Soundharanayagi sametha Swarnapureeswarar, Aaththur
Sthala puranam and temple information :
There are several places in Tamil Nadu named Aththur (or variants of that spelling). This place is located between Manalmedu and Pandanallur, close to the banks of the Manniyaru river.
In ancient times, this place used to be called Mantharaivanam, due to the sthala vriksham here being the Mantharai (Bauhinia Variegata) and the place itself was a forest of those trees. There are several interesting sthala puranams associated with this temple. Siva here is also called Mantharavaneswarar.
Karikala Chola is said to have come to this place with two dogs. One of the dogs started sniffing around a mantharai plant (located adjacent to the Dakshinamurti shrine inside the temple), and circling it repeatedly. Intrigued by this behaviour, the king had the place dug up, and found a Lingam under the plant. The king realised that the dog had brought him to this particular spot only to find the Lingam, and so he had it brought out and installed here, and then built the first temple at this place.
Kayarkanni was a young girl in the village, from a Vaishnavite family, but a Siva devotee who insisted on marrying only the Lord. Her parents, also devotees of Siva, worshipped here to ensure she got married into a good family. They heard a voice telling them to get her married to the next person who came asking for her hand. The following day, an old man came to their home, and asked for the girl’s hand in marriage. Trusting Siva’s voice they had heard, the parents agreed, but wanted to ensure their daughter was safe. Once the wedding was over, they followed the departing couple, who reached this temple and then, suddenly, disappeared. To the surprise of the parents, they instantly reappeared as Natarajar and Sivakami Amman. Needless to say, this temple therefore becomes a prarthana sthalam for those seeking to get married, who pray to Siva and Amman here, by placing the horoscope of the person at the feet of the deities, on a full moon day, and taking it back with Their blessings.
Connected with this sthala puranam, the custom at this temple is that a family of Vaishnavites take Natarajar out in procession. This puranam is also the reason one of the Ammans here is named Kayarkanni.
Murugan and Manniyaaru
Murugan came here and worshipped Siva, but found there to be no temple tank. So he used his spear (Vel) to draw a line in the sand, which turned into a river, and later named Subrahmanya Nadi. In recent years, this river has come to be known as the Manniyaru river (today, it is a distributary of the Kaveri river). Water from this river is said to have come near the temple and settled as a pool, which came to be called the Siva Teertham.
A frog (mandukam in Sanskrit) lived in the Siva Teertham tank of this temple. Once, a snake got hold of the frog and was about to devour it, when the frog cried out to Siva and Abhayambigai Amman for protection, saying it was living in Siva’s water all these years. At Amman’s instructions, the frog uttered the panchakshara mantram, and instantly the snake let go of it. Siva took the snake and wore it around His neck as an ornament! On the southern koshtam wall is a panel titled Mandukam, as a reminder of this. the temple’s tank is also called Manduka Teertham. Due to this puranam, this temple is regarded as a naga dosham nivritti sthalam.
It is believed that our ancestors, taking the form of Nandikeswarar, worship Siva here during pradosham time.
Interestingly, there is a temple for Sukhavasi Perumal temple located nearby, in the village of Kesingan. Perumal there, together with His army, is said to have sought the blessings Siva here, and gained strength to overcome the asuras, in one of His many avatarams. Celebrating Vishnu’s victory is the murti of Perumal on the western koshtam, behind the garbhagriham. This also indicates that this is an ancient temple since the practice of having Lingodhbhavar or Ardhanareeswarar installed at that spot is a relatively recent practice.
Another specialty in this temple is the Swarna Bhairavar, unusual in that He is seen with two dogs instead of one. This is probably connected to the story of Karikala Chola as above.
This is a Vaippu Sthalam in the Tevaram, finding mention in one of Appar’s pathigams.
The structural temple we see today is 10th or 11th century Chola, though according to the sthala puranam mentioned earlier, the original temple was built during the time of Karikala Chola. Many of the murtis here are fascinating and intricately carved, and the architecture here is splendid as well. There are several inscriptions here, dating back to the medieval Chola period.
