Karpagambal sametha Kapaleeswarar, Mylapore
Sthala puranam and temple information
The suburb of Mylapore in Chennai is perhaps best known for this temple for Siva as Kapaleeswarar, together with Parvati as Karpagambal.
Brahma was conceited that he too, like Lord Siva, had five heads. Once, he went to Kailasam to pay his respects to Lord Siva. Noticing his approach from a distance, Parvati assumed it was Her Lord Siva – with the five heads – and without looking at who it actually was, started washing the visitor’s feet, assuming it was Her husband. This added to Brahma’s pride and ego. BSthala puranam and temple informationut the all-knowing Siva realised this, and plucked Brahma’s fifth (upward facing) head. (This puranam is associated with several temples, including the Brahma Sira Kandeeswarar Siva temple in Kandiyur, the nearby Hara Saabha Vimochana Perumal temple, and the Uthamar Koil temple near Trichy.) Brahma came and worshipped at this temple as atonement, after which he was also restored with his powers of creation. The name of the moolavar here derives from Kapala (head or skull, ie representing Brahma’s fifth head).
Once, Lord Siva was giving upadesam to Parvati, on the panchakshara matram. However, a peacock came by, distracting Parvati. As a result, She was born on earth as a peahen. She, however, requested that such a birth be in Myilai. Siva allowed this, and She was born here, and ceaselessly worshipped Lord Siva at this temple. Pleased by this, Siva Himself came down here to bless Parvati and take her back to Kailasam.
Mylapore is an evolution of Myilai, which derives its name from Mayil (peacock) and the story of Parvati worshipping at this temple. The local saying is “Kailaye Myilai, Myilaiae Kailai”, that is to say, Kailasam is Myilai, and Myilai is as good as Kailasam, from a worship and prominence standpoint.
Mylapore (or Myilai) is also the avatara sthalam as well as the mukti sthalam of Vayilar Nayanar, one of the 63 Nayanmars in Saivism. The Nayanar is duly honoured in this temple by way of a shrine dedicated to him, in the temple’s Tevaram Mandapam.
Mylapore is also the birthplace of the Tamil saint and philosopher Tiruvalluvar.
Sivanesan Chettiar had a young daughter named Angam Poompavai, who died of snake bite. At that time, the Saivite bhakti saint Sambandar was touring this region on his pilgrimage. Knowing of this, Chettiar kept his daughter’s mortal remains, and pleaded with Sambandar when the saint came this way, to resurrect his daughter. Moved by the Chettiar’s love for his daughter and his pleas, Sambandar sang a pathigam on Siva as Kapaleeswarar, listing out the various beautiful festivals, and imploring the Lord on how the young girl could miss these, even at such a young age. Upon its conclusion, the girl was miraculously brought back to life. One of the first shrines in the temple from the eastern entrance is for Sambandar, and a vigraham of Poompavai is also enshrined here.
Interestingly, after the resurrection of Poompavai, Sivanesan Chettiar offered her hand in marriage to Sambandar. But the child saint refused, indicating that since he had caused her to be reborn, his position was to be likened to that of a father to her.
In addition to Sambandar’s pathigam here (making it a Paadal Petra Sthalam), this temple also features in one of Appar’s pathigams, but in passing reference, as Appar never visited here.
Sukracharya – the preceptor of the asuras – is said to have worshipped at this temple, but that is perhaps more relevant to the Velleeswarar temple located to the south of the Kapaleeswarar temple. Nonetheless, this story continues to be associated with this temple, and so the place is also called Sukrapuri.
A lesser-known Ramayanam connection to this temple is that Rama is said to have worshipped here on the way to Lanka.
Arunagirinathar has sung on Murugan at this temple, in his Tiruppugazh. This is also regarded as one of the places where Murugan received his Vel (spear) from Parvati, and for this reason, Murugan here is depicted as Singaravelar.
The fact that this temple was present when Sambandar visited, means that the temple existed in at least the 7th century if not earlier. Sambandar’s Poompavai Pathigam, and Arunagirinathar’s Tiruppugazh verse, clearly suggest that this temple was located by the seashore. It is believed that the original structural temple was a Pallava temple, built on the seashore (very close to where the Santhome Church is located today). The temple was later moved to its current location somewhere in the 16th century, and rebuilt entirely, by the Vijayanagara dynasty. The current location is also consistent with the agamic descriptions and requirements relating to relocation of a temple, which therefore suggest that the original location should also have been as estimated.
