unknown specialities about temples 1

there are many unknown facts about temples which might intrigue you as a devotee.

this is a first list of such things which i have personally seen and collected.

 in tamir ( english list is below this ) 

 1. திருச்சிக்கு தெற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விராலிமலை முருகன் கோவிலில் சுருட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
 2. அதிக தேவாரப் பதிகங்கள் கொண்ட தலம் சீர்காழி.
 3. வைணவ திவ்ய தேசங்களில் 106 மட்டுமே இவ்வுலகில் உள்ளது மீதமுள்ள இரண்டும் வைகுண்டம் மற்றும் பரமபதம்
 4. திருவாரூர் தியாகராஜா கோயிலுக்கு உள்ளே இருக்கும் அசலேஸ்வரர் கோயிலில் நமிநந்தியடிகள் என்ற நாயன்மார் தண்ணீரால் விளக்கெரித்ததாக வரலாறு கூறுகிறது
 5. திருவாரூரை அடுத்த தேவூர் பாடல் பெற்ற தலத்தில் கல்லில் வாழை விளைகிறது
 6. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் சிவலிங்கம் இல்லை ஆவுடை மட்டுமே உள்ளது இங்கு லிங்கம் அரூபமாக உள்ளதாக கூறப்படுகிறது
 7. ஆழ்வார்திருநகரி கோயிலுக்குள் நம்மாழ்வார் குழந்தையாக இருந்து தவம் செய்த புளியமரம் இன்றும் உள்ளது. இதற்கு பெயர் உறங்காப்புளி இந்த மரம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது
 8. சீர்காழியை அடுத்த திருநாங்கூர் மதங்கீஸ்வரர் கோயில் இரண்டு நந்திகள் உள்ளன இவற்றில் ஒன்று சுவாமியை பார்த்தவாறும் மற்றொன்று அதன் எதிர் திசையில் திருக்காட்டுப்பள்ளி சிவத்தலத்தை பார்த்தவாறும் உள்ளன
 9. விஷ்ணு ஸ்தலமாக இருந்து சிவத்தலமாக மாறிய கோவில் குற்றாலநாதர் கோவில் ஆகும்
 10. உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் உள்ள அம்சங்கள் தினமும் சாயங்கால நேரத்தில் சிதம்பரத்திலுள்ள திருமூலட்டானத்தில் ஒதுங்குவதாக கூறப்படுகிறது
 11. ராகு ஸ்தலம் ஆகிய திருநாகேஸ்வரத்தில் தான் சேக்கிழார் பெரியபுராணத்தை அரங்கேற்றினார்
 12. திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் அடுத்த தாருகாபுரம் சிவன் கோவிலில் தக்ஷிணாமூர்த்தி நவகிரகங்களின் மேல் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறார். இது வேறு எங்கும் இல்லை
 13. திருச்சியை அடுத்த திருநெடுங்களம் நித்ய சுந்தரேஸ்வரர் கோவிலில் நவகிரகங்கள் உள்முகமாக சூரியனைப் பார்த்தவாறு உள்ளன
 14. ராமநாதபுரத்திற்கு அருகே உள்ள உத்திரகோசமங்கை சிவாலயத்தில் 6 அடி உயரத்தில் மரகத நடராஜர் சிலை உள்ளது. இதற்கு திருவாதிரை அன்று மட்டுமே அபிஷேகம் மீதமுள்ள நாட்களில் சந்தனக் காப்பில் உள்ளது
 15. நன்னிலத்தை அடுத்த ராமநந்தீஸ்வரம் சிவன் கோவிலில் அம்மன் ரிஷபத்தை கையில் தாங்கியவாறு உள்ளார் . இவ்வமைப்பு வேறு எங்கும் இல்லை