சௌந்தர நாயகி சமேத ஸ்வர்ணபுரீஸ்வரர், ஆற்றூர்
தலபுராணம் :
ஆற்றூர் என்பது தஞ்சை மாவட்டத்தில் மாயூரத்திற்கு வடக்கே மண்ணியாற்றின் தென்கரையில் விளங்கும், சிறந்ததொரு சிவஸ்தலமாகும். மந்தாரம் என்ற வைப்புத் தலம் இதுவேயாம். திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தில் இக்குறிப்பைக் காணலாம்.
தலவிசேடம் தேவிக்கு உணர்த்திய படலம் :
கயிலாயத்தில் சிவபெருமான் உமாதேவியாரோடு வீற்றிருக்கும் பொழுது ஒரு சமயம், தேவியார் சிவபெருமானை நோக்கி, “தேவரீர், இக்கயிலாயத்தினும் சிறந்ததாக விரும்பி ஆற்றூரில் வீற்றிருப்பதற்குக் காரணம் யாது?” என்று வினாவினார். அதற்குச் சிவபெருமான் விடையருளலானார்
“கன்னலும் பாகும் தேனும் கனியும் கற்கண்டும் பாலும் இன்னமிழ்தமும் உட்கைப்பத் தமிழென இனிக்கும் சொல்லாய்! கேள். முன் காலத்தில் நாவலந்தீவிலுள்ளவர்கள் பல பாவங்களைப் புரிந்தமையால் வருந்திய பூமிதேவி நம்மிடம் வந்து குறையிரந்தனள். அவளுடைய வேண்டுகோளுக்கிணங்கி நாவலந்தீவில் நாம் பல மூர்த்தி தலம் தீர்த்தங்களாக விளங்கி அவற்றை வழிபடுவோர்க்கு இன்பம் வழங்கிவருகின்றோம். அங்ஙனம் நாம் அமர்ந்த தலங்கள் பலவற்றுள்ளும் மிகவும் ஏற்றமிக்கது ஆற்றூர் ஆகும். அங்கே நாம் என்றும் பிரியாமல் வாழ்வோம். இக்கயிலாய கங்கையே ஆற்றூரில் நமது சந்நிதியில் ஒரு புட்கரணிவடிவில் அமைந்திருத்தலால் அதனையும் கயிலாய கங்கை என்றே வழங்குவர்; அது சிவதீர்த்தம் என்றும் கூறப்படும். தென்பாலில் பழவாறும் வடபாலில் மண்ணியாறும் ஓடுகின்றன. இம்மூன்றும் நமது மூன்று கண்களைப் போல்வன. ஆதலால் அத்தலமும் அங்குள்ள மந்தார நீழலும் எல்லாவற்றிலும் சிறந்ததாம்.
மண்டூகம் முத்தியடைந்த படலம் :
கயிலாய கங்கை என வழங்கும் சிவதீர்த்தத்தில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது. ஒரு மகாசிவராத்திரியன்று பெருமழை பெய்தது. அஞ்சிய தவளை அத்தீர்த்தத்தின் கீழ்கரையிலிருந்த ஒரு நாவல் மரத்தின் வேரை அடைந்தது. அங்கே பசியால் வருந்தியிருந்த ஒரு பாம்பு அதனை விழுங்கி விட்டது. நெடுநாள் சிவதீர்த்தத்தில் வாசஞ்செய்ததன் பயனாக அத்தவளை உயிர் நீங்கும் தருணத்தில் அஞ்சனாட்சியம்மை எழுந்தருளி வந்து பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்க அஃது உடனே சிவசாரூபம் பெற்று அந்தப் பாம்பையே ஆபரணமாகப் பூண்டது. பிறகு அத்தீர்த்தத்தில் மூழ்கிப் பெருமானையும் அம்பிகையையும் வணங்கி, விமானமொன்றில் ஏறிச் சிவலோகம் சென்று சிவகணத்தைச் சேர்ந்து விளங்கியது.
