப்படி இங்கு வந்தான் என்று கூறி மகுடியை எடுத்து ஊதினார். மயங்கி கிடந்த பாம்பு மீண்டும் படமெடுத்து ஆடத்தொடங்கியது. ருத்ர ஷர்மாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஈசன்தான் இது என்று தெரிந்துகொள்ள அதிக அவகாசம் பிடிக்கவில்லை. பெருமானே பாம்பாட்டி என்று அவர் நினைத்த மாத்திரத்திலேயே பெருமான் மணவாளனாதராக அவர் முன் காட்சியளித்தார்.குண்டொதரனும் பாம்பு வடிவம் நீங்கினான்.
இதனைக்கண்ட ருத்ர ஷர்மாவின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுத்தது. ஈசனை விழுந்து வணங்கினார். அப்போது ஈசன் , ருத்ர ஷர்மா , குத்தாலம் காசியை விட சிறந்த தலமாயிற்றே, அவ்வாறிருக்க நீ காசியை நாடியது ஏன். அதனால்தான் குண்டொதரனை அழைத்து பாம்பாக மாறி உன்னை தடுக்கச்சொன்னேன் என்றார். கங்கையினும் சிறந்தது காவிரி அதன் கிழக்கே விஸ்வநாதர் இருக்கிறார் , அக்கினி திசையில் பைரவர் இருக்கிறார் என்று கூறி , திரும்பிச்செல்லுமாறு பணித்தார் . அதற்கு ருத்ர ஷர்மா , இறைவா , என் உடல் மிகவும் கலைத்துவிட்டதையே , நான் எவ்வாறு செல்வேன் என்றார்.
அதற்கு ஈசன் அங்கு ஒரு குலத்தை தோற்றுவித்தார். அதில் மூழ்கி ருத்ர ஷர்மா குத்தாலத்தில் எழுந்தார். உக்தவேதீஸ்வரை தரிசித்து மகிழ்ந்துவிட்டு , சிலகாலம் அவருக்கு சேவை செய்துவிட்டு முக்தி அடைந்தார்.
வித்யுன்மாலி
வித்யுன்மாலிதிதியின் புதல்வன் வித்யுன்மாலி சுக்ரானிடம் சென்று , தலங்களில் சிறந்தது எது என்று வினவ, அவர் குத்தாலத்திற்கு செல்லுமாறு கூறினார். வித்யுன்மாலி இங்கு வந்து பத்ம தீர்த்தத்தில் நீராடி , இறைவனையும் இறைவியையும் துதித்துத் தவமியற்றது தொடங்கினான். அவன் தவத்தை மெச்சிய ஈசன் , வித்யுன்மாலி , உனக்கு வேண்டிய வரம் யாது என்று கேட்டார். அதற்கு வித்யுன்மாலி , நானும் கதிரவனாக வேண்டும் எனக்கும் ஒரு தாங்காத தேர் வேண்டும் , நானும் கதிரவன் போல மகாமேருவை வலம் வரவேண்டும் என்று வேண்டினான்.
