Gnanambika Sametha Gnana Parameswara Swamy Temple, Naaloor Mayaanam
Naaloor Mayaanam, also known as Thirumeignaanam, is revered as a sacred place of immense significance. Situated between Kumbakonam in Thanjavur district and Thiruvarur, it lies in the area where the River kudamurutti splits into two branches, flowing eastward towards nannilam and southward towards Kudavasal.
The temple at Naaloor is a place of worship. It is believed to be where Lord Shiva, known as Palasavanathar or Pilasavaneswarar, resides along with his consort, Goddess Periya Nayagi. The deity is seen facing east, with the sacred bull, Nandi, to the right. The lingam here is self-manifested, and the temple is surrounded by vast fields.
The sacred tree of this temple is the Palaa tree, and its vimana (the tower above the sanctum sanctorum) is designed in the shape of an elephant’s back.
Adjacent to the temple entrance, towards the north, is a cowshed where 1.5 measures of milk are offered daily.
The priests of this temple also serve as archakas (temple priests) in several neighboring temples, ensuring the welfare of the deities.
ஞானாம்பிகா உடனுறை ஞான பரமேஸ்வர ஸ்வாமி கோவில், திருநாலூர் ; திருநாலூர் மயானம்
கும்பகோணத்திலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது. தேவாரத்தில் இடம் பெற்ற நாலூரை வைப்புத் தலமாகவும், நாலூர் மயானத்தைத் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகவும் கொள்ளலாம் அப்பர் தேவாரப்பாடல் ஒன்றிலும் (6-71-4) சுந்தரர் தேவாரப்பாடல் ஒன்றிலும் (7-31-6) நாலூர் குறிக்கப்படுகிறது. ஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகத்துள் நாலூர் மயானம் கூறப்படுதலைக் காணலாம். முதல் எண் திருமுறையையும், இரண்டாவது எண் பதிகத்தையும், மூன்றாவது எண் பாடலையும் குறிக்கும்.
நாலுரில் உள்ள கோயில் முதற் பராந்தக சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில். நாலூர் மயானக்கோயில் முதல் ஆதித்த சோழன் முதலிய பல சோழமன்னர்களின் திருப்பணிகளைப் பெற்றது. நாலூர் மயானம் அழகிய சிறிய கிராமம் சோழர் காலக்கலைச் செறிவோடு இங்குள்ள கோயில் விளங்குகிறது. திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம் ஒன்றைப்பெற்ற சிறப்புடையது. லிங்கத்தின் திருமுடியில் சில வேளைகளில் பாம்பு ஊர்வதாகக் கூறுகின்றனர்.
திருஞானசம்பந்தர் ‘பாலூரும் மலைப் பாம்பும். பனி மதியும் மத்தமும், மேலூரும் செஞ்சடையான’ என்று கூறியருளுவதை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
கோயிலமைப்பு :
கிழக்கு நோக்கிய சந்நிதி. எதிரே ஞானதீர்த்தம் உள்ளது. கோயிலின் வாயிலில் நந்தி தேவர் உள்ளார். பஞ்ச மூர்த்திகளை உடைய கட்டைக் கோபுரவாயிலைக் சுடந்தவுடன் பெரிய பிரகாரம். வடக்குப் பிரகாரத்தில் சண்டேசுரர் மிக்க கலையழகு உடையவராய் காட்சி தருகிறார். கர்ப்பக் கிருகத்தைச் சுற்றி மண்டபம் உள்ளது கோஷ்டங்களில் தெற்கே விநாயகர் இடபாரூடர், கருங்கல் நடராசர், தெட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேற்கே மகா விஷ்ணுவும் வடக்கே ப்ரம்மா, துர்க்கை ஆகியோரும் உள்ளனர்
சுவாமிகோயில் மகா மண்டபம் அம்பாள் கோயிலையும் இணைத்துள்ளது. அம்பாள் தெற்கு நோக்கி விளங்கு கின்றார். சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர்.மூன்று மூனால் இலிங்கத் திருமேனிகள் முருகன சந்நிதிகள் அமைந்து உள்ளன வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் சுவாமி களின் சந்நிதியின் வாயிலில் துவார பாலகா உள்ளனர். எதிரே அழகிய நந்தி பலிபீடங்கள் உள்ளன. சுவாமி சிறிய வோடு திருமேனியோடு விளங்குகின்றார். அம்பாள் அழகிய பந்தர் திருவுருவுடையவர் அருநைலம் கனிந்த திருநோக்கினர்.