Interestingly, Mylapore is also referred to in the works of Ptolemy, the Roman mathematician, astronomer, astrologer, and geographer, who visited these parts in the second century CE. His writings talk of Maillarpha, a port settlement.
Unlike other temples, the layout here is a bit different. While the temple is west-facing (that is to say, the moolavar faces west), the main gopuram is the 120-foot tall eastern raja gopuram. The temple’s tank is outside the western entrance, which is marked by a much smaller gopuram. This gopuram is, in theory, the main entrance, as it is flanked by separate shrines for Karpaga Vinayakar and Murugan. However, most devotees enter the temple from the east.
As one does so, the first shrine is that of Narthana Vinayakar. Then as one proceeds in a clockwise direction, there is a shrine for Siva as Annamalaiyar. Unnamulai Amman faces south but due to the southern wall, the authorities have installed a mirror through which to view Amman. Further on, on the left is the Tevaram Mandapam, to the left of which are shrines for Sambandar and Vayilar Nayanar. On the right is the shrine for Murugan as Singaravelar, flanked by Valli and Deivanai.
Then on the western wall is a shrine for Arunagirinathar, followed by the dhwajasthambam and bali peetham, and then the main Nandi. To the left is the shrine for Sambandar with Poompavai in worship. On our right is the maha mandapam, housing the west-facing sanctum for Kapaleeswarar and the south-facing Amman shrine. As one comes further around the temple, on the right is the sthala vriksham (punnai maram) along with Siva as Punnaivananathar. Then on the north-east corner is the Sani shrine, and to the right, facing east, are shrines for Siva as Sundareswarar and Jagadeeswarar, and also the Navagraham shrine.
The temple is most famous for its 10-day Panguni Brahmotsavam festival, held annually in the Tamil month of Panguni (March-April). The festival has several fascinating elements, and is marked by two daily processions (once in the morning, and another in the night, which typically concludes around sunrise) by the ustsava murtis. The procession of the 63 Nayanmars (Arupathumoovar), Adhikara Nandi and Rishabha Vahanam (Velli Vidai Vahanam) are some of the key parts of this festival, which ends with the Tirukalyanam on the final day, depicting the marriage of Siva and Parvati. (See below for some videos from the 2023 Adhikara Nandi procession.)
கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர், மயிலாப்பூர்
அமைவிடம் :
மயிலாப்பூர் தற்போதைய சென்னை மாநகராட்சியின் ஓரங்கமான மயிலாப்பூரிலுள்ளது இத்தலம். சென்னை நகரின் நடுவில் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. ஏராளமான நகரப்பெருந்துகளும் , மின்சார ரயில்களும் சென்றுவர உள்ளன. வெளியூரிலிருந்து இத்தலத்திற்கு வரவேண்டுமானால் , பேருந்து , ரயில் அல்லது விமானத்தின் மூலமாக சென்னை நகருக்கு வந்து , அங்குள்ள இத்தலத்திற்கு வரலாம்.
கிழக்கே பார்த்தவாறு அமைந்திருக்கும் நடுத்தர நீள அகலம் உள்ள கோயில். ஏழு நிலை ராஜகோபுரம் உள்ளது. ஏராளமான சிற்பங்கள் கோபுரத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. கிழக்கு வாயில் வழியே உள்நுழைந்ததும் நர்த்தன விநாயகர். அடுத்து வலமாக வந்தால் இருப்பவர் அண்ணாமலையார். பின்னர் இடப்பக்கமாக அன்னதானக் கூடங்கள் மற்றும் மண்டபங்கள் வாயிலார் நாயனார் மற்றும் பழனி முருகன் சந்நிதி. வலப்பக்கத்தில் முருகன் சந்நிதி உள்ளது வள்ளி தெய்வானையுடன், மிக அழகிய மூர்த்தம். முருகனை வழிபாட்டு வெளியே வந்தால் நேரே தெரிவது கற்பகாம்பிகையின் சந்நிதி. 56 சக்திபீடங்களில் ஒன்றாகும் இத்தலம். நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் அம்பிகை. எப்போதும் கூட்டமாக காணப்படும் சந்நிதி இது. அம்பிகை தெற்கு பார்த்தவாறு உள்ளார். அம்பிகையை தரிசித்து வெளியே வந்தால் மேற்கு பார்த்தவாறு காணப்படுகிறார் மூலவர் கபாலீஸ்வரர். அழகுற காணப்படும் இவரைச் சுற்றி பிரகாரம் ஒன்று உள்ளது. அதனில் கோகேஷ்ட மூர்த்தங்கள் , சபாபதி , அறுபத்து மூவர் உற்சவ விக்கிரகங்கள் , பைரவர் , சன்டேசர் , சூரியன் , தக்ஷிணாமூர்ததி , 63 நாயன்மார்களின் மூலவர்கள் , சோமாஸ்கந்தர் ஆகியன உள்ளனர். நிறைவான தரிசனம். ஸ்வாமியை தரிசித்து வெளியே வந்தால் நந்தியெம்பெருமான், அருணகிரிநாதர், ஞானசம்பந்தர் ஆகியோர் உள்ளனர். இன்னும் சற்று வலமாக வந்தால் , புண்ணை வன நாதர். இங்கு, தலபுராணத்தில் சொல்லப்படும் மயிலான அம்பிகை சிவலிங்கத்தை வழிபடும் காட்சி உள்ளது. பக்கத்தில் பசு மாடம். அடுத்து நேரே, மேற்கு பார்த்தவாறு இருப்பது சனிபகவானின் தனிச் சந்நிதி பின்னர் ஜெகதீஸ்வரர், நவக்கிரகங்கள் மற்றும் சுந்தரேஸ்வரர்.
கோயிலைச் சுற்றி நான்கு மாட வீதிகள் உள்ளன. கோயில் மதில் சுவரை ஒட்டியே பல இடங்களில் வீடுகளும் கடைகளும் கட்டப்பட்டுள்ளன. அதிகப்படியான கூட்டம் வருவதால் கோயில் மற்றும் குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சற்று சுகாதாரக் குறைவாகவே உள்ளன. பெரிய குளம் கோயிலுக்கு மேற்க்கே உள்ளது. மீன்கள் நிறைய உள்ளன. குளத்தின் மேற்கு கரைதான் மெயின் பஸ் நிறுத்தம். அதனாலேயே இந்நிறுத்தம் மயிலாப்பூர் குளம் என்றழைக்கப்படுகிறது. கோயில் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. அலுவலகம் வடக்கு மாட வீதியில் ஒரு வாயிலும் , கோயிலுக்குள் ஒரு வாயிலும் கொண்டுள்ளது.
அம்பிகை மயிலாக வழிபடுதல் :
ஒரு முறை கயிலாயத்தில் ஈசன் உமையவளுக்கு ஐந்தெழுத்தின் மகிமையை ஓதிக்கொண்டிருந்தார். பின்னர் திருநீற்றின் பெருமையையும் ஓதவிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு அழகான மயில் , தோகை விரித்து நாட்டியமாதலானது. அது கண்ட அம்பிகை , உபதேசத்தை மறந்து மயிலின் நாட்டியத்தில் லயிக்கலானாள். அது கண்டு கோபம் கொண்ட ஈசன் , அம்பிகையையின் மேல் கோபம் கொண்டு , நீ மயிலாக பிறக்கக்கடவது என்று சாபமிட்டார். அவ்வாரே அம்பிகையும் மயிலாக மாறினாள். தனது தவறுணர்ந்த அம்பாள் , ஈசனிடம் சாப விமோசனத்திற்கு என்ன வழி என்று கேட்டவே , ஈசன் அதற்கு நீ பூலோகத்திற்குச் சென்று எம்மை நினைத்து தவம் புரிவாயாக, நான் உனக்கு முடிவில் காட்சி தந்து ஏற்றுக்கொள்வான் என்று கூறினார். அவ்வாறே உமையும் பூலோகத்தில் மயிலாக அலைந்து திரிந்தவாறு தவம் செய்ய நல்ல இடம் தேடிக்கொண்டிருந்தாள்.அப்போது தற்போதைய தலம் இருக்குமிடத்திற்கு அருகில் வரும்போது தவம் செய்ய ஏற்ற சூழல் மற்றும் இடம் இருப்பதாக தோன்றவே, புன்னைவனமாக இருந்த தலத்தில் கடுந்தவமேற்கொண்டாள். தவத்துக்கிணங்கிய ஈசனும் தேவிக்கு காட்சி தந்து அம்பிகைக்கு சாபவிமோசனமளித்து கரம் பற்றினார் என்று புராணம் கூறும்.
பூம்பாவை :
மயிலாப்பூரில் சிவநேசன் என்று ஒரு பெரும் வணிகர் இருந்தார்.அவருக்கு பூம்பாவை என்ற அழகான பெண் ஒருத்தி இருந்தாள். பருவ வயதை அடைந்து மிக்க அழகுடன் விளங்கினாள் பூம்பாவை. ஞானசம்பந்தரைப் பற்றி கேள்விப்பட்டிருந்த அக்குமரி , மனதே அவரை தன் மணாளனாக வரித்துவிட்டிருந்தாள். அவ்வாறிருந்த பூம்பாவையை ஒருநாள் நந்தவனத்தில் பூப்பறித்துக் கொண்டிருக்கும்போது, சர்ப்பம் ஒன்று தீண்டி உயிரிழந்தான். மனமுடைந்த சிவநேசர் , எப்படியும் பூம்பாவையின் அஸ்திக்கலசத்தை பாதுகாத்து சம்பந்தர் வரும்போது ஒப்படைத்துவிடுவது என்று உறுதிபூண்டார். அவ்வாரே திருஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளியபோது , பூம்பாவையின் எலும்புகளையும் , சாம்பலையும் காட்டி நடந்ததைக் கூறினார். அதுகேட்ட சம்பந்தர் மனமுருகி , ஈசனை நோக்கி பதிகம் பாட , எலும்பாக இருந்த பூம்பாவை மீண்டும் பெண்ணாக உருப்பெற்று வந்தால். அதுகண்டு மிக்க மகிழ்ச்சிக் கொண்ட சிவநேசர் சம்பந்தரிடம் அப்பெண்ணை மணந்துகொள்ளுமாறு கூறினார். அதற்கு சம்பந்தர் , பூம்பாவைக்கு உயிர்கொடுத்தமையால் தான் அவளுக்கு தந்தை ஸ்தானத்தில் இருப்பதாகவும் அதனால் அவளை மணந்துகொள்ள இயலாது என்று மறுத்தார். பூம்பாவையும் அவள் குடும்பத்தினரும் பின்னர் ஈசனை நினைத்து வழிபாட்டு தங்கள் வருங்காலத்தை நடத்தினர் என்று வரலாறு கூறும்.
அப்பர் மற்றும் சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
இடரினும் தளரினும் எனதுரு நோய்
தொடரினும் உன் கழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதோடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
மட்டிட்ட புன்னையங் கானல் மடமையிலே
அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப்பொலிவு கண்டாரத்தால்
உண்மையாம் எனின் உலகர்முன் வருகென உரைப்பார்
– சம்பந்தர்
குயிலொத்திருள் குஞ்சி கோக்கோத திருமால்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சால் மயிலைத்
திருப்பி புன்னையங்கானல் சிந்தியாயாகில்
இருப் பின்னை தாங்காத திளைத்து
– ஐயடிகள் காடவர்கோன்
நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் அவதரித்த தலம். அறுபத்துமூவர் மிகவும் விசேஷமாக இங்கு கொண்டாடப்படுகிறது. பிரதோஷம் மிகவும் சிறப்பாக நடக்கிறது. 300 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தலம் தற்போது சாந்தோம் எனப்படும் கடற்கரையையொட்டிய கிறிஸ்துவ சர்ச் இருக்கும் இடத்தில் இருந்தது. அது வெள்ளையர்களால் இடிக்கப்பட்டது. பின்னர் அது தற்சமயம் இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. H.D ளோயி என்பவர் எழுதியுள்ள சென்னை சரித்திர நூலில் , கிபி 1672 இல் துருக்கியரோடு நடைபெற்ற போரில் , பிரெஞ்சு சேனைகள் தற்போதுள்ள கோயிலின் பிரகாரத்தில் ஒளிந்துகொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.