சொன்னயான நிரோதனபுரப் படலம்
சோழநாட்டை ஆண்டுவந்த சோழேந்திரன் என்னும் அரசன் ஒரு நாள் யானையின்மீதேறி அமைச்சர் முதலியோர் சூழத் தன் நாட்டின் எல்லையைப் பார்த்துவரப் புறப்பட்டான். நாடுகளிலுள்ள குடிகளது குறைகளை நீக்கி, பின்பு காட்டுக்குள் புகுந்து அங்குள்ள வளங்களையும் அறிய எண்ணி அதனுட் களிற்றைச் செலுத்தினான். அக்களிறு அதனுட்செல்ல இயலாமல் நின்றுவிட்டது. அதனைக்கண்ட அரசன் அக்காட்டுக்கு மேலே பறந்து செல்வதற்குரிய பொன் விமானம் ஒன்றை அமைப்பித்து அதன்மீதமர்ந்து அக்காட்டின் மேலே செல்ல, அங்கே ஒரு மந்தார மரத்தருகே செல்கையில் அவ்விமானம் தடைப்பட்டு நின்றுவிட்டது. பல்வகையில் முயன்றும் அவ்விமானம் நகராமையின், மன்னன் சிவபெருமானை எண்ணி, “எந்த மரத்தினடியில் இவ்விமானம் தடைப்பட்டு நின்றதோ, அத்தருவின் அடியில் ஏதேனும் அதிசயம் இருக்கவேண்டும்” என்று கூறி, கீழிறங்கிப் பார்க்கையில், அத்தருவின் அடியில் ஒரு புற்று இருப்பக்கண்டாள். அதனைத் தோண்டிப் பார்க்கையில், அங்கே சிவலிங்கப்பெருமான் எழுந்தருளியிருப்பதைக் கண்டு மன்னன் மனம் உருகி வணங்கினான்.
“கண்டனன் அன்பு பொங்கிக் கரைகடந்தெழ உவப்புக்
கொண்டனன் சிரமேற் செங்கை குவித்தனன் கொடியபாசம்
விண்டனன் பிறவியேழும் வீட்டினன் அயன்மால் காணா
அண்டனன் றெனக்குக் காட்சி அருளிய திறத்தா லென்பான்.”
பிறகு அங்கே திருக்கோயில் அமைக்க மன்னன் எண்ணினான்; காட்டையழித்துப் பலவகை மண்டபங்களோடு அழகிய கோயிலை அமைத்துப் பல மூர்த்தங்களைப் பிரதிட்டை செய்வித்தான்; அன்றியும் பல திருவீதிகளை உண்டாக்கி நித்திய நைமித்திகங்கள் நடைபெறச் செய்வித்தான். நாள் விழா, மாதவிழா முதலியன நிகழ்வுற்றன. தன்னுடைய சொன்னயானத்தை (பொன் விமானத்தை) தடுத்தருளிய காரணத்தால் சிவபெருமானுக்கு சொன்னயான நிரோதர்
(நிரோதர்- தடுப்பவர்) என்னும் திருப்பெயரையும், இத்தலத்திற்குச் சொன்னயான நிரோதனபுரம் என்னும் திருப்பெயரையும் சூட்டினான். பிறகு அத்தலத்திற்குத் தென் கிழக்கே ஒரு மாளிகையை அமைத்து அங்கே இருந்து பலருக்கும் கல்யாணம் (பொன்) வழங்கி வரலானான்; அதனால் அன்று முதல் அவ்விடத்திற்குக் கலியாணசோழபுரம் என்னும் பெயர் வழங்கலாயிற்று.
கயற்கண்ணியார் திருமணப் படலம் :
சொன்னயான நிரோதனபுரமாகிய ஆற்றூரில் நெறி முறை தவறாது வாழ்ந்த அந்தணர்களுள் மிகச்சிறந்த ஓர் அந்தணருக்கு முற்பிறவிகளில் செய்த தவப்பயனால் ஒரு புதல்வியார் அவதரித்தார். அந்தணரும் அவர் மனைவியும் அப்புதல்விக்குக் கயற்கண்ணி என்னும் திருப்பெயரிட்டுப் பாராட்டிச் சீராட்டி வளர்த்து வரலாயினர். தம் பெற்றோருவப்ப கயற்கண்ணியார் வளர்ந்து பேதைப் பருவம் அடைந்தனர்.
