Sthala puranam and temple information :
On the night of Maha Sivaratri, Nagaraja (lord of the nagas) is said to have worshipped Lord Siva at four 4 temples– one during each jamam of the night. In order, these temples are the Nageswarar temple at Kumbakonam, Nageswarar temple at Tirunageswaram, Seshapureeswarar temple at Tirupampuram, and Naganathar temple at Nagore. This place used to be called Champakavanam (or Shenbagaranyam), after the forest of Champaka (Shenbagam) trees that dominated the area.
Sekkizhar, the compiler of Periya Puranam, performed the inaugural recital of his epic here, and this is considered one of his favourite temples (for which reason, the presiding deity at the temple at Kunnathur in Chennai – Sekkizhar’s birthplace – is Naganathar).
Once, Sukarma (the son of Sage Suseelar) was bit by Takshaka the snake, as a result of which the sage cursed Takshaka to be born as a human. Takshaka approached Sage Kashyapa for a solution, and the sage asked him to install a Lingam and offer worship to Siva, at this place. After much penance, Takshaka was blessed by Siva and relieved from his curse.
After hearing the above incidents, Rahu realised that this would be the safest place for him, and so he moved here permanently with his wives Simhi and Chitralekha. Rahu is said to be in benevolent form here, blessing devotees with positive outcomes and removing hurdles in their lives. For this reason, this temple is considered a Rahu sthalam, and is one of the Kumbakonam Navagraham temples, as well as being a sarpa dosha nivritti sthalam. Rahu has a separate shrine in the north-eastern portion of the 2nd prakaram, and unlike at most other temples, Rahu here is depicted here with a human face. It is believed that the milk offered to Rahu for abhishekam during rahukalam time, turns blue.
During the churning of the ocean, Vishnu as Mohini determined that only the Devas would receive the amritam. However, one asura – under the advice of Sukracharya – disguised himself as a Deva and received amritam. Suryan and Chandran brought this to Vishnu’s attention, who tapped the asura with the ladle used to distribute the amritam, causing the asura’s head to be severed. The remorseful asura prayed to Lord Siva, who gave the two parts of him the body of a snake, and place among the planets, as celestials – these two are Rahu and Ketu. So Rahu and Ketu occasionally get their revenge on Suryan and Chandran by causing solar and lunar eclipses!
In addition to Takshaka and Rahu, several nagas are associated with worshipping at this temple, including Karkotakan and Adiseshan, the first of the nagas who was also given darsanam of Siva here. As a result of this, the deity here came to be known as Nanganathar or Nageswarar.
There is a separate sub-complex for Devi at this temple, located on the right (north) when entering the vast temple complex from the eastern entrance. Here, at the request of Sage Bringhi, Amman, Lakshmi and Saraswati are enshrined together in the same sannidhi – this is a very unusual and rare depiction. It is believed that they are in deep meditation upon Siva, and Maha Bhairavar is said to be guarding and assisting them. Girigujambigai Amman at this temple is said to be a swayambhu murti and so no abhishekam is performed for the murti.
Indra is said to have worshipped Parvati as Girigujambigai here, to be relieved of the curse by Sage Gautama, for having behaved inappropriately with Ahalya. Sage Bhagirata as well as Nala (of Tirunallar fame) are said to have offered worship here. According to the sthala puranam, Nandi worshipped Siva here and received the title Nandeeswaran, thereby being elevated to a status equivalent of Lord Siva Himself. Similarly, Vinayakar received the title of Ganapati here.
This Chola temple was built initially by Aditya Chola I in the 10th century, with subsequent additions and renovations by later Chola kings, and also by other dynasties including the Nayaks, who constructed the large mandapam inside the temple. The Vinayakar shrine on the east of the temple complex has a Ganapati yantram inside, and was installed by the saint Sadasiva Brahmendrar. The temple also houses some fabulous examples of classic Chola architecture.