 16. மயிலாடுதுறையை அடுத்த திருக்குறுக்கை தேவாரம் பாடல் பெற்றது. இது மன்மதனை எரித்த தலமாகும். மன்மதன் எரிந்த சாம்பல் விபூதி குட்டை என்று குளமாக உள்ளதாக மக்கள் நம்புகின்றனர். இதிலிருந்து கிடைக்கும் மற்றும் மண் வெண்மை நிறத்தில் உள்ளது
 17. வைத்தீஸ்வரன் கோவில் அடுத்த திருக்குரக்காவல் குரல் தலத்தில் உள்ள வில்வ மரத்தின் காய்கள் லிங்க வடிவில் உள்ளன
 18. பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே தலம் ஸ்ரீரங்கம்
 19. திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே உள்ள திருவாட்போக்கி என்னும் தலத்தில் மலை உச்சியில் காகங்கள் பறப்பதில்லை
 20. திருவாரூர் திருமீயச்சூர் மற்றும் திருப்புகலூரில் ஒரு கோயிலுக்குள்ளேயே இரண்டு பாடல் பெற்ற தலங்கள் உள்ளன
 21. சிதம்பர ரகசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் விநாயகர் ரகசியம் கேள்விப்பட்டதுண்டா ? இது திருநாகேஸ்வரத்தில் உள்ளது
 22. கோயம்புத்தூரில் இருந்து 48 கிலோ மீட்டர்கள் வடக்கே உள்ள ஓதிமலை முருகன் கோவில் தான் மிக அதிகமான படிகளை கொண்டது. மொத்தம் 1770 படிகள்
 23. கடலூரை அடுத்த திருமாணிகுழியில் சிவன் ஒரு திரையால் மறைக்கப்பட்டுள்ளார். பக்தர்கள் காணும் நேரம் தவிர மீதி நேரங்களில் குபேரன் வழிபடுவதாக ஐதீகம்
 24. திருவீழிமிழலை தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இல்லை
 25. காங்கேயத்திற்கு அருகே உள்ள வட்டமலை முருகன் கோவில் முன்பு சிவன் கோவிலாக இருந்தது
 26. நவகிரக தலங்களிலேயே கஞ்சனூரில் மட்டும் சுக்கிரன் தனியாக இல்லாமல் சிவனாகவே இருக்கிறார்
 27. கும்பகோணத்தை அடுத்த நல்லூரில் ஈசன் பஞ்சவர்ணேஸ்வரர் ஒரு நாளில் ஐந்து முறை நிறம் மாறுகிறார்
 28. சம்பந்தர் பாடிய தேவார தலங்கள் 219
 29. அப்பர் பாடிய தேவாரத் தலங்கள் 125
 30. சுந்தரர் பாடிய தேவாரத் தலங்கள் 84
 31. திருவிசநல்லூரில் நான்கு பைரவர்களும் ஆவூரில் ஐந்து பைரவர்களும் சீர்காழியில் எட்டு பைரவர்களும் உள்ளனர்
 32. தேவார மூவர் நேராக சென்று பாடாமல் பிற தலங்களில் வைத்துப் பாடிய தலங்கள் வைப்புத் தலங்கள் என்று போற்றப்படுகின்றன
 33. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் உள்ளன
 34. ராஜபாளையத்தை அடுத்துள்ள சங்கரன்கோவில் ,கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் மற்றும் தாருகாபுரம் ஆகியவை பஞ்சபூத ஸ்தலங்களாக போற்றப்படுகின்றன
 35. காஞ்சி காமாட்சியின் உற்சவ விக்கிரகம் தஞ்சாவூரில் பங்காரு காமாட்சி என்ற பெயரில் உள்ளது
 36. கும்பகோணத்தை அடுத்த திருவிசநல்லூரில் நான்கு பைரவர்கள் உள்ளனர். இவர்கள் சதுர்கால பைரவர் என்று அழைக்கப்படுகின்றனர்
 37. சென்னையில் இருந்து 61 கிலோ மீட்டர்கள் தொலைவில் ஆந்திர எல்லையில் உள்ள சுருட்டப்பள்ளி என்ற ஊரில் சிவபெருமான் பெருமாளைப்போல படுத்தவாறு காட்சி அளிக்கிறார்