ஆனந்த விகடனில் திரு. பரணீதான் திருத்தலப் பெருமையில் நாலூர் பற்றி வெளியிட்டவை:
திருச்சேறையிலிருந்து குடவாசலை செல்லும் பாதையில் இரண்டாவது கிலோ மீட்ட நாலூர் என்ற சிற்றூர் இருக்கிறது. அங்கிருந்து அரை கிலோமீட்டர் கிழக்கில் நாலூர் திருமயானம் என்ற திரும் திருத்தலம் இருக்கிறது. குடவாசலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் வடக்கில் உள்ளது. அது திருமெய்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. சோழர் சில காலத்தில் இவ்விரு தலங்களும் இணைத்த பின் ஊர்களாகவே திகழ்ந்திருக்கின்றன. பிரம்மதேயமாக சதுர்வேதி மங்கலமாக அறம் வளர்த்த அந்தணர்கள் மானியங்கள் பெற்று வாழ்ந்த ஊர்களாக இவை சிறப்புப் பெற்றிருக்கின்றன. அந்தணர்களுக்குத் தானமாக அளித்த ஊர்களுக்குச் சதுர்வேதி மங்கலம் என்று பெயர். திருஞானசம்பந்தப்பெருமாள் இவ்விரு தலங்களையும் இணைத்தேப் பாடியிருக்கிறார். குட வாயிற் கோட்டத்துடன் இணைந்த நாலூர், சரித்திரப் புகழும் பெற்றுள்ளது. வேத சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஒரு புலமை பெற்றவராகவும், முதலாம் குலோத்துங்க சோழனின் சிறந்த படைத்தலைவனாகவும் விளங்கிய பிரமாதிராஜன் என்ற ஞானமூர்த்திப் பண்டிதன் பிறந்த ஊர் திருநாலூர் ஆகும்.
திருநாலூரில் இருப்பது பலாசவனேச்வரர் ஆலயம் அம்பாள் பெரியநாயகி. கஜபிருஷ்ட விமானம் சுயம்பு தன் மேற்குபகுதி பலாப்பழம் போன்று முள்ளு முள்ளாக இருக்கிறது. தல விருட்சம் பலாமரம். பிலாசவனம் என்றால் புரசுமரக்காடு. பிலாசவனநாதர் கிழக்கே பார்த்து எழுந்தருளியிருக்க, அம்பாள் தெற்கே நோக்கி திருச்சந்நிதி கொணடிருக்கிறாள். சிவபெருமான் அர்ச்சுனனுக்குப் பாசுபதாஸ்தரம் கொடுத்தருளிய புராணத்துடன் தொடர்பு கொண்ட தலம் இது.
நாலூருக்கு கிழக்கே அரை கீமீ தூரத்தில் நாலூர் திருமயானம் இருக்கிறது. மொத்தம் ஐந்து திருமயானங்கள். கடவூர் மயானம். காழிமயானம், வீழிமயானம்,கச்சிமயானம். நாலூர்மயானம். (சிவபெருமான் பிரமாவை கோபத்தால் அழித்து நீறாக்கி பின் மீண்டும் உயிர்ப்பித்த இடத்திற்கு மயானம் என்பர்)
சுவாமியின் திருநாமம் ஞானபரமேஸ்வரர் அம்பாள் ஞானாம்பிகை. தலவிருட்சம் வில்வமரம். ஒருகாலத்தில் வேத முழக்கங்கள் கலந்த யாகப்புகை வானில்சூழ தர்மமும் செல்வமும் கொழித்த ஊரின் சிறப்பை என்னென்பது முன்பு -இருந்த கோபுரம் சிதிலம் விரு அடைந்துவிட்டதால் அதை இடித்துவிட்டு மொட்டைக் கோபுரமாகக் கட்டிச் சிற்பமாடம் அமைத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் பெரிய கோயிலாக இருந்ததற்கான அடையாளங்களை அங்கே காணமுடிகிறது.
தமிழக ஊரும் பேரும் என்னும் நூலில் திரு. ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள்:
மயானம் என்னும் சுடுகாடும் ஈசனது கோயிலாகும் மூள்ளு கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை” என்று -மரம். பாடினார் மாணிக்கவாசகர். ‘காடுடைய சுடலைப் நாதர் பொடிபூசி என் உள்ளம் கவர்கள்வன்” என்று ஈசன் மேனியில் விளங்கும் வெண்ணீற்றின் பெருமையை விளக்கினார் திருஞானசம்பந்தர், இத்ததைய சீர்யை வாய்ந்த மயானங்களில் மூன்று தேவாரத்திற் பட்டுள்ளன. அவை நாலூர் மயானம், கடவூர்மயாமை, கல்வெட கச்சிமயானம் என்பன.
‘ நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச் சொல்லாதவரெல்லாஞ் சொல்லாதார் தொன்னெறிக்கே”
என்று தேவாரம் கூறுமாற்றால் நாலூர் மயானத்தின் பெருமை நன்கு விளங்கும். நாலூர் மயானம் என்னும் ஊரே இப்பொழுது திருமெய்ஞானம் என வழங்கப்படுகின்றது.
திரு S. R. பாலசுப்பிரமணியம், அவர்கள், “முற்காலச் சோழர்கலையும் சிற்பமும்” என்னும் முகப் நூலில் கூறியுள்ள கருத்துக்கள் :
நாலூர்க்கோயில் மாடக்கோயிலாகும் இக்கோயிலில் உள்ள இறைவன் ‘சம்பாரீசுவரத்துப் பெருமானடிகள்” அல்லது மகாதேவர் என்று கல்வெட்டுகளில் வழங்கப்பட்டுள்ளார். தற்போது இவர் பலாசவனநாத சுவாமிகள் என வழங்கப்படுகிறார்.
நாலூர் மயானக்கோயில் மூலத்தானத்தின் வடசுவரில் குட காணப்படும் இராசகேசரிவர்மன் கல்வெட்டு எழுத்தமைப் பாலும் புள்ளி பெற்றிருப்பதாலும் முதல் ஆதித்தன் காலத்தது என்று முடிவு செய்யத்தக்கது. எனவே இக்கோயில் முதல் ஆதித்தன காலத்திலேயே கற்றளியாக எடுப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது.
அகஸ்தீசுவரம் உடையார்கோயில் என்ற கோயில் ஒன்று இவ்வூரில் இருந்ததாக முதல் இராசேந்திர கல்வெட்டால் அறிகிறோம் இவ்வூரிலுள்ள கோவில்கள் யாவற்றிலும் பழமையானதும் முக்கியமானதும் முதல் ஆகித்தன காலத்தாகிய இத்திருமயானக் கோயிலேயாகும் இக்கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதியையுடைய ஏகதளக் கற்றளியாகும். சதுரமான கருவறையை உடையது. அதன் பக்க அளவு 131 அடியாகும். அர்ததமணடபம் கருவறையை ஒட்டி 131 அடி நீண்டுள்ளது
அரைத்தூணகள் 5 1/2 அடி உயரமுள்ளவை கிரீவமும் சிசுரமும் உருண்டையானவை, தேவகோஷ்டங்கள் கூருவறையின் மூன்று சுவர்களிலும் உள்ளன. இம்மூன்று தேவ கோஷ்டங்களும் இருமருங்கினும் பஞ்சரங்களால் அணி செய்யப்பட்டுள்ளன அர்த்த மண்டபத்தின் முகப்பின் இருமருங்கிலும் தூவார பாலகர் சிலைகள் உள்ளன. பிற்காலத்து முகமண்டபம் 40 அடி பக்க அளவு உடையதாகும் பிரகாரத்தில் காணப்படும் சூரியனின் சிதைவுற்ற சிலை ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதில் சிற்ப நுணுக்கங்களைக் காணலாம். இச்சிலை தற்போது பம்பாய் கலைத்தாபனம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது. இப்பழங்கோயில் இன்னும் வழங்கப் பழையசோழர் நாத நிற்கிறது. கலைப்பாணியை வெளிப்படுத்தி
குடவாயில் M பாலசுப்பிரமணியம் அவர்களின் சுவரில் குடவாயில் கோட்டம் என்னும் நூலில் இருந்து நாலூர் மயானத்தைப்பற்றிய குறிப்புகள் :
நாலூர், நாலூர் மயானம் இரண்டுமே சோழர் காலத்தில் இணைந்த ஒரு ஊராக இருந்தது. நாலூரில் உள்ள கோயிலின் தோற்றம் பிற்காலத் கோயில் சிறியதாக திருப்பணிகளாள் என்பதனை குறைக்கப்பட்டுள்ளது நன்கறிய இயலுகின்றது. மேலும் இத்திருக்கோயிலுக்கருகே ஒரு சிறிய மண்டபத்தில் எழில்மிகுந்த சோழர் காலக் கற்சிலைகளான ஆழியும் சங்கமமும் பெற்ற திருமால் தேவியருடன் செய்யப்பட்டுள்ளது
நாலூரில் இருந்து சற்று கிழக்காக திருமெய்ஞானம் உள்ளது. இங்குள்ள கற்றளி இவ்வட்டாரத்தில் உள்ள மிகப்பழமையான கற்றளியாகும். முதலாம் ஆகித்தனால் இத் கற்றளியாக்கப்பட்டது என்பதை இத்திருக்கோயிலின் கல்வெட்டுககளால் அறிய முடிகிறது. தற்போது ஞான பரமேஸ்வரர் என்றழைக்கப்படும் இத்திருக்கோயில் இறைவனை சோழர் காலத்து திருமயானத்து ஸ்ரீமூலந்தானத்துப் பெருமானடிகள் என்று அழைத்தனர்.
இத்திருக்கோயிலின் கருவறையின் வெளிப்புறம் திரு உள்ள கோஷ்டங்களில் எழில் மிகுந்த சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. கருவறையின் தென்புறம் தொடங்கி வழி வடபுறம் வரை மூன்று பக்கங்களிலும் 23 கல்வெட்டுக்கள் உள்ளன. முதல் ஆதித்தன் காலத்தில் இருந்து மூன்றாம் திரு இராசராசன் காலம் வரை பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டுக்கள் பல வரலாற்றுச் செய்திகளைக் கூறுவதோடு அந்நாளில் நிகழ்ந்த மூன்று முக்கிய செய்திகளை விளக்கமாக குறிப்பிகின்றன. இங்கு குறிப்பிட்ட மூன்று கல்வெட்டுகளில் ஒன்று முதல் ஆதித்தன் காலத்தது. அக்கல்வெட்டு இவன் காலத்தில் வசூலிக்கப்பட்ட அங்காடிக்கூலி என்னும் விற்பனை வரி பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சங்கள்
ஆபஸ்தம்ப மஹரிஷி வழிபட்ட தலம்.
நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பினது.
இவ்வாலயத்தில் கருங்கல் நடராசர் திருமேனி அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். ஞானபரமேசுவரர் சொருபமாகிய சிவலிங்கத்தை இக்கோயிலைக் கட்டிய ஆதித்த சோழனாகிய மன்னன் நின்ற நிலையில் வணங்குவதையும். அவன் மனைவி அடிபணிந்து வணங்குவதையும் இத்திருக்கோயிலில் காணலாம். இத்திருமேனிகளுக்கு நாடோறும் வழிபாடு நடைபெற்று வருகின்றது. விஷ்ணு வழிபட்ட அடையாளத்திற்குச் சான்றாக விஷ்ணுவின் திருமேனி சுவாமியின் மூல ஸ்தானத்தின் மேற்புறத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ப்ரம்மாவின் திருமேனி வடக்குப்புறத்தில் உள்ளது. அதற்கு நாடோறும் வழிபாடு நடைபெற்று வருகின்றது. மற்றைய ஆலயங்களில் பிர்மாவிற்குத் திருமேனி இருப்பது அரிது ஆதலால் இவ்வாலயத்தில் அமைந்துள்ள பிர்மாலின் திருமேனி போற்றுவதற்கும் ரடங்கு வழிபாடு செய்வதற்கும் சிறந்ததாம்.
இவ்வாலயத்தில் அமைந்துள்ள துர்க்கையின் திருமேனி மிகவும் கலைநலம் கொண்டு விளங்குகின்றது. சுற்று வட்டார மக்களால் சக்தி வாய்ந்த அம்மனாகப் பாராட்டப்படுகின்றது. சனிமூலையில் புதிதாக நவக்கிரசு மண்டபம் நிர்மானிக்கப்பட்டுத் திருக்கோயில் பொலிவுடன் உள்ளது.
செவிவழிச்செய்திகள்
4-வது பிர்ம பட்டம் முடிந்த இடம் நாலூர் மயானம் என்று அழைக்கப்பட்டது. வீடுகள் எல்லாம் முன்னர் கோவிலின் உள்ளேயே அமைந்துள்ளமைக்குரிய ஆதி சுவடு தெரிகிறது. குறிப்பாக ஞான தீர்த்தம் உள்ளே அமைந்து இருந்துருகின்றது. இன்னும் தேரடித்திடல் என்ற பகுதி அப்போது தேர்நின்ற இடத்தை நமக்கு நினைவூட்டுகின்றது.