Sthala puranam and temple information
Seeyathamangai is located 28km from Tiruvarur and 15km from Karaikal, on the Sannanallur-Nagore route.
This place is the avatara sthalam of Neelanakka Nayanar. One day, Neelanakkar and his wife were worshipping Lord Siva at this temple, when a spider fell on the Lingam. Instantly, his wife blew it away, which caused Neelanakkar to consider that as an act of sacrilege, and so he abandoned her. The wife, very upset, prayed to Ayavantheeswarar for pardon. Instead, the Lord appeared in Neelanakkar’s dream that night, sporting his body which had been affected by the spider’s poison, everywhere except where the wife had blown it away. Neelanakkar realized that true bhakti was greater than mechanical religious worship, and that the Lingam was more than just a stone.
It is said that even today, the Lingam has boils and spots on most of its surface. Murtis of Nayanar and his wife are in the mandapam.
There is another story associated with Neelanakka Nayanar. Once, Sambandar visited here along with Neelakanta Yazhpanar and his wife Mandanga Soolamani (also called Virali, a singer). Neelanakkar welcomed Sambandar with due honours, but considering the other two to not be of the higher caste, did not let them sleep inside his home that night, but near the sacrificial pit outside. When Neelakanta Yazhpanar and his wife approached the pit, it started to burn on its own. Neelanakkar then understood that this was through their power of devotion and bhakti, and he promptly gave up the notions of birth and caste. The following morning, Sambandar sang a pathigam which also glorified Neelanakkar, and the latter wanted to accompany Sambandar when he left. But at Sambandar’s request, Neelanakkar remained here.
This is a west-facing temple, and Brahma – who is also called Ayan – is said to have worshipped here. So the Lord here is named Aya-vantha-easwarar (the One worshipped by Brahma), and also Brahmapureeswarar. Amman has a separate shrine in a separate temple, with its own entrance, gopuram, etc. If one looks closely, one can see a third eye on Amman’s forehead! The tank opposite the temple is considered to be in two parts – Surya Teertham and Chandra Teertham.
Other information for your visit
The following Paadal Petra Sthalam and Divya Desam temples (including this temple) are located close by and it is efficient to cover them in a single visit.
Tirupugalur: Agneeswarar (and Vartamaneswarar)
Tirukannapuram: Sowriraja Perumal; Ramanathaswami;
Tiruchengattankudi: Uthira Pasupateeswarar;
Marugal: Ratnagireeswarar; and
Seeyathamangai: Ayavantheeswarar.
சீயாத்தமங்கை
அமைவிடம் :
நன்னிலத்திலிருந்து நாகை அல்லது நாகூர் செல்லும் சாலையில் திருமருகல் வந்து அதுதாண்டி கிழக்கில் ஒரு கிமீ தொலைவில் சீயாத்தமங்கையுள்ளது. அங்கிருந்து அகலன்கண் செல்லும் பாதையில் ஒரு கிமீ வடக்கு திசையில் உள்ளே வந்தால் கோயில் வருகிறது. கோயில் உள்ள இடம் கோயில் சீயாத்தமங்கை என்றழைக்கப்படுகிறது. ஊருக்கும் கோயிலுக்கும் இடையில் முடிகொண்டான் ஆறு பாய்கிறது. ஆலயத்தின் பெயர் ஹயவந்தி. சிறிய கிராமம். நன்னிலம், நாகூர் மற்றும் திருமருகளிலிருந்து நகர பேருந்துகள் உள்ளன. வெளியூர்களிலிருந்து வருவோர் திருவாரூர் அல்லது மயிலாடுதுறை வந்து அங்கிருந்து சன்னாநல்லூர் வந்து, அங்கிருந்து கிழக்கில் நாகூர் செல்லும் பாதையில் 7 கிமீக்கள்வந்தால் இத்தலத்தை அடையலாம்.
மேற்கு நோக்கிய திருக்கோயில். ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிகள் தனிக்கிகோயில்களாக, அனால் ஒன்றுடன் ஒன்று ஒட்டியவாறு மேற்கு நோக்கி அமைந்துள்ளன. இரண்டும் உயர்ந்த மதில் சுவர்களுடனும் கோபுரங்களுடனும் உள்ளன. நகரத்தார் கருங்கல் திருப்பணி. ஸ்வாமி கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. உள்ளே நுழைந்தவுடன் விசாலமான இடம். வெளிச்சுற்றில் வரும்போது சந்திரன், சனிபகவான், மதில்சூவற்றினைப் பார்த்தவாறு சப்தமாதர்கள், பைரவர், நவக்கிரகங்கள், மகாலிங்கம், விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி ஆகிய சந்நிதிகள் உள்ளன. வலம் வந்து முடித்தபின் உள்வாயில் வருகிறது. சற்றே உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. படிகளேறி உட்சென்றால், வள்ளி தெய்வானை, சுப்பிரமணியர் நால்வர், திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவி மங்கையர்க்கரசி ஆகியோர் உருவங்கள் உள்ளன. வலமுடித்து இறைவன் சந்நிதிக்குள் சென்றால் திருநீலநக்கர், அவர் மனைவி மற்றும் நடராஜர் உற்சவத்த திருமேனிகள் உள்ளன.