 38. திருவள்ளூரை அடுத்த சுருட்டப்பள்ளி எனும் கிராமத்தில் இருந்து தான் பிரதோஷம் தோன்றியது என்று கூறப்படுகிறது
 39. கும்பகோணத்தில் இருந்து 23 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள திருலோக்கியில் ரிஷப வாகனத்தின் மேல் சிவனும் பார்வதியும் உள்ள காட்சி வேறு எங்கும் இல்லை
 40. தஞ்சை பெரிய கோயிலுக்கு வடக்கே உள்ள சிவகங்கை பூங்காவில் உள்ள குளத்தில் நடுவில் இருக்கும் ஈசன் தஞ்சை தளிக்குளத்தார் என்று போற்றப்படுகிறார். இவர் பிரகதீஸ்வரருக்கு முற்பட்டவர். இது ஒரு தேவார வைப்புத் தலம்
 41. உலகின் மிகப்பெரிய உற்சவ நடராஜர் சிலை கும்பகோணத்தில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோனேரிராஜபுரத்தில் உள்ளது
 42. பூம்புகாரை அடுத்த சாயாவனத்தில் முருகப்பெருமான் பதில் வேலுக்கு பதில் வில்லை பிடித்துள்ளார்
 43. கடன் தொல்லையில் சிக்கித் தவிப்போருக்கு கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருச்சேறை செந்நெறியப்பர் கோவில் ருண விமோசன லிங்கம் விடுதலை அளிக்கிறது
 44. திருவாரூரை அடுத்த 7 தலங்கள் சப்த விடங்க தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இங்கிருக்கும் மூர்த்தத்தின் பெயர் தியாகராஜா என்பதாகும்.
 45. கும்பகோணத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருமீயச்சூரில் தான் லலிதா சகஸ்ரநாமம் உருவாகியது
 46. கும்பகோணத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் செதலபதியில் ஆதி விநாயகர் சந்நிதி உள்ளது. இங்கு பிள்ளையார் மனித முகத்துடன் காட்சி அளிக்கிறார்
 47. கும்பகோணத்தை அடுத்த ஊரில் ஆவூரில் பசுபதீஸ்வரர் கோவிலில் ஐந்து பைரவர்கள் உள்ளனர்
 48. சீர்காழியில் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மிக அதிகமான எட்டு பைரவர்கள் உள்ளனர்
 49. காஞ்சிபுரத்தில் எந்த சிவாலயத்திலும் தனியாக அம்மன் சந்நிதி இல்லை. காஞ்சி காமாட்சியே அனைவருக்கும் அம்மனாக விளங்குகிறார்
 50. நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரி தவிர எந்த தலங்களுக்கும் சென்றதில்லை. மாறாக பிற தலங்களில் இருந்து பெருமாள் ஆழ்வார் திருநகரி வந்து நம்மாழ்வார் கையால் பாடல் பெற்றதாக கூறுவர்
 51. புதுக்கோட்டை அருகே உள்ள பேரையூரில் கோவில் சுனையில் பங்குனி மாதத்தில் ஒருநாள் மிருதங்க ஒலி கேட்கிறது. அது நாகர்கள் இசைப்பதாக கருதப்படுகிறது
 52. சென்னிமலை கோவிலுக்கு பழைய பெயர் சிரகிரி ஆகும் இத்தலத்தில்தான் கந்தசஷ்டிகவசம் இயற்றப்பட்டது
 53. சேலத்திற்கு அருகே வசிஷ்டர் பிரதிஷ்டை செய்த ஐந்து தலங்கள் உள்ளன அவை பேளூர், ஆத்தூர், ஏத்தாப்பூர், ஆறகளூர் மற்றும் கூகையூர்
 54. திருநீலக்குடி தேவார தலத்தில் கோயிலுக்குள் விளையும் பலாப்பழம் பூஜை செய்யாமல் வெளியில் எடுத்துச் சென்றால் அழுகி விடுகிறது.