அக்காலத்தில் கயற்கண்ணியாருக்குப் பிரபஞ்சத்தினிடத்தில் விரக்தியும், பதியாகிய சிவபெருமானிடத்தில் விருப்பும் மேலோங்கின. அதனால் உணவு, அணிகலன், பட்டாடை ஆகியவற்றை நீங்கிச் சித்திரத்தினைப் போல இருந்துவரலானார். அதனையறிந்த பெற்றோர்கள் மிக வருந்தி, “நீ ஏன் அம்மா இப்படி இருக்கின்றாய்?” என்று வினவ, கயற்கண்ணியாரும், “நான் மந்தாரவனத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானையே மணஞ்செய்து கொள்ள நினைத்திருக்கின்றேன். நீவிர் என்னைத் துன்புறுத்தாதீர்கள்” என்றார். அதனைக்கேட்ட தாய், “மகளே, உனக்கு என்ன வந்துவிட்டது !” என்று புலம்பினாள். தந்தையார் தனது அருமைமகளைப் பார்த்து ,”மகளே, யாராகிலும் அறிதற்கரிய பரம்பொருளாகிய சிவபெருமான் உன்னைவந்து மணந்துகொள்வாரா? நான் இமவானல்லேன். உன்தாயும் மேனையல்லள். நீயும் உமாதேவியில்லை. இங்ஙனம் இருப்ப, அவர் உன்னைவந்து மணப்பது எங்ஙனம்? மந்தாரவனேசரைப் பணிந்து வேண்டுவோர் இந்திரபதவி, பிரமபதவி, விஷ்ணுபதவி முதலியவற்றைப் பெறும்படி அருள்புரிக என்று வேண்டுவதைக் கண்டிருக்கிறேன். எம்மை மணம் புரிந்துகொள்ள வேண்டும் என்பவர்களை நான் கண்டதில்லை. சித்தி முதலியவற்றை வேண்டி இத்தலத்தில் வந்து வணங்குவோரையன்றித் திருமணம் செய்து கொண்டருள்க என்று விரும்பி வந்தவர்களை நான் கண்டதில்லை. ஆதலின், நல்ல கணவரும், நல்ல செல்வமும், நல்ல புதல்வரும் நல்லொழுக்கமும் வேண்டுமென்று மந்தாரவனேசரை வேண்டிக்கொள். அவற்றை அவர் அருள்புரிவார்” என்றார்.
தம்மைப்பெற்ற தந்தையார் கூறியவற்றைக் கேட்ட கயற்கண்ணியார், அவரை நோக்கி, “பயனில்லாத முதுமையை அடைந்தீர் ! மந்தாரவனேசர் அன்பர்களுடைய அன்பின்வழியே வருவார். இதனை அறியாமல் மயக்க அறிவால் இங்ஙனம் உரைத்தீர்” என்றுகூறத் தந்தையாரும், “இனி யாம் சொல்வது என்!” என்று நீங்கினார்.
பிறகு தாய் வந்து சிவபெருமானுடைய முரண்பட்ட கோலத்தைக்கூறி மகளுக்கு அறிவுரை வழங்கினாள். இதனைக்கேட்ட கயற்கண்ணியார், “அறிவற்றீர்! இனி, என் நிலைமையை அறியாமல் பேசுதலை ஒழிக” என்று சினந்துகூறத் தாயும் அடங்கினாள். இங்ஙனமே சுற்றத் தாரும் தமக்குத் தோற்றியவற்றைச் சொல்லிப் பயனின்றி நீங்கினர்.
கயற்கண்ணியார் சிவபிரானை நினைந்து, “எம். இறைவனே! நீர் முன்பு மதுரை மன்னன் மகளாகிய மீனாட்சியம்மையாரையும், வலையர்குலப் பெண்ணையும், மலைமகளையும் மணந்ததுபோல என்னையும் வந்து மணங்கொண்டு என் துன்பத்தை அகற்றியருள வேண்டும்” என்று வேண்டினார். பின்பு கிளி, அன்னம், நாரை முதலியவற்றை விளித்துச் சிவபெருமான்பால் தமக்குண்டான அன்பு மிகுதியால் அவர்தம் புகழ்களைக்கூறி உருகினார் . “மந்தார வனேசர் திருவருளைப் பெறுவது எப்போது !” என்று ஏசற்றுக் கிடந்தார்.