கோஷ்ட மூர்த்தங்களில் ரிஷபத்தின் தலை மீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் வேறெங்கும் காணமுடியாதது. தக்ஷிணாமூர்த்தி கோஷ்டங்களிலிருந்து சற்று வெளியே வந்து தனியாக அமர்ந்திருக்கிறார். பின்னல் ஆலமரம் இல்லை. மூர்த்தங்கள் மிகவும் வனப்புடன் உள்ளன. மூலவர் மிக அழகிய பெரிய பொலிவுடன் கூடிய மூர்த்தம். கதவு பூட்டப்பட்டுள்ளதால் வெளியில் இருந்ததே பார்க்கிறோம். இதுபோன்ற தலங்களுக்கு மக்கள் வருவதையேயில்லை. வந்தால் தான் இவை பொலிவு பெரும். தென்புறத்தில் தனிக்கோயிலாக அம்பிகை உள்ளார். பெயர் இருமலர்க்கண்ணியம்மை அல்லது உபய புஷ்பா விலோற்சனி நான்கு கரங்களுடன் கூடிய நின்ற திருக்கோலம். கோயிலுக்கு எதிரே பிரம்ம தீர்த்தம் என்ற அழகான குளம் உள்ளது. தாமரைகளை, அல்லிப்பூக்களும் மிகுந்துள்ளது.
அயன் என்பது ப்ரம்மனைக் குறிக்கும். பிரம்மன் ஈசனை பூஜித்தது சரஸ்வதியை அடைந்த தலம். அதனால் கோயிலுக்கு ஹயவந்தி என்று பெயர். மிகவும் அழகிய சூழலில் அமைந்துள்ள தலம். ஊரிலிருந்து கோயில் செல்லும் வழியில் இருமருங்கிலும் தென்னை மரங்கள் உள்ளன. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் திருநீலநக்கர். அந்தணர் குளத்தில் தோன்றிய அவர், சிவபெருமானையும் அவர்தம் அடியாரையும் வணங்குவதையே தம் வாழ்வின் பெரும்பயனாகக் கருதியவர். தினமும் இசை முறைப்படி வழிபாட்டு வந்ததோடு மட்டுமல்லாமல் சிவனடியார்களுக்குத் திருவமுது அளித்துப் பணிவிடைகள் செய்து வந்தார்.
அன்று திருவாதிரை நன்னாள் ஈசனுக்குப் பூஜை செய்வதற்காக ஹயவந்திக்குச் சென்றார். அவருடைய துணைவியார் மங்கையற்கரசியும் பூஜைக்கான பொருட்களுடன் அவரைத் தொடர்ந்து கோயிலுக்கு வந்தார். இருவரும் ஆலயத்தை வலம் வந்து , ஈசனின் கருவறையின் முன் நின்று சிவலிங்கத்தை தரிசித்தனர் . ஓம் நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தை ஓதி மெய்ம்மறந்திருந்தார் திருநீலநக்கர். அப்போது சுதைச்சிலம்பி என்ற சிலந்திவகைப் பூச்சியொன்று உத்தரத்திலிருந்து லிங்கத்தின்மீது விழுந்தது. தீண்டிய இடமெல்லாம் கொப்புளங்களாக்கிவிடும் விஷத்தன்மை கொண்ட ஒருவகைப் பூச்சியாகும் அது. அச்சிலந்தி சிவலிங்கத்தின்மீது விழுந்ததைக்கண்ட மங்கையர்க்கரசியார் பதறிப் போய்விட்டார். அது ஸ்வாமியைத் தீண்டினால் அவர் மேனியில் கொப்புளங்களாகிவிடுமே என்று அஞ்சி, சட்டென்று வாயால் ஊதி அப்பூச்சியை அகற்றினார். அப்போது அவர் வாயிலிருந்த உமிழ் நீரும் ஈசன் மீதுபட்டுவிட்டது. அதைக்கண்ட திருநீலநக்கர் கடும்கோபம் கொண்டார் .
சிவபூஜையில் அபச்சாரம் நேர்ந்துவிட்டதையே என்று உள்ளம் நொந்தார். அச்சிலம்பியை வேறு வகையில் துரத்தாமல், எம்மிறைவனின் மீது எச்சில் படும்படி செய்துவிட்டாயே, இனி எனக்கும் உனக்கும் தொடர்பில்லை, உன்னை இக்கணமே துறந்தேன் என்று சுடுசொல் கூறினார். கணவர் ஆணைப்படி மனைவி ஒருபுறம் ஒதுங்கி நிற்க, திருநீலநக்கர் வழிபாட்டினை முடித்துக்கொண்டு இல்லம் திரும்ப, மனைவியால் இல்லம் திரும்பாமல் கோயிலிலேயே தங்கி விட்டார். அன்றிரவு நாயனாரின் கனவில் தோன்றிய ஈசன், அன்பனே , எனது திருமேனியைப் பார் உன் மனைவி ஊதி எச்சில் பட்ட இடம் தவிர, பிற இடங்களெல்லாம் கொப்புளங்கள் தோன்றியுள்ளன என்று காட்டினார். பக்தியினால் மங்கையர்க்கரசி செய்த அன்புத்தொண்டை இறைவன் அபச்சாரமாகக் கருதாமல் பெருங்கருணையாக ஏற்றுக்கொண்டதை நினைத்து ஆனந்தக் கூத்தாடினார். மறுநாள் கோயிலுக்குச் சென்று தன் குற்றத்தை மன்னித்தருளும்படி பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, கண்ணீர் மல்கி மனைவியை அழைத்துக்கொண்டு இல்லம் திரும்பினார் திருநீலநக்கர் .
சாத்தமங்கை என்பது இத்தலத்தின் பழைய பெயர் .
அத்தலத்தில் பெண்கள் தாமரைத் தாடாகங்களில் நீராடும்போது அன்னப்பறவைகளும் அவர்களுடன் நீராடுமாம். வேதம் ஓதும் சிறுவர்களுடன் சேர்ந்து நாகணவாய்ப் பறவைகளும் தம் குஞ்சுகளுக்கு கற்றுத்தருமாம். அங்கு வாழ்ந்த அந்தணர்கள், தக்ஷிணாக்கினி, காரு கபத்தியம், ஆகவனீயம் ஆகிய மூன்று தீக்களை வளர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.
ஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணருடனும் மற்றும் அடியவர்களுடனும் சாத்தமங்கை புகுதல் :
திருநீலநக்கர் சாத்தமங்கையில் சிவத்தொண்டு புரியுங்கால் ஞானசம்பந்தரின் புகழ் அவர் செவிக்கு எட்டியது. அக்கணம் முதல் சம்பந்தரை தரிசிக்கவேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தார். அப்போது ஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணருடனும் அவர் மனைவி மதங்க சூளாமணியாருடனும் மற்றும் பல அடியவர்களுடனும் சாத்தமங்கைக்கு எழுந்தருளப்போகிறார் என்ற நற்செய்தி அவர் செவிக்கு எட்டியது. திருநீலநக்கர் ஊர் முழுதும் மலர்ப்பந்தலிட்டு, தோரணங்களால் பந்தலிட்டு சம்பந்தர் பெருமானை எதிர்கொண்டழைத்து உபசரித்து பரவசமெய்தினார். பின்னர் திருநீலநக்கர் வேண்டுகோளுக்கிணங்க ஆளுடைய பிள்ளையவர்களும், திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் தம் மனையிலேயே அவ்விரவு தாங்கினார். மறுநாட்காலை எழுந்து ஞானசம்பந்தர் ஹயவந்திநாதரைப் பற்றி பதிகம் பாடினார். அதனில் ஈசனின் வீரத்தையும், அம்மையின் அழகையும் புகழ்ந்து பாடினார். சாத்தமங்கையின் புகழும் இப்பதிகங்களில் பரவிக்கிடக்கிறது. பெறுமலர்ச் சொல்ல மேகம் உறிஞ்சும் சாத்தமங்கை என்றும் , கடிமனம் மல்கி நாளும் கமழும் சாத்தமங்கை என்றும், சாந்தமாறங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை என்றும், தண்ணிலா வெண்மதியம் தவழும் பொழிற் சாத்தமங்கை என்றும், சங்கையில்லா மறையோர் அவர்தம் தொழுத சாத்தமங்கை என்றும் தொழுதிருக்கிறார் .