 55. நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில் சூரசம்ஹாரத்திற்கு அம்மனிடம் முருகன் வேல் வாங்கும் நேரம் உடம்பில் வேர்வை துளிகள் அரும்புகின்றன
 56. ஐந்து சிவாலயங்கள் மயானங்கள் என்று அழைக்கப்படுகின்றன.அவை காஞ்சி மயானம் கடவூர் மயானம் விழி மயானம் நாலூர் மயானம் மற்றும் காழி மயானம்.
 57. 108 வைணவ திவ்ய தேசங்களில் 14 காஞ்சிபுரத்திலேயே உள்ளன
 58. சீர்காழியை அடுத்த திருநாங்கூரில் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் ஏழு வைணவ திவ்ய தேசங்கள் உள்ளன
 59. சிவராத்திரியன்று நாகராஜன் வழிபட்ட தலங்கள் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் மற்றும் நாகூர்
 60. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் சிவனும் விஷ்ணுவும் ஒரே சிலை வடிவத்தில் உள்ளனர்
 61. கும்பகோணத்திற்கு அருகே உள்ள இன்னம்பரிலும் பூம்புகார் அடுத்த புஞ்சையிலும் ஒரு யானை உள்ளே சென்று வழிபடக் கூடிய அளவில் கருவறை உள்ளது
 62. ஆறுவகை கோயில்கள் உள்ளன. அவை முறையே மணிக்கோயில், மாடக் கோயில், இளங்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில் மற்றும் ஆலக்கோயில் ஆகும்
 63. தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் ,சந்திரசேகரர் போன்றவை சிவனின் 64 மூர்த்தி பேதங்களில் சிலவாகும்
 64. திருவையாறு, திருவெண்காடு, மயிலாடுதுறை, ஸ்ரீவாஞ்சியம், திருவிடைமருதூர் மற்றும் சாயாவனம் ஆகிய ஆறு திருத்தலங்களும் காசிக்கு இணையாக போற்றப்படுகின்றன
 65. தமிழ்நாட்டின் மிகப் பெரிய கோவில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகும்
 66. புத்திர பாக்கியம் இன்மைக்கு சிறந்த பரிகார தலமாக திருக்கருகாவூர் விளங்குகின்றது. இது கும்பகோணத்திற்கு 16 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது
 67. புதுக்கோட்டைக்கு அருகே உள்ள திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் மூலவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர்
 68. கும்பகோணத்திற்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்புறம்பயத்தில் உள்ள விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் ஒரு சொட்டு கூட கீழே வழிவதில்லை
 69. காரைக்குடியில் உள்ள கொப்புடைய நாயகி அம்மன் மூல விக்கிரகமே விழாக்களின் போது உற்சவ விக்கிரகமாக எடுத்துச் செல்லப்படுகிறது
 70. திருநெல்வேலி மாவட்டத்திலேயே உயரமான கோவில் கோபுரம் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் உள்ளது
 71. தமிழ்நாடு அரசு முத்திரையில் உள்ள கோவில் கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் கோபுரமாகும்
 72. தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலமான சிதம்பரம் நடராஜர் கோவிலின் உள்ளேயே வைணவ திவ்ய தேசமான கோவிந்தராஜப் பெருமாள் கோவில் உள்ளது
 73. வைணவ திவ்ய தேசமான திரு நிலாத்திங்கள் துண்டம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் மூலவர் சந்நிதிக்கு அருகிலேயே உள்ளது
 74. வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கள்வனூர் பெருமாள் கோவில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் சந்நிதியாக உள்ளது
 75. சென்னையில் இருந்து 61 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள சுருட்டப்பள்ளியில் தட்சிணாமூர்த்தி தனது மனைவியுடன் காட்சியளிக்கிறார். இவ்வமைப்பு வேறெங்கும் காணப்படுவதில்லை
 76. நந்திகேஸ்வரரின் திருமணம் அரியலூர் அடுத்த திருமழபாடியில் நடைபெற்றது

in english

 1. a cigar is offered as prasadham in viralimalai murugan temple 30 kms south of thiruchirappalli
 2. sirkaari is the sthalam with the most thevaram hymns sung owing to the birth place of gnana sambandhar
 3. out of 108 divya desam temples of vishnu , parama padham and vaikuntam are heavenly abodes and only the remaining 106 can be worshipped in this world
 4. othimalai about 48 kms north of coimbatore is the tallest freestanding hillock abode of murugan with 1770 steps