விரும்பியயாவற்றையும் பெற்றுக்கொண்டான் வித்யுன்மாலி. தக்ஷன் யாகத்திற்கு சூரியன் சென்றதை குறையாகக் கூறிக்கொண்டு கிழக்கையே உதித்தான். இதுகண்டு சூரியன் மேற்க்கே உதித்தான் வித்யுன்மாலி மேருவின் வடதிசையில் வந்தால் சூரியன் தெற்க்கே வருவான் இவ்வாறு ஆனதால் பூமியில் இரவே இல்லாமல் போய்விட்டது. உயிரினங்கள் அனைத்தும் இன்னலுற்றன. இதுகண்டு பிரஹஸ்பதி சூரியனிடம் , காலத்தை அளந்துகாட்டும் நீ சரியாக உன் பணியைச் செய்யாமலிருப்பது முறையன்று என்று கூறினார். சூரியனுக்கு கோபம் வந்து விட்டது. வித்யுன்மாலியுடன் போர் புரியத் தொடங்கினான் .போரில் தோற்ற வித்யுன்மாலி, அபாயம் அபாயம் என்று அரற்றிக்கொன்டே தேரோடு நிலத்தில் விழுந்தான். இறைவனின் நெற்றிக்கண் சிவந்தது வித்யுன்மாலிக்கு அபாயமளித்து சூரியனை சினத்துடன் நோக்கினார். உடனே சூரியனின் தேர் கீழாய் விழா வித்யுன்மாலியின் தேர் மேலே எழுந்தது, சூரியன் தன் தந்தையிடம் சென்று முறையிட்டான். அவரும் சூரியனை குத்தாலத்திற்கு செல்லுமாறு பணித்தார். அவ்வாரே சூரியனும் இத்தலத்திற்கு வந்து தலத்தின் தென்புறமுள்ள அரச மரத்தினடியில் விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்து அதன் மேற்கில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து முறைப்படி ஆராதித்து வந்தான். அதுவே அக்னீஸ்வரர் திருக்கோயியில், சிவபெருமானை ஆராதித்துவிட்டு கடுந்தவத்தில் ஆழ்ந்தான். அந்த வெம்மையைக்கண்ட தேவர்கள் குத்தாலநாதனிடம் சிபாரிசு செய்தனர். கதிரவனுக்கு எதிரே இறைவன் தோன்றி , கதிரவா , துருத்தி ஆலயத்திலுள்ள தாமரை தடாகத்தில் நீராடி ஓராண்டு எம்மை வழிபாட்டு பின்னர் இழந்த உன் தன்மையையும் நிலையையும் அடைவாயாக என்றருளினார். சூரியன் பகவானை வணங்கி , ஸ்வாமி அவ்வாரே செய்கின்றான். கார்த்திகை ஞாயிறாகிய இன்று பத்ம தீர்த்தத்திலும் காவிரியில் நீராடி உம்மை வழிபடுபவர்கள் , விரும்பும் பேற்றை அடையும்படி தாங்கள் அருள வேண்டும். நான் தங்களைக் குறித்து தவத்திலீடுபட்ட இடம் கதிராமங்கலம் என்றழைக்கப்படவேண்டும் என்றான். ஈசனும் அவ்வாரே அருளினார் .வித்யுன்மாலியும் கார்த்திகை ஞாயிறன்று ஈசனை வழிபாட்டு பேரின்ப நிலையடைந்தான்.
கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகள் இத்தலத்தில் மிகவும் விசேஷமாகும். இத்தலத்தினைச் சுற்றி பல தீர்த்தங்கள் உள்ளன. அவையாவன, காவிரியாறு ஆலயத்தின் வடமேற்கிலுள்ள சுந்தர தீர்த்தம் , அக்கினி தீர்த்தம் , காலி தீர்த்தம் , புண்டரீக தீர்த்தம் , காம தீர்த்தம் , கதிரவ தீர்த்தம் , அமர்க்கண்டதேய தீர்த்தம் ஆகியனவாம். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இவ்வாலயத்திற்கு நல்ல முறையில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. காமிக ஆகம முறைப்படி நாடாரும் 5 கால பூஜைகள் நடைபெறுகின்றன. தலமரம் உத்தால மரம் .ஒருவகை ஆத்தி மரம் என்று சொல்லப்படுகிறது.
மூவர் பாடலும் பெற்ற தலம் இது. தலபுராணம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் பாடப்பட்டுள்ளது.இதற்கு திருத்துருத்தி புராணம் என்று பெயர்.
அல்லலைக்கடக்கவேண்டில் அறனையே நினைமின் நீர்கள்
போல்லை காயந்தன்னுள் புண்டரீகத்திருந்த
வள்ளலை வானவர்க்குங் காண்பரிதாக நிண்ற
துள்ளலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவரே
– அப்பர்
துறைக்குமாறு சொல்லப்படாய் துருத்தியாய் திருந்தடி
மறைக்கு மாறிலாதஎன்னை மையல்செய்து இம்மண்ணினமேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்பது முடம்புவிட்டு
இறக்குமாறு காட்டினாய்க் கீழுக்குகின்ற தென்னையே
– சம்பந்தர்