Vishalakshi sametha Vanmeeganadhar kovil, Idaikiyam
Structure of the Temple:
Between the rivers “Veeracholan” and “Nandal” is the village “Idaikiyam”. The Vishalakshiyamman Udanurai Vanmeekanathar Thirukoil is located on the eastern border of Sivan koil Street in the village.
In this 2000 year old temple Mupiri Vinayaka is depicted in the trinity of Sat, chit and Anandam, the unique deity of the village, and shiva subramaniyar is depicted in a peacock. Along with them, Gajalakshmi, Ashtabhuja Durgai, Bhairava, Navagragam, Naagar, Nandi and moolavar are protecting the devotees.
Vanmeekanathar worshipped by Idaikkadattu sidhdhar :
Idaikkadar belongs to the Konar class. He is known to have lived in the third Kadai sanga period. It is also said that he lived in a town called Idayanmedu east of Madurai. Bhogar preached yogic wisdom to him. Idaikkadar was proficient in the arts of medicine, yoga and astronomy. He also excelled in astrology. He always stayed aloof and never talked to anyone. Herding and living alone.
With his astrological knowledge he knew that a great famine would soon befall the country. So he used to feed his goats with erukan leaves, which were always available. Also, he built the wall of his hut he lived in by mixing grain called ‘Kuru varagu’ with soil.
As expected, after some time there was a great famine in the country. People died here and there. Famine was rampant. But only Siddhar managed to stay alive. The reason for this was that when the goats who had been accustomed to the erukkan leaves scraped against the wall to get rid of their itch, the grain spilled out of the walls and he lived on it.
Seeing this strange thing, the Navagrahas gathered together and wondered how only Idhakadar was alive. They visited his hut. Idaikkadar was delighted and treated them kindly and gave them bread and goat’s milk.
All of them fainted because of the milk from erukkan leaves. seeing this, idaikkadar shifted the delirious Navagrahas to the position in which they would receive rain.
It rained. The parched land flourished and the people who reamined survived. People had love and affection for idaikkadar and everyone worshiped him.
Awakened planets immediately understood the miracle done by idaikadar! Siddhar’s insight was appreciated and they gave him his due boons and bid him farewell.
விசாலாட்சி சமேத வன்மீகநாதர் கோவில், இடைக்கியம்
திருக்கோவிலின் அமைப்பு :
இம்மாவட்டத்தின் முக்கிய பாசன நதியான காவிரி கிளை நதியாம் வீரசோழன் ஆற்றிற்கும் நண்டலற்றிற்கும் இடையில் அமைந்துள்ளது தான் “இடைக்கியம்” கிராமம். இக்கிராமத்தில் கிழக்கு மேற்காக அமைந்திருக்கும் சிவன்கோவில் தெருவின் கிழக்குக் கோடியில் கம்பீரமாக அமைந்துள்ளது “அருள்மிகு விசாலாட்சியம்மன் உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருக்கோவில். இங்கு சுவாமி சுயம்பு மூர்த்தியாகவும், அம்பாள் பத்ம பீடத்திலும் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்கள்.
சுமார் 2000 வருடம் பழமையான இக்கோயில் முப்பிரி விநாயகர் சத், சித், ஆனந்தம் என்ற முக்குணத்திலும், வள்ளி சமேத சிவசுப்பிரமணியர், மயில் வாகனத்திலும் காட்சியளிக்கிறார்கள். இவர்களுடன் கஜலட்சுமி, அஷ்டபுஜ துர்கை, பைரவர், நவக்கிரகங்கள், நாகர், நந்தி புடைசூழ மூலவர் பக்தர்களைக் காத்து வருகிறார்.
இடைக்காட்டுச் சித்தரும் இடைக்கியமும்:
இடைக்காட்டு சித்தர் வழிபட்டதால் இக்கிராமத்திற்கு இடைக்கியம் என்று பெயர் வந்தது.
