Soundharanayaki sametha Abathsahayeswarar kovil, Thukkachi
Location :
Thukkachi is a small village located 15 kilometres south-east of Kumbakonam on the Nachiyar kovil – Poonthottam Road.
When Durga was tasked with killing Mahishasuran, she was surprised because from every drop of the asura that touched the earth, emerged another asura. Desperate to accomplish Her task in this time of distress, Durga sought the help of Siva by worshipping Him. In turn, He asked Her to release the Ugra Sakti of Mahakali from Her anger, who drank up every drop of blood before it could touch the earth. As a result, Durga was able to overcome Mahishasuran. However, after drinking the asura’s blood, Mahakali imbibed asuraic qualities. So, once again Durga approached Siva for help. He asked her to install a Lingam on the northern bank of the Arasilar river and worship Him. She did so, and Mahakali was brought under control.
It is believed that from time immemorial, and as a result of the sthala puranam, Durga reigns this land, and so the place was named Durgai Atchi (the rule of Durga). Over time, this has corrupted to Thukkachi. (Another slightly different version indicates the original name of the place as Durga Sakti.) Since Siva came to the rescue of Durga and Mahakali in times of distress, He is named Abatsahayeswarar.
King Vikrama Chola once suffered from leukoderma (ven kushtam, in Tamil). He prayed to Siva at this temple and was relieved of his disease.
This temple is a Tevaram Vaippu Sthalam, and features in one of the hymns of Appar.
Uniquely, the temple also houses a shrine for Adi Sarabeswarar, which is considered to be the first of three Sarabeswarar temples / shrines in the region. The temple boasts of some excellent and vibrant architecture, despite its dilapidated state. The vimanam above the garbhagriham reminds one of the Great Living Chola Temples, particularly the Airavateswarar temple at Darasuram.
சௌந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில், துக்காட்சி
இருப்பிடம் :
கும்பகோணம் நகரிலிருந்து கல் கருடசேவைக்கு புகழ்பெற்ற திருநாறையூரெனும் நாச்சியார்கோவில் வழியாக சரஸ்வதியம்மன் கோவில் அமைந்துள்ள கூத்தனூர் (பூந்தோட்டம்) செல்லும் பேருந்து வழித்தடத்தில் குடந்தையிலிருந்து 15 கி.மீ.தொலைவிலும், நாச்சியார்கோவிலிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், அரசலாறு நதிக்கரையின் வடபால் இயற்கைச் சூழலில் நான்கு வீதிகளுக்கிடையில் நடுநாயகமாக அமைந்துள்ள கம்பிரமான கற்றளி ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஆபத்சகாயீஸ்வரர் ஆலயம்.
திருக்கோயில் அமைப்பு
முன்பே இருந்த திருக்கோயில் இராஜராஜ சோழனது காலத்தில், மூலவர் ஆபத்சகாயர் விமானம், அம்பாள் சௌந்தர நாயகி விமானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் முதல் பிரகாரம், சுற்றுக் கோயில் ஆகியவைகளுடன், பின்னர், 1118ஆம் ஆண்டிலிருந்து 1136ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த விக்ரம சோழப் பேரரசனாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இங்கு துர்க்கை ஆட்சி செய்ததினால், துர்க்கை ஆட்சி எனும் பெயர் வந்தது. அப்பெயர் மருவி, துக்காச்சி என ஆகிவிட்டது. இவ்வாலயம் எழுந்துள்ள இடத்தில், முன்பு பாதிரி மரங்கள் வளர்ந்து அடர்ந்த வனமாக இருந்ததாம். அவ்வனத்தில் முனிவர்கள் பலர் மகாதேவரெனும், ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டு வந்துள்ளனர்.
விக்ரம சோழனின் வெண்தொழுநோய் நீக்கிய ஸ்தலம்.
இவ்வாலயம் இவ்வளவு பெரிதாக கட்டப்பட்டதற்கு வேறொரு கதையும் கர்ண பரம்பரையாக கூறப்படுகின்றது. அதாவது விக்ரம சோழ மன்னனுக்கு தீராத வெண்குஷ்ட நோய் வந்து அவதிப்பட்டதாகவும், அதைப் போக்க பரிகாரமாக அவர் பல சிவாலயங்களுக்குச் சென்று வந்தபோது, ஒருநாள் அவரது கனவில் ஆபத்சகாயர் தோன்றி தன்னை நாற்பத்து எட்டு நாட்கள் தவறாது வணங்கி வந்தால் வெண்குஷ்டம் மறையும் என்று சொன்னதற்கிணங்கி, மன்னனும் பாதிரிவனம் நோக்கி வருகையில் இரவாகி விடவே நடுவில் ஒரு ஊரில் தங்கிவிட்டாராம். ஆபத்சகாயேஸ்வரர் மீண்டும் மன்னன் கனவில் தோன்றி மன்னன் தற்பொழுது தங்கியுள்ள இடத்திலிருந்து ஒரு கல் தொலைவிலேயே தான் உள்ளதாக சொன்னதன்பேரில் சூர்யோதயமானதும், முதற்கண் எழுந்து நீராடி பாதிரிவனம் உறை ஆபத்சகாயேஸ்வரரை நாடி வந்து மகிழ்ந்து தினமும் ஏழு சுற்று வலம் வந்து நாற்பத்து எட்டு நாட்கள் ஈசனுக்கு உகந்த வில்வம், கொன்றை, வன்னி பத்திரம், துளசி போன்ற ஆறுவகை பத்திரங்களைக் கொண்டு அர்ச்சனை செய்து அந்த ஆறுவகை பத்திரங்களையும் தினம் காலையில் வெறும் வயிற்றில் மென்று உண்டு நாற்பத்து எட்டு நாட்கள் முடிவில் வியாதியின் குணம் தெரிய வந்ததாகவும் அதனால் இவ்வாலயத்தை சிறப்பாக புனரமைத்ததாகவும் கூறப்படுகின்றது.