Other information for your visit
This is one of five temples around Kumbakonam called the Kumbakonam Pancha Krosha sthalams, which represent the temples where some of the amritam fell, when Siva as a hunter broke open the pot containing the seeds for germination of new life. These five temples are: Nageswarar, Tirunageswaram; Mahalingeswarar, Tiruvidaimaruthur; Swaminathar, Swamimalai; Sundareswarar, Koranattu Karuppur; and Airavateswarar, Darasuram.
Very close to this temple is the Oppiliappan temple (Divya Desam temple dedicated to Lord Vishnu).
அருள்மிகு செண்பகராணேஸ்வரர் /நாகேச்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரர்
ராகு ஸ்தலம் – செண்பகராணேஸ்வரர் கிரிகுஜாம்பிகை
தேவாரம் பாடிய மூவர் மற்றும் மாணிக்கவாசகர், இவர் தவிர ஏனைய -59- நாயன்மார்களும் சைவநெறியை கட்டிக்காக்க பாடுபட்டது நாமறிவோம். ஆனால் இவர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் மற்றும் இவர்கள் வாழ்வில் நடைபெற்ற அதிசய சம்பவங்கள் ஆகியனவற்றை நாம் அறிந்திட பேருதவி செய்த ஒரே இலக்கியப்படைப்பு பெரியபுராணமாகும். அதனை எழுதிய சேக்கிழார் அந்நூலை சிவனருள் பெற்று வெளியிட்ட திருத்தலம் திருகேஸ்வரமாகும். சேக்கிழார் திருப்பணிகள் பல செய்த தலமும் இதுவே. நடுவில் சிதிலமடைந்த நிலையில் இருந்திருந்தாலும் இறைவனருளால் தற்போது புதுப்பொலிவுடன் விளங்குகிறது இத்தலம்.
கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில், குடந்தையிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து நிறைய நகரப்பெருந்துகள் உள்ளன. குடந்தையிலிருந்து சென்னை செல்லும் ரயில் மார்கத்தில் குடந்தைக்கடுத்த ரயில் நிலையம். மயிலாடுதுறையிலிருந்து வருவோர் ரயிலிலேயே அல்லது திருவிடைமருதூர் வந்து அங்கிருந்து திருநாககேஸ்வரம் செல்லும் இடப்பக்க பாதையில் வந்தால் இத்தலத்தை அடையலாம்.
பெரிய கோயில், பொலிவுடன் உள்ளது.
நான்கு கோபுரங்களும் , மூன்று மாடவிழாக்களும், தேரோடும் வீதிகளும் கொண்ட அழகிய தலம்.
ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு வாயிலே பிரதான வாயில். சாலையிலிருந்து தெரிகிறது. சாலையிலேயே அலங்கார வளைவு உள்ளது. அது கடந்து வந்தால் கடைத்தெரு.
நிறுத்த கணபதி , விநாயகர் , நந்தி தேவர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பெரிய கொடிமரம் இருக்கின்றது. இடப்பக்கம் சூரிய புஷ்காரிணியும் , வலப்புறம் நூற்றுக்கால் மண்டபமும் உள்ள சூரிய புஷ்காரிணி அருகில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதி இருக்கின்றது. தென்மேற்கு திசையைப் பார்த்தவாறு அமைந்துள்ளது.
அதனைக் கடந்து உலகோபுர வாசலில் நுழைந்தால் சதாசிவப்பிரமேந்திரர் வழிபட்ட கணபதியந்திரம் ஒன்றுள்ளது. ஆகமப்படி பூஜைகள் இதற்கு நடைபெறுகின்றன. கார்த்திகை, மாட்டுப் பொங்கலன்று இதற்கு விக்ஷேஷமாக புனுகுச் சட்டம் சார்த்தப்பட்டு பூஜை நடைபெறுகிறது.
தெற்கு கோபுர வாசலுக்கு இடப்புறம் த்வார பாலகர்களுடன் விநாயகர் சந்நிதி ஒன்று உள்ளது. இந்த கணநாதர் சதாசிவ ப்ரம்மா எந்திரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்றும், இவர் யந்திரத்தைதான் உள்கோபுரத்தினருகில் பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதர கோபுர வாசல்களிலும் காவல் தெய்வங்கள் உள்ளனர்.