இங்ஙனம் கயற்கண்ணியார் இருத்தலையுணர்ந்த சிவபெருமான், அவரைத் திருமணம் புரியத் திருவுளங்கொண்டார். தம் கருத்தை நந்தி கணத்தார் மூலமாக எல்லாத் தேவர்களுக்கும் அறிவித்ததோடு, கயற்கண்ணி யாருடைய தந்தையார் முதலியவர்க்கும் சோழேந்திர மன்னனுக்கும் அறிவிக்கச் செய்தனர்.
அதனைக் கேட்ட அந்தணர் மிக வியந்து யாவருக்கும் இச்செய்தியைத் தெரிவித்தனர். பிறகு அவர் தம் மனைவியாரோடு “இப்பெண், தெய்வமேயன்றி மானிட மகளல்லள். நம் மகள் என்று நினைத்தல் குற்றம்” என்று கூறித் தம் புதல்வியார்பாற் சென்று, “நாங்கள் தெரியாமற் செய்த குற்றமனைத்தையும் பொறுத்தருள வேண்டும்” என்று முகமன் கூறித் திருமணத்திற்குரியவற்றைச் செய்யலாயினர். சோழேந்திரனும் நகரை அலங்கரித்து ஆவன செய்யலானான்.
சிவபெருமான் ஒரு பிரமசாரி உருவேற்று, தேவர் புடை சூழத் தை மாதத்தில் வெள்ளிக்கிழமை யன்று எழுந்தருளி கயற்கண்ணியாரைத் திருமணம் புரிந்தருளினார். பின்னர் சிவபெருமான் கயற்கண்ணியாரோடு திருக்கோயிலுக்கு எழுந்தருளினார். அங்கே கயற்கண்ணியார் ஸ்ரீ அஞ்சனாட்சியம்மையாரை வணங்கி அருள் பெற்றனர். அன்று முதல் அஞ்சனாட்சியம்மைக்குரிய சிறப்பெல்லாம் கயற்கண்ணியம்மைக்கும் நிகழலாயின.
ஆற்றூர்ப்படலம் பெயர்க்காரணம் :
தேவர்களுக்குப் பகைவனாகிய சூரபன்பனை அழிக்க முருகப் பெருமான் திருவவதாரம் செய்தருளினார். சிவபெருமான் தேவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி முருகவேளுக்கு வேற்படை முதலியவற்றை அளித்து, ”சூர சங்காரம் செய்து வருக” என்று விடை கொடுத்தனுப்பினார். கயிலாயத்திலிருந்து புறப்பட்ட முருகப் பெருமான் பல சிவத் தலங்களைக் கண்டு வழிபட்டுச் சொன்னயான நிரோதனபுரம் வந்தடைந்தார். அங்கே வழிபட எண்ணிப் பக்கத்தில் ஒரு நதியை உண்டாக்க நினைத்தார். உடனே கொள்ளிடத்தின் தென்கரையிலிருந்து ஒரு நதியை உண்டாக்கி வருமாறு தம் வேலாயுதத்தை விடுத்தார். அது அங்ஙனமே செய்ய திருக்கோயிலுக்கு இடப் பக்கத்து வழியே ஒரு நதி செல்லலாயிற்று. குமரவேள் அந்நதியில் நீராடிச் சிவபெருமானுக்கும் அஞ்சனாட்சியம்மைக்கும் அத்தீர்த்தத்தால் அபிஷேகஞ் செய்து பூசித்து அருள் பெற்றுச் சென்றார். சுப்பிரமணியக் கடவுளால் உண்டாக்கப் பெற்றதால் அந்த நதி சுப்ரமணிய நதி என்று பெயர் பெற்று இக்காலத்தில் மண்ணியாறு என மருவி வழங்குகின்றது. கந்தவேளால் அழைக்கப் பெற்றமையின் கந்தகாவேரி என்ற ஒரு பெயரும் அதற்கு உண்டு. அத்தகைய புண்ணிய ஆற்றின் சிறப்பால் அத்தலம் ஆற்றூர் என்று வழங்கப் பெறலாயிற்று.
சங்கரமறையோன் முத்தியடைந்த படலம் :
ஆற்றூரில் சகேது என்னும் ஒரு அந்தணன் இருந்தான். அவனுக்குச் சங்கரன் என்னும் ஒரு குமாரன் இருந்தான். சங்கரன் வேத முதலியவற்றை முறையே பயின்று சிவபெருமானே பரம்பொருள் என்று தெளிந்தான்; திருநீற் றையும் கண்மணியையும் பூண்டு ஐந்தெழுத்தை ஓதிக் கொண்டு சிவ தலயாத்திரையை மேற்கொண்டான். இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் தாய்தந்தையருடன் அவன் தில்லையை அடைந்து, சிவகங்கையில் நீராடி நடராசப்பெருமானை வழிபட்டு மனம் உருகினான். அப்பொழுது அவனுக்குண்டான ஆனந்தத்தால் “இந்த நடனத்தை நாடோறும் தரிசிப்பேன்: அங்ஙனம் தரிசியாத நாளில் என் உயிரைவிடுவேன்” என்று உறுதி பூண்டு, ஆற்றூர்க்கு மீண்டுவந்து நாடோறும் விடியற்காலையிலெழுந்து சிதம்பரம் சென்று நடராசப் பெருமானை வழிபட்டு மீண்டும் மாலையில் ஆற்றூர்க்கு வருவானாயினான்.
இங்ஙனம் அவன் ஒழுகும் நாளில், அவனது பக்தியின் சிறப்பை வெளிப்படுத்தச் சிவபெருமான் திருவுளங் கொண்டார்; கொள்ளிடத்தில் மிக்க வெள்ளம் வரும்படிச் செய்தார். அங்ஙனம் வெள்ளம் மிகுவதை அறிந்தும் சங்கர மறையோன் மனம் சலியாமல் ஒரு புணையைத் துணைகொண்டு நீந்திக் கொள்ளிடத்தைக் கடந்து சிதம்பரம் சென்று வழிபட்டாள். அப்பொழுது மாலைக்காலம் வந்துவிட்டது. அவன் தனது ஆன்மார்த்தப்பூசையை ஆற்றூரிலேயே வைத்துவிட்டு வந்தானாதலின் மாலைக்குள் ஆற்றூர்க்குச் செல்ல இயலாதவனாகிப் பசியால் வருந்திச் சிதம்பரத்திலேயே இருந்தான்; அப்பொழுது சிவபெருமான் அருளால் சிறுதுயில் கொண்டான். அவனது கனவில் நடராசப்பெருமான் எழுந்தருளி “இன்று முதல் நீ இங்கே வந்து துன்புறுதலைத் தளர்க. நீ வதியும் ஆற்றூரிலேயே நமது திருநடனத்தைக் காட்டுவோம். நீ கண்டு இன்புறுவாயாக. மேலும்,
“செறிமலர் மந்தாரவனம் தில்லைவனத்தினு மதிகம்
எறிதிரைவண் சிவதீர்த்தம் இச்சிவகங்கையிற் சிறந்த
தறிதருமத் தலநாளும் இத்தலத்தும் அதிகம்அவட்
குறிதருசோ ழேந்திரற்காக் குலவுநட முன்செய்தோம்.”
மந்தாரவனமும் சிவதீர்த்தமும் அத்தலமும் முறையே தில்லை வனத்திலும் சிவகங்கையிலும் இத்தலத்திலும் சிறப்புமிக்கன. அங்கே முன்பு சோழேந்திரன் என்பவனுக்காக நாம் திரு நடனம் புரிந்தோம். உனக்காகவும் இப்பொழுது நடனம் புரிவோம். நீ கண்டு வழிபட்டு இன்புறுவாயாக” என்று அருளி மறைந்தனர்.
சிவபெருமான் திருவருளை யுணர்ந்து விழித்தெழுந்த சங்கர மறையோன் “சிவபிரான் திருவருள் இருந்தபடி என்னே!” என வியந்து போற்றித் தெளிந்து அப்பொழுதே ஆற்றூர் அடைந்து, சிவதீர்த்தமாகிய கயிலாய கங்கையில் கீராடி ஸ்ரீ சொன்னயான நிரோ தனரை வணங்கி,
“சயசய கங்காதர சம்போ மகாதேவபர
சயசய கேச் சருவேசசிவ சங்கரவோ
சயசய சதாசிவ தற்பர சத்தியோசாத
சயசய மந்தாரவனந் தழைத்தருளுந் தனிமுதல்வ.”
(சய- சயமுண்டாகக் கடவது. வெல்க என்பர் மணிவாசகரும்)
“போற்றி புரதகனபர போற்றி யரகரசம்பு
போற்றி நிராமயபுநித போற்றி நிரஞ்சனபரம
போற்றி நிராலம்பசிவ போற்றி நிருத்தனசுகுண
போற்றி மலர்மந்தார வனத்தமரும் புண்ணியவோ “
(போற்றி -பாதுகாத்தருள்க.)
“நம கருணைப் பிரவாக நம கருணைப் பிரகாச
நம கருணைப் பெருவடிவ நமகருணைக் காலயமே
நம வகண்ட பூரணமே நம நடன புரவாச
நம சருவ காரணமே நமவடியார் பெரும்பேறே.”
(கம- கமஸ்காரம்)
என்று துதித்தான். சிவபெருமான் அங்குள்ள திருச்சபையில் அவனுக்குத் திருநடனக் கோலங்காட்டி மகிழ்வித்தார். அதனைக் கண்ணாரக் கண்ட அவ்வந்தணன் மட்டிலா மகிழ்ச்சியில் திளைத்தான். அன்று முதல் அவன் ஆற்றூரை விட்டு அகலாமல் ஆனத்த நடன தரிசனம் செய்துகொண்டு பலவகையான திருப்பணிகள் இயற்றி வாழ்ந்திருந்து முடிவில் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தான்.
முனிவர் முதலியோர் பூசித்த படலம் :
ஆற்றூரில் சிவபெருமான் சோழேந்திரனுக்காகவும் சங்கர மறையவனுக்காகவும் திருநடனம் புரிந்தருளிய செய்தியைக் கேட்ட சில முனிவர்கள் பெருமகிழ்ச்சி யடைந்து இத்தலத்தை அடைந்தார்கள். சிவதீர்த்தத்தில் நீராடி, திருக்கோயிலை வலம் வந்து மந்தராவனேசரையும் அஞ்சனாட்சி அம்மையையும் நடராசப்பெருமாளையும் வணங்கி, வேத மந்திரங்களால் துதித்து ஆனந்தமுற்றுத் தம் இருப்பிடத்திற்கு மீண்டு சென்றனர்.
பிரமதேவர் ஒருமுறை இத்தலத்துக்கு வந்து வழிபாட்டுத் தாம் திலோத்தமையை விரும்பிய கேட்டினின்றும் விடுபட்டார்.
ஒருசமயம் திருமாலுக்கு வாகனமாகிய கருடன் இறுமாப்புற்றது. அதனை அறிந்த இடபம் தனது மூச்சுக் காற்றினால் கருடனை வருத்தத் தொடங்கியது. அப்பொழுது கருடன், சிவபிரானை எண்ணி ஒலமிட சிவபெருமான் இடபத்தைக் கூவிக் கருடனை விடுவித்தார். பிறகு பெருமான் இடபத்தை நோக்கி, “நீ தீமையொன்றும் செய்யாத கருடனை வீணாகத் துன்புறுத்திய பாவம் தீரும் வண்ணம் ஆற்றூர்க்குச் சென்று எம்மைப் பூசிப்பாயாக” என்று ஆணையிட்டனர். அங்ஙனமே இடபமும் ஆற்றூர் போந்து, மந்தாரவனேசரைப் பூசித்துப் பாவம் நீங்கப் பெற்றுப் பழைய நிலையை அடைந்தது.
இன்னும் ஐயனார், துர்க்கை, இந்திரன் முதலியவர்கள் இத்தலத்தில் வழிபட்டு நற்பயனைப் பெற்றார்கள்.
இவ்வாறு சூதமாமுனிவர் திருவாய் மலர்ந்தருளக் கேட்ட நைமிச முனிவர்கள் அகமிக மகிழ்ந்து ஆற்றூர் சென்று சொன்னயான நிரோதப் பெருமானையும் அஞ்சனாட்சியம்மையும் விதிப்படி வழிபட்டுப் பேரின்பமுற்றனர்.