 5. there are 5 temples called mayanams in shaivite tradition. they are kanchi mayanam , naalur mayanam , veezhi mayanam , kadavur mayanam and sirkaari mayanam
 6. six temples are said to be equivalent of kaasi kshethram. they are thiruvaiyaru , thiruvidaimarudhur , srivanjiyam , thiruvenkadu , mayavaram and chayavanam
 7. thirumayam sathyamurthi perumal idol is bigger than srirangam ranganathar.
 8. the vinayagar idol in thiruppurambayam about 10 kms north west of kumbakonam is made of items available from the sea like shells and weed and abhishekam is performed only on ganesh chathurthi and that too with honey only when the idol sucks all the honey .
 9. visiting thirukkarugavur garbarakshambiga temple, 16 kms from kumbakonam bestows child on couples desperately seeking one.
 10. chidambaram natarajar temple is the biggest temple complex in tamir nadu.
 11. there are 64 forms of shiva known as ‘moorthy bhedangal’ in tamir. egs are dakshinamurthy , bikshadanar , agora moorthy etc
 12. there are six kinds of shiva temples based on the way they are constructed. they are aalakkoil , ilangoil,karakkoil , kogudikkoil , gnazharkoil and manikkoil
 13. kanchipuram has the most vaishnavite temples anywhere in the world at 14.
 14. naangoor has the most concentration of vaishnavite temples anywhere in the world at 7 temples in a 2 km radius.
 15. the four temples where nagaraja worshipped shiva on shivarathri day are nageswarar koil , kumbakonam , thirunageswaram , thiruppamburam and naagoor
 16. sankaran koil in thirunelveli district has sankara narayanar which is part shiva and part vishnu in the same deity
 17. innambar near kumbakonam and punjai near mayavaram have sanctums so big that an elephant can enter and circle the shiva lingam
 18. in sikkal singaravelar temple , on the day of soora samharam , when ambal gives lance to murugan , the idol perspires indicating the prevailing tension
 19. in thirumanikuri near cuddalore , the main deity shiva is behind a curtain only all the time and only for a brief moment , it is raised to show the lord. it is said that kuberan worships rest of the times
 20. vasishta rishi installed 5 temples near salem. they are pelur,yethapur,athur,aaragalur and koogaiyur
 21. any jackfruit taken out of the temple in thiruneelakkudi gets spoiled.only the ones offered to god are edible
 22. in peraiyur naganathar temple , during the month of panguni , for one day, mrudhangam sound is heard from the temple pond. it is said that the naagars worship lord shiva at that time.
 23. the old name of chennimalai is siragiri and it is from chennimalai, kandha sashti kavacham was sung.
 24. dakshinamurthy in thiruveezhimizhalai has no ‘muyalakan’ under his feet owing to sthalapuranam
 25. vattamalai near kangayam is a shivan temple sung in thevaram which became a murugan abode later
 26. of the navagraha temples , kanjanur , the sukran sthalam has no separate sannidhi for venus but shiva himself presides as sukran
 27. panchavarneswarar , the deity at nallur , 10 kms from kumbakonam takes 5 colors every day
 28. thevara padal petra thalangal (regular temples) sambandar – 219
 29. thevara padal petra thalangal (regular temples) sung by appar – 125
 30. nammaazhvar did not visit any temple other than aarwaar thirunagari. Lord vishnu himself is told to have visited him there from other temples to get a song !