இடைக்காடர் கோனார் வகுப்பைச் சேர்ந்தவர். மூன்றாம் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறார். மதுரைக்குக் கிழக்கே இடையன்மேடு என்ற ஊரில் வாழ்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. “போகர்” சித்தர் இவருக்கு யோக ஞானத்தை உபதேசித்தார். இவர் வைத்தியம்,யோகம், ஞானம், வானசாஸ்திரம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றவர். சோதிடக் கலையிலும் மிகச் சிறந்து விளங்கினார். எப்பொழுதும் ஒதுங்கி இருந்து யாருடனும் பேசமாட்டாராம். ஆடு மேய்ப்பதும் தனித்து வாழ்வதுமே இவருடைய தொழில்.
திருமூலரைப் போலவே இவரைப்பற்றியும் ஒரு கதை சொல்லப்படுகிறது, இவருடைய சோதிட அறிவால் நாட்டில் சிறிது காலத்தில் பெரிய பஞ்சம் வரப்போகிறது என்பதை அறிந்தார். அதனால் முன்னேற்பாடாக தமது ஆடுகளுக்கு எப்பொழுதும் கிடைக்கக்கூடிய எருக்கன் இலையை தின்னக்கொடுத்துப் பழக்கி வந்தார். அத்துடன் தான் வசித்த குடிசையை குறுவரகு எனும் தானியத்தை மண்ணோடு குழைத்துச் சுவர் கட்டிக் கொண்டார்.
எதிர்பார்த்தபடியே சில காலம் கழித்து நாட்டில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் ஆங்காங்கே மாண்டனர். பஞ்சம் தலை விரித்தாடியது. ஆனால் சித்தர் மட்டும் உயிருடன் வாழ்ந்து வந்தார். இதற்குக் காரணம் எருக்கிலைக்கு பழக்கப்படுத்திய ஆடுகள் தங்கள் அரிப்பைப் போக்கிக் கொள்ள சுவற்றில் உராய்ந்ததில் வரகு அரிசி அதிலிருந்து கொட்டியதால் அவற்றைக் கொண்டு உண்டு உயிர் வாழ்ந்தார்.
இதனைக் கண்ட ‘நவக்கிரக நாயகர்கள்’ ஒன்றுகூடி இடைக்காடர் மட்டும் எவ்வாறு உயிர் வாழ்கிறார் என்று ஆச்சரியப்பட்டனர். உடனே புறப்பட்டு அவரின் குடிசைக்கு வருகை புரிந்தனர்.
இடைக்காடரும் அகமகிழ்ந்து அவர்களை அன்பாக உபசரித்து வரகு ரொட்டியையும் ஆட்டுப்பாலையும் அளித்தார்.
எருக்கிலைச் சத்துள்ள பால் என்பதால் அவர்கள் அனைவரும் மயங்கிவிட்டனர். இடைக்காடருக்கு சொல்லொணா ஆனந்தம். உடனே மயக்கத்தில் படுத்திருந்த நவகிரகங்களை அவர்கள் எந்த அமைப்பில் இருந்தால் மழை வருமோ, அந்த அமைப்பில் மாற்றி படுக்க வைத்துவிட்டார். இதனால் மழை கொட்டியது. வறண்டு கிடந்த பூமி செழித்தது. எஞ்சி உயிர்வாழ்ந்த மக்கள் பிழைத்துக் கொண்டனர். இடைக்காடருக்கு ஆனந்தம். மக்களுக்கு இடைக்காடர் மேல் அன்பும் – பாசமும் ஏற்பட்டு அவரை அனைவரும் வணங்கினர்.
விழித்தெழிந்த கிரகங்களுக்கு உடனே இடைக்காடர் செய்த அற்புதம் விளங்கிவிட்டது! சித்தரின் நுண்ணறிவை மெச்சி அவருக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்து விடை பெற்றார்கள்.
இது போன்ற இயற்கை அழகும், தல வரலாறும் கொண்ட இடைக்கியம் போன்ற கிராம சிவாலயங்களுக்கு சென்று ஆனந்தமாக கூட்ட நெரிசலின்றி வழிபடலாமே !