இப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் தளத்தின் சிறப்புக் கடவுளாகிய ராகு பகவான் தனிச்சந்நிதி கொண்டு காட்சி தருகிறார். ராகு பகவானுக்குத் தென்புறம் ஜேஏஷ்டா தவியும் , வலப்புறம் கஜ லக்ஷ்மியும் , நர்த்தன கணபதியும் உள்ளனர்.
உட்ப்ரகாரத்தில் வழக்கமான கோகேஷ்ட மூர்த்தங்களோடு சேக்கிழாரும் இருக்கிறார். தெற்கு பிரகாரத்தில் ஸ்வயம்பு மூர்த்தியாகிய தல விநாயகர் சந்நிதி இருக்கின்றது. இவர் செண்பக விநாயகர் என்றும், சான்று விநாயகர் என்றும் வழங்கப்படுகிறார். சிவபெருமான் கட்டளைப்படி நாகராஜன் தன்னை முதலில் வழிபட்டதற்கு சான்றாக விளங்குகிறார்.
வடக்குப்பிரகாரத்தில் அறுபத்துமூவர் சந்நிதிகளும், சேக்கிழார், அவர் சகோதரர் பாலறாவாயர், தாய் அழகம்மை வடிவங்களும் உள்ளன. வலப்புறம் அதிகார நந்தியின் அரியதொரு சிலா வடிவம் உள்ளது. ஸ்வாமியை வழிபாட்டு வீரவாள் பெற்றதால் நந்தி இங்கு வாளுடன் காட்சியளிக்கிறார்.
ஸ்வாமி கருவறை சோமாஸ்கந்த மூர்த்த அமைப்பையுடையது. சிவபெருமான் , முருகன் , பிறையணிவாள்நுதல் அம்பிகையின் சந்நிதிகள் வரிசையாக உள்ளன. சந்திரன் கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று பூஜை செய்ததால் அம்மனுக்கு இப்பெயர் வந்தது.
நாகராஜன் பூஜித்ததால் திருநாககேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது. ஒரு சிவராத்திரியில் நாகராஜன் முதல் ஜாமத்தில் வில்வ வளமான குடந்தை கீழ் கோட்டம் என்றழைக்கப்படும் குடந்தை நாகஈஸ்வரஸ்வாமி திருக்கோயிலிலும் இரண்டாம் ஜாமத்தில் செண்பக வளமான திருநாகஈஸ்வரத்திலும், மூன்றாம் ஜாமத்தில் வன்னி வளமான திருப்பாம்புரம் சர்பபுரீஸ்வரர் திருக்கோயிலிலும், நான்காம் ஜாமத்தில் புண்ணை வளமான நாகைக்காரோணம் என்றழைக்கப்படும் நாகப்பட்டினம் நாகநாதசுவாமி திருக்கோயிலிலும் வழிபட்டதால் இந்நான்கு தலங்களும் நாகராஜன் பெயராலேயே வழங்கப்படுகின்றன.
இதனால் இன்றும் காலையில் குடந்தை நாகஈஸ்வரஸ்வாமி கோயிலிலும் , உச்சிக்காலம் திருநாகஈஸ்வரத்திலும் , சாயரட்சை திருப்பாம்புரத்திலும் , அர்த்தஜாமம் நாகைக்காரோணத்திலும் வழிபடுவது சிறப்புடையதாக சொல்லப்படுகிறது.
கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமான் அநபாய சோழனிடம் அமைச்சராக இருந்த போது , திருநாகேஸ்வரம் வந்து நாகேஸ்வர ஸ்வாமியை தனது ஆத்மார்த்த தெய்வமாக்கிக்கொண்டார். திருப்பணிகள் பல செய்தார்.
வசிஷ்டர் , நந்திதயவர் , விநாயகர் , நலன் , கௌதம முனிவர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
ஜம்புமாலி பேயுரு நீங்குதல்
கேரள நாட்டு மன்னனான ஜம்புமாலி என்பவன் தினமும் அரண்கள் செய்து மகிழ்ந்திருந்தான். ஒரு நாள் அவ்வாறு அரண்களை முடித்துவிட்ட வேளையில் காலங்கிரி என்ற ஒரு முனிவர் அவனிடம் உதவி நாடி வந்தார். மன்னனால் எதுவும் அளிக்க முடியவில்லை. கோபம் கொண்ட முனிவர் மன்னனை பேயுருக்கொண்டு அழியுமாறு சாபமிட்டார். பதைபதைத்துப்போன மன்னன் சாபவிமோசனம் என்னவென்று கேட்க , பேயுருவுடனே ஆயிரத்தெட்டு சிவாலயங்களை தரிசித்து , இறுதியில் திருநாகேஸ்வரத்திற்கு வந்து சூரிய புஷ்காரிணியில் நீராடி செண்பகாரயேஸ்வரரையும் , அம்பிகையையும் வழிபட்டால் சாபம் நீங்கும் என்று அருளினார். அவ்வாரே மன்னனும் ஆயிரத்தெட்டு தலங்களையும் வழிபாட்டு திருநாகஈச்சரம் வந்து வழிபாட்டு விமோச்சனம் அடைந்தான். பேயுருக்கொண்ட ஜம்புமாலியின் உருவம் ஆலயத்து தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடிமாதத்தில் புதுத்தெருவில் ஜம்புமாலியின் சரிதையை நாடகமாக நடத்திவருகிறார்.
ராகு பகவான்
சுசிலா முனிவர் என்பவர் தனது ஆஸ்ரமத்தில் ஒரு வேள்வி நடத்துவதற்காக ஆயத்தங்கள் செய்யத்தொடங்கினார். அதற்கு வேண்டிய சேமித்து , இலை , பழங்கள் மற்றும் தர்ப்பை ஆகியனவற்றைக்கொண்டுவர தனது மகனை காட்டிற்கு அனுப்பினார். இவற்றைப் பரித்து வரும் வழியில் மகன் தட்சகன் என்னும் நாகம் தீண்டி இறந்தான்.
வெகு நேரம் ஆகியும் மகன் வராததைக்கண்டு கலக்கம் அடைந்த முனிவர் , தனது ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து கொண்டார். கோபம் கொண்ட அவர் தச்சகனை நோக்கி , நீ மானிட சர்பமாகக் கடவாய் என்று சபித்தார். கலக்கமடைந்த தட்சகன் முனிவரிடம் சாபவிமோசனம் கேட்க , பல சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டால் சாபம் நீங்கும் என்று அருளினார்.
அதன்படி தட்சகன் பல சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டான். ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் குடந்தை நாகேஸ்வரையும் , இரண்டாம் ஜாமத்தில் செண்பகாரயேஸ்வரரையும் , மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரநாதரையும் , நான்காம் ஜாமத்தில் நாகப்பட்டினம் காயாரோகணக்கேஸ்வரரையும் வழிபாட்டு சாப நிவர்த்திக்காக பிரார்த்தித்தான்.
அப்போது பெருமான் தச்சகனைப் பார்த்து நீ மீண்டும் செண்பகாரண்யம் செல்வாயாக என்று அருளினார். மீண்டும் செண்பகாரண்யம் வந்த தச்சகம் சாப விமோச்சனம் அடைந்து பழைய உருப்பெற்றன. ஈசன் அவனைப்பார்த்து , நீ இங்கேயே தங்கிவிட்டு என்று அருளினார் .
அதற்கிசைந்த தட்சகன் ஈசனைப்பார்த்து , தாங்களும் , இந்த ஊரும் என் பெயரிலேயே விளங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். ஈசனையும் அவ்வாரே ஆகட்டும் என்று அருளினார். எனக்கு சாபவிமோசனம் ஏற்பட்டதால் , என்னைத்தயடி இங்கு வந்து நாகதோஷ நிவர்த்தி வேண்டுவோர்க்கு அதனை தீர்த்துவைதது அருள்கிறேன் என்று கூறி , ஸ்வாமியின் தென்மேற்கு மூலையில் அமர்ந்து விட்டான். ஆகவே இது ராகுஸ்தலமாக கருதப்படுகிறது.
ராகு பகவானுக்கு ராகு காலத்தில் சிறப்பு அபிக்ஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அப்போது அபிக்ஷேகம் செய்யப்படும் பால் நீல நிறமாக காட்சியளிப்பது ஒரு அதிசயம்.
அம்பிகையின் தவக்கோலம் :
பிருங்கி முனிவர் ஈசனிடம் பேரன்பு கொண்டிருந்தார். ஈசனை மட்டுமே வழிபடுவதை வழக்கமாகவும் கொண்டிருந்தார். ஒருமுறை ஈசன் உமையவளுடன் அர்தநாரீசவரராக அமர்ந்திருந்தார், அம்பிகையை வழிபட விரும்பாத பிருங்கி ஒரு உபாயம் செய்தார்.
இருவருக்கும் இடையில் துளை ஒன்று போட்டு ஈசனை மட்டும் வண்டாக சுற்றி வந்தார். அது கண்ட அம்பிகை பிருங்கி முனிவரின் தசைகள் வலுவிழந்து போகுமாறு சபித்தாள். ஈசன் இரக்கப்பட்டு முனிவருக்கு ஊன்றுகோல் கொடுத்து உதவினார். அதனால் ஈசன் மேல் கோபம் கொண்ட அம்பிகை பூலோகத்தில் சிறந்த வளமான செண்பக வனத்திற்கு வந்து பூஜை செய்யத் தொடங்கினாள். அவளுடனே லக்ஷுமியும் , சரஸ்வதியும் வந்தனர்.
அம்பிகையின் தவத்திற்கு இடையூறு நேராதிருக்கும் வண்ணம் பாதுகாக்க சங்க நிதியும் , பதுமநிதியும் , பைரவரும் , சாஸ்தாவும் , துர்கா தேவியும் காவல் காத்து வந்தனர். இத்தவக்கோல அமைப்பினை ஆலயத்தின் வலப்புறத்தில் காணலாம்.
இத்தவக்கோல அமைப்பினை ஆலயத்தின் வலப்புறத்தில் காணலாம்.
இங்கு அம்பிகை ஸ்வயம்புவாகத் திகழ்கிறாள். அபிக்ஷேகம் கிடையாது. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்தப்படுகிறது.
இந்திரன் சாப விமோச்சனம் :
கௌதம முனிவரின் மனைவி அகலிகை தினமும் ஆற்றில் பூஜைக்காக நீரெடுத்துவருவதை வழக்கமாகி கொண்டிருந்தாள். தனது சக்தியாலேயே ஆற்றுமண்ணை குடமாக்கி அதனில் நீரெடுத்து வருவாள். இந்திரன் அகலிகையைக் கண்டு மோகித்து அடைய விரும்பி ஆற்றங்கரையினில் ஒரு நாள் இந்திரா விமானத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். அவனைக்கண்ட அகலிகை ஒரு கணம் மனதை பறிகொடுத்து விட்டபடியால் களங்கப்பட்டு குடம் செய்யும் சக்தி இழந்து வருந்தினாள். நீண்ட நேரமாகியும் பூஜைக்கு நீர் வராததால் கோபம் கொண்ட முனிவர் தனது ஞான திருஷ்டியால் நடந்தவையை அறிந்தார். கோபம் கொண்ட அவர் இந்திரனை நாற்றமெடுக்கும் பூனையாகுமாறு சபித்தார். அக்கணமே பூனையாக மாறிய இந்திரன் பல தலங்களுக்கும் சென்று ஈசனை வழிபாட்டு , இறுதியில் செண்பகாரண்யம் வந்து வழிபாட்டு தனது சாபம் நீங்கப்பெற்றான். அதன் காரணமாக மகர சங்கராந்தி தினத்தன்று இந்திரன் அம்பிகைக்கு புனுக்குச் சட்டம் சார்த்தி வழிபட்டான். அதன் காரணமாக இன்றளவும் , தை மாதம் ஒன்றாம் தேதி அம்பிகைக்கு புனுகுச் சட்டமும் , லட்சுமி சரஸ்வதிக்கு சாம்பிறாணித் தைலமும் சார்த்தப்படும். திரை போட்டு , திரைக்கு வெளியேயே பூஜைகள் நடைபெறும் திரைக்குள் இந்திரன் வழிபடுவதாக ஐதீகம்.
மூவர் பாடலும் பெற்ற பதி இது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற பதியும் கூட,
பொன்னேர் திரு மேனியனே புரியும்
மின்னர் சடையாய் விரை காவிரியின்
நன்னீர் வயல் நாகஈச்சர நகரின்
மன்னே என வல்வினை மாய்ந்து யாருமே
திருநாகேச்சரம் சுவாமிநாத முதலியார் நாகேச்சர பயிற்றுப் பத்தந்தாதி பாடியுள்ளார். நாகநாத வெண்பாவேன்னும் நூலொன்று இருந்திருக்கின்றது.
விழாக்கள் :
தீர்த்தம், சூரிய தீர்த்தம் , மூன்றாம் பிரகாரத்தில் உள்ளது. கண்டராதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது.
வைகாசி பூசத்தில் க்கேக்கிழார் குருபூஜை நடைபெறுகிறது.
ஊருக்கு சற்று வடக்கவே அய்யனார் கோயில் ஒன்று உள்ளது. மேற்கு மாட வீதியில் மேலை கோயபுரத்திற்கு பின்புறம் ஆதிதேவி கோயில் உள்ளது.
நித்திய பூஜைகள் நல்ல முறையில் நடைபெறுகின்றன. கார்த்திகையில் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் தொடங்கி பத்து நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் திருத்தரும் , பத்தாம் நாள் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன.
இவ்வூர் ஒரு காலத்தில் சமணர்கள் ஆதிக்கம் பெற்றுத்திகழ்ந்ததை காணமுடிகிறது. அம்பாள் சந்நிதியின் சுற்றுப்பிரகாரத்தில் சமணர்களின் சிலைகள் காணப்படுகின்றன. அருகிலுள்ள சன்னாபுரம் , சமணர் புறம் என்றிருந்தது பின்பு மருவியிருக்கலாம்.
மார்கழித்த திருவாதிரையில் நடராஜப்பெருமான் வீதியுலா வருகிறார்.
சித்திரா பௌர்ணமியன்று சிங்காரவேலர் புறப்பாடும் , வைகாசி விசாகத்தந்து சோமகஸ்கந்தர் புறப்பாடும் உண்டு. இவை தவிர கந்தர் சஷ்டி , நவராத்திரி ,, சூரசம்ஹார விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
அரை கிலோமீட்டரில் உப்பிலியப்பன் கோயிலும் , அதனைக்கடந்து 2 கிமீக்களில் அய்யாவாடியில் பிரத்தியங்கிரா தேவி திருக்கோயியிலும் கிழக்கையே 4 கீ மீக்களில் திருநீலக்குடியும் , அதனைக்கடந்து 6 கீ மீக்களில் வைகல் மாடக்கோயியிலும் , வடக்கே 5 கிமீக்களில் திருவிடைமருதூரும் , அதனருகவே 1 கிமீக்களில் திருபுவனம் சரபஈஸ்வரரும் , மேற்க்கே 4 கிமீக்களில் சாஃகோட்டையில் திருக்கைலாயநல்லூரும் , அதன் தென்கிழக்யே 4 கிமீக்களில் சிவபுரமும் , வடமேற்கே 6 கிமீக்களில் கும்பகோணத்தில் கும்பகேஸ்வரர் , நாகஈஸ்வரர் , சோமேஸ்வரர் , சாரங்கபாணி , சக்கரபாணி , ராமர் கோயில் மற்றும் மகாமக குளமும் குடந்தையைச்சுற்றி எண்ணற்ற பல தலங்களும் அமைந்துள்ளன