 31. ulagalandha perumal temple in kanchipuram has 4 vaidhnava dhivya desams in one temple.
 32. no shiva temple in kanchipuram has a separate amman sannidhi as kaamakshi amman is the only amman in the vicinity
 33. sirkaari is known as the ashta bhairava sthalam. it has the most bhairavars in a temple at 8.
 34. thiruvisanallur about 9 kms from kumbakonam has 4 bhairavars one for each yugas known as chathur kaala bhairavars
 35. thiruloki , 23 kms from kumbakonam is the only place where there is a rishaba idol holding shiva and parvathi.
 36. the small shiva idol on an island north of thanjavur big temple known as thanjai thali kulathar is older than the big temple itself.
 37. the name thyagaraja is the name of the unique form of shiva available in 7 temples with thiruvarur being the main one.
 38. lalitha sahasranamam originated from thirumeeyachur lalithamba sametha meganathar temple about 35 kms from kumbakonam
 39. sethalapathi about 40 kms from kumbakonam has the only aadhi vinayagar , ie the form prior to him assuming the elephant face.
 40. konerirajapuram, 23 kms from kumbakonam has the biggest natarajar in the world
 41. chayavanam , 23 kms from mayavaram has a unique murugan statue with a bow and arrow in his hand instead of the usual lance.
 42. thiruchcherai , 15 kms from kumbakonam has a ‘rina vimochana lingam’ which helps people overcome loan and debt problems.
 43. you have heard of a chidambara ragasiyam. have you seen a vinayagar ragasiyam ? it is in thirunageswaram.
 44. a nayanmar named nami nandhi adigal lit lamps with water in thiruvarur araneri temple
 45. thiruvarur , thirumeeyachur and thiruppugalur have 2 thevara padal petra thalangal each inside the same temple complex
 46. aavudaiyar koil in pudukkottai district is the only temple with only the aavudai ( lower part ) and not a lingam on top of it.
 47. the hole in tamarind tree where nammaarvaar did penance is still in aarwaar thirunagari temple and it is more than 3200 years old.
 48. there are 2 nandhis one facing east and the other west in thirunangur mathangeeswarar temple near sirkaari
 49. kutralam known for its waterfalls is where vishnu turned shiva and became a shiva sthalam
 50. tharukapuram near vasudevanallur has dakshinamurthy resting on the 9 planets , a feature seen nowhere else.
 51. the vilva tree in thirukkurakkaval shivan temple grows fruits in the shape of a lingam. it is said that monkeys in the temple worship shiva with this fruit once a year
 52. all navagrahams face inwards towards suryan in nithyasundhareswarar temple in thirunedungalam , near thiruchy
 53. a pond in thirukkurukkai shiva temple is covered with white ash. it is said, manmathan was burnt here and hence.
 54. ramanandheeswaram near nannilam has amman with rishabam in hand. a very unique sculpture
 55. the natarajar in uthirakosamangai village near ramanathapuram is made of emerald and is always covered with sandal except for thiruvadhirai
 56. the grace of all the siva’s in all temples is told to converge at thiru moola nathar lingam of chidambaram in the evening
 57. sekkizhar did the arangettram( staging ) of his “periya puranam” in thirunageswaram temple
 58. thevara padal petra thalangal (regular temples) sung by sundarar – 84
 59. there are 249 temples known as thevara vaipu thalangal which were sung by thevara moovar but not physically visited.
 60. there is a lesser known pancha boodha sthalangal near rajapalayam comprising of devadanam, tharukapuram, sankaran koil,karivalam vandha nallur & thenmalai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *