Sthala puranam and temple information
Kunthi, mother of the Pandavas, was cursed for having borne the children of the pancha boothas. She prayed to Narada for redemption, and he Naradar advised her to bathe in the seven oceans to redeem hereself. As this was not possible for Kunti, Narada advised her to pray to Kalyanasundareswarar at this temple. Under Lord Siva’s orders, Narada brought the waters of all the seven oceans here, and Kunti bathed in that water on Magham nakshatram (Kunti’s birth star) in the month of Masi. Bathing in this temple tank is said to have the same effects and benefits as bathing at Kumbakonam’s Mahamaham tank.
The idol of Lord Siva presents itself in five different colors during the day – copper, pink, gold, emerald and another unidentifiable colour. He is called Panchavarneswarar, for this reason.
Devotees say that on the day of the Mahamaham festival in Kumbakonam, the Lingam of Lord Siva here sweats, and is therefore fanned to keep Him cool.
The Lingam here has many holes / spots, and it is believed that these are the holes made by Sage Bringhi when he tried to bore through between the male and female aspects of Lord Siva and Parvati as Ardhanari.
This is one of the places where Lord Siva and Parvati gave Agastyar a vision of their kalyana kolam. Agastyar installed a Lingam behind the main Lingam here, for his worship. Behind the main idol is a limestone form of Lord Siva and Parvati in kalyana kolam.
Periya Puranam narrates the story of Amaraneethi Nayanar, a supplier of loin cloth, whose devotion to Lord Siva was tested here by the Lord himself. He received benediction from Lord Siva here.
Appar was instructed by Lord Siva to come to Nallur to receive deeksha. It is said that Appar received Siva’s pada darsanam here. For this reason, an unusual practice followed at this temple is the blessing of devotees by placing the sadari (representative of the Lord’s feet) on their heads (normally this practice is followed only at Perumal temples).
As part of Vayu and Adiseshan’s fight over Kailasam, two parts of Kailasam are said to have fallen in this region – here and at Avoor (Pasupateeswarar temple).
On the bottom right of the inner side of the main gopuram, one can see two unique representations of Lord Siva’s 64 forms – those of Mahasadasivam (with 25 faces, and 52 arms); and eka-pada Trimurti depicting Lord Siva on one leg, with Brahma and Vishnu emerging from either side. Just as in Kasi, Siva – as Gananatha – is said to reside in the form of the Balipeetam.
The outer prakaram has a separate shrine dedicated to Ashtabhuja MahaKali (with eight arms).
It is also believed that the jata mudi (locks of matted hair) of Lord Siva is at the rear of the temple, and worship and prayers for pitrs are done here. Therefore, the temple worship practice here does not permit a full pradakshinam of the temple.
Muchukunda Chakravarti has worshipped at this temple.
The sthala vriksham – a vilvam tree – is regarded as the first of its kind on earth. It is therefore called the Aadi maram (first tree).
Arunagirinathar has sung his Tiruppugazh here.
The temple is built as a maadakoil, and therefore is connected to Kochchenga Cholan. The original temple superstructure is from the 9th century Chola period. In those times, this place was called Panchavanmadevi Chaturvedimangalam. Later additions to the temple’s structure are from the time of the Vijayanagara dynasty.
This temple is part of the Pazhayarai Pancha Krosha Sthalams, which is one out of four sets of Pancha Krosha Sthalams in Tamil Nadu. It is believed that visiting these six temples (Pazhayarai, Nallur, Tiruvalanchuzhi, Sakti Muttram, Patteeswaram and Avoor) along with this temple in a single day is be beneficial to devotees.
Nearby temples of note are:
Palaivananathar temple, Papanasam
Ramalingaswami temple, Papanasam
Gajendra Varada Perumal temple, Kabisthalam
Pasupateeswarar temple, Avoor
Also, Patteeswaram is located only about 6 km away, and has several temples of note.
Kumbakonam is the nearest town with good accommodation facilities.
Contact
Kannan Gurukkal: 04374 222863
கிரிசுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர், நல்லூர்
தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசம் வந்து, அங்கிருந்து மேலும் 1கிமீ சென்றால் அத்தாணி ரயில்வே கேட் வருகிறது. அந்த இடத்தில் வலங்கைமான் செல்லும் சாலையில் 1 கிமீ சென்றால் நல்லூர் உள்ளது. கும்பகோணத்திலிருந்து வருபவர்கள் இதுபோலவே வரலாம் அல்லது சுந்தரபெருமாள் கோயில் வழியாகவும் வரலாம். கும்பகோணத்திலிருந்து நகர பேருந்து உள்ளது. இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கோயில் வாசல் வரை செல்லும். திருநல்லூர் -பெருமணம் என்று ஒரு தலம் உள்ளது. அது வேறு, அத்தலம் தற்போது ஆச்சாள்புரம் என்று அழைக்கப்படுகிறது.
அமைப்பு:
கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில், கிராமத்தின் நடுவில் , அழகாக அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த கோயில். 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் வரவேற்கிறது. கோயிலுக்கு வெளியிலேயே தீர்த்தம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் கொடிமரம், விநாயகர் உள்ளார். சற்றே விசாலமான இடம். கொடிமரத்தின் வடக்கவே வசந்த மண்டபமும், தெற்க்கே அமர்நீதி நாயனார் துலையேறிய மண்டபமும் உள்ளது. வெளிப்பிரகாரத்தில் தென் பகுதியில் அஷ்டபுஜகாளி சந்நிதி உள்ளது. இது இவ்வட்டாரத்தில் பெரும் பிரசித்தி பெற்றது. உள்கோபுரம் 3 நிலைகள் உடையது. கொடிமரம் தாண்டி உள்ளே உள்சுற்றினுள் நுழைந்தால் காசி விநாயகர் காட்சியளிக்கிறார். விஸ்வநாதர் சந்நிதி உள்ளது. உள்ளே நடந்தால் அடுத்து வருவது சோமஸ்கந்தர் மண்டபம், உற்சவ நாட்களில் இங்கிருந்து ஸ்வாமி புறப்பாடு நடைபெறுகிறது. முருகன் சந்நிதி பொலிவுடன் உள்ளது. மேலும் சுற்றி வந்தால் அமர்நீதி நாயனார், அவர்தம் மனைவி மற்றும் குழந்தை உருவங்கள் உள்ளன. கோகேஷ்ட மூர்த்தங்கள் அவைக்குரிய இடங்களில் உள்ளன.
சுற்று முடித்து படிகளேறி கட்டுமலை மீது ஏறினால் நேரே தெரிவது அம்பிகை. அம்மனின் பெயர் கிரிசுந்தரி. தெற்கு பார்த்த நெடிய உருவம். அங்கேயே நம்மை கட்டிப்போயிடும் அழகு. அங்கிருந்தவாரே இடப்பக்கம் திரும்பினால் காட்சி தருவது மூலவர். இவ்வாறு அமைப்பு மிகப்பழைய கோயில்களில் தான் உண்டு என்று சொல்லப்படுகிறது. மூலவர் சற்றே பெரிய மூர்த்தம். ஒரு நாளில் இந்து முறை நிறம் மாறும் அமைப்பை உடைய திருமேனி 6 நாழிகைக்கு ஒரு முறை வேறு எங்கும் காணமுடியாத அதிசயம். ஆகவே தான் பஞ்சவர்ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவலிங்கத்தில் பல்வேறு துளைகள் உள்ளன.
இதன் காரணத்தை தலபுராணத்தில் காண்க.
சிவலிங்கத்தின் பின்னால், அகஸ்திய முனிவருக்கு திருமணக்கோலம் காட்டியருளிய கல்யாணசுந்தரேஸ்வரர் உருவம் சுதைவடிவில் உள்ளது. இருபுறமும் பிரம்மனும், விஷ்ணுவும் காட்சிதர, அகஸ்தியர் கைக்கூப்பி வணங்குவது போன்று உள்ளது. அற்புதமான காட்சி. ஆனால் இருட்டாக இருப்பதால் அர்ச்சகர் தீபாராதனை காண்பிக்கும் போது பார்த்தால் நல்லது. ஏனெனில் கட்டுமலையில் சிறு சிறு சாளரங்களே உள்ளன. மூலவருக்கு அருகில் அகஸ்திய லிங்கம் உள்ளது. மூலவரை சுற்றி வர குறுகலான சிறு பிரகாரம் உள்ளது. கோயிலின் கிழக்கு வாயில் மட்டுமே பயனில் உள்ளது. மேற்கு வாயில் பூட்டப்பட்டதே உள்ளது. காரணம் தெரியவில்லை.
தலபுராணம் :
புராண காலந்தொட்டு, சோழர் பாண்டியர் காலத்தியான வரை பல அற்புதங்கள் இத்தலத்தில் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.
கைலாய சிகரமே இத்தலம் :
ஒருகாலத்தில் வாயுதேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் தமக்குள்ள யார் வலியவர் என்ற போட்டி எழுந்தது. ஆதிசேஷன் கைலாய மலையை தன் ஆயிரம் கரங்களால் இறுக்கப் பற்றிக்கொள்ளவும், வாயுபகவான் அம்மலையை சண்டமாருதமாக அசைக்க முற்பட்டு வீசினார். அனைவரும் அஞ்சினர். ஆதிசேஷன் தன் பிடியை சற்றே தளர்த்திக்கொள்ள, வாயுதேவன் இரு சிகரங்களை பெயர்த்துக்கொண்டு வந்து நல்லூரில், அருகில் ஆவூரிலும் விடுத்தார் என்று சொல்லப்படுகின்றது. அதனாலேயே இத்தலம் தக்ஷிண கயிலை அல்லது தென்கயிலாயம் என்றழைக்கப்படுகிறது.
பிருங்கி முனிவர் வரலாறு :
பிருங்கி என்ற முனிவர் சிறந்த சிவ பக்தராவார். அவர் ஈசன் மட்டுமே உண்டு என்றும் அம்பிகையை நினையாமல் வாழ்ந்துவந்தார். அவருக்கு அம்பிகையின் அருமையை எடுத்துக்காட்டவேண்டி ஈசன் அவர் கனவில் அம்பிகையும் சிவனும் ஒன்றையே எனவும் , அவர்கள் பிரிக்க முடியாதவர்கள் என்றும், எங்கும் நீக்கமற நிறைந்தவர்கள் என்றும் உணர்த்தினான். இதனை சோதிக்க விழைந்த பிருங்கி முனிவர், சிவலிங்கத்தின் உள்ளும் பார்த்துவிடுவது என்று முடிவுசெய்தவராக, ஒரு வந்து வடிவம் எடுத்து லிங்கத்தின் உள்ளே துளையிட்டு பார்த்து வந்தார். எங்கு காணினும் சக்தியும் சிவமும் சேர்ந்ததே இருக்கக்கண்டு, வெட்கித்து தலை குனிந்து ஈசனிடமும் அம்பிகையிடமும் மன்னிப்புக் கேட்டார் என்பது வரலாறு. இதனாலேயே இன்றளவும், லிங்கத்தில் துளைகள் இருப்பது காணலாம்.
திருநாவுக்கரசருக்கு திருவடி சூடியது :
பட்டீஸ்வரத்திற்கு மிகச் சமீபத்திலுள்ள திருச்சத்தி முற்றத்திற்கு வந்த திருநாவுக்கரசர், அங்குரையும் சிவக்கொழுந்தீசரை வணங்கி, கோவாய் முதுகு என்ற பதிகம் பாடி தனக்கு திருவடி தீக்ஷை அருளுமாறு ஈசனை வேண்ட, அவரை ஈசன் நல்லூருக்கு வருமாறு பணித்தார். அங்கு அப்பருக்கு, உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்று அவர் சென்னிமிசைப் பாதமலர் சூட்டியருளினார். இச்செய்தியை நம்பியாண்டார் நம்பிகளும் தனது திருத்தொண்டர் திருவந்தாதியுள், நற்றவன் நல்லூர் திருப்பாதம் தன் சென்னிவைக்கப் பெற்றவன் என்று குறித்துள்ளார். இதையொட்டியே இத்தலத்தில் வைணவக் கோயில்களைப் போன்று இத்தலத்தில் சடாரி வைக்கப்படுகிறது.
அமர்நீதி நாயனார் கதை :
63 நாயன்மாருள் ஒருவரான அமர்நீதியார் என்பவர் இத்தலத்தில் வாழ்ந்துவந்தார். இறைவனை துதிப்பதுவும், அடியாரைப் பேணுதலுமன்றி வருதுவும் அறியாதவர் அவர். அவருக்கயிற்றார்ப் போல் நற்குல மங்கையொருவள் மனைவியாகவும், சிவப்பழமாகவொரு மகனும் இருந்தான். நல்லூருக்கு வரும் அடியார்களை பேணி, உபசரித்து அனுப்புவதையே அவர் தொண்டாகக்கொண்டிருந்தார். அவ்வாறிருக்குங்கால், அவரை சோதிக்க எண்ணிய ஈசன், ஒரு வயதான கிழவர் வேடத்தில் நல்லூரில் அவர் வீட்டிற்கு வந்தார். சிவனடியாரைக் கண்ட அமர்நீதியார் பெரும்மகிழ்ச்சியுற்று , அவரை நோக்கி, பெரியவரே, தங்களின் வருகையால் இவ்வில்லம் மிகவும் புண்ணியம் செய்தது. தங்களுக்கு எவ்வகையில் உதவ வேண்டும் என்று கட்டளையிட்டால் செய்துமுடிக்கத் தயாராக இருக்கிறேன் சொல்ல வேண்டும் என்று பணிந்து கூறினார் .
அதற்கு ஈசனோ, தான் கொண்டு வந்த ஒரு கந்தல் கோவணத்தைக் கொடுத்து அதனை பாதுகாக்குமாறு கூறினார். அமர்நீதியாரும் அதனை வாங்கி பத்திரமாக பாதுகாத்து வைத்தார். குளத்திலிறங்கி குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்ற ஈசன் தன் திருவிளையாடலைத் துவக்கினார். மாயையால் அக்கோமணத்தை மறையச்ச செய்தார். திரும்ப ஒன்றுமே நடவாதது போல் அமர்நீதியாரிடம் வந்து தன் கோவணத்தைத் தருமாறு கேட்டார். அமர்நீதியர் அதனை எடுத்துவர உள்ளே சென்று பார்க்கும்போது அது காணாதது கண்டு தவித்தார். ஈசனாகிய கிழவரிடம் மிகவும் வருத்தமுற்றவராய் வந்து, ஐயனே மன்னிக்கவேண்டும், எனது இல்லத்திலிருந்து கோவணம் எங்கேயோ தொலைந்து விட்டது. நான் உங்களுக்கு புதிய கோவணம் ஒன்று தருகிறேன் என்றார். பிடிவாதமாக இருந்த கிழவரோ, தனது கோவணம் ஒன்றையே வேண்டும் என்றும், அமர்நீதியார் அதனை எங்கேயோ ஒளித்துவைத்துவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டினார் மற்றும் அக்கோவணத்தின் மதிப்பிற்கு எதனைக் கொடுத்தாலும் ஈடாகாது என்றார்.
அஞ்சியவாறு நின்றிருந்த அமர்நீதியார், கிழவரிடம் மன்னித்தருள வேண்டினார். தனக்கொரு உபாயம் செல்லுமாறும் வேண்ட, ஈசன் தன்னிடம் அதுபோன்று மற்றுமொரு கோவணம் இருப்பதாகவும், அதற்கு ஈடான பொருள் தந்தால் மன்னிப்பட்டு விடுவதாகவும் கூறினார். மகிழ்வுடன் சம்மதித்த அமர்நீதியார் அதற்கு ஏற்பாடு செய்தார். ஈசன் தனது ஒரு கோவணத்தை ஒரு துளையில் வைக்க, அமர்நீதியார் பொன்னும் பொருளும் அணிகலன்களும் மற்றுமொரு துளையில் வைத்தார். வைக்க வைக்க கோவணம் இருந்த பக்கம் தாழ்ந்ததே இருந்தது. தனது அத்தனை உடைமைகளையும் வைத்த பின்னும் துளை சமமாகாததால், நல்லூர் ஈசனை வணங்கி, தானும் தன் குடும்பத்தினரும் துளையில் ஏறப்போயினர். அப்போது கிழவர் மறைந்து, வெள்விடையேறி ஈசனும், உமா தவியும் காட்சியளித்தனர். அமர்நீதியாரும், குடும்பத்தினரும், சுற்றத்தாரும் அதுகண்டு பேரானந்தமடைந்து ஈசனுடன் கலந்து இன்புற்றனர். இவ்வைதீகம் இன்றும் அமர்நீதியார் வழிவந்த குலத்தோன்றல்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அமர்நீதியார் இல்லம், கோயிலுக்கு எதிரே சப்த சாகர குளத்தின் கரையில் மடமாக உள்ளது. சற்றே சிதிலமடைந்துள்ளது.
தேவர்களும், முனிவர்களும், தருமன், குந்திதேவி ஆகியோர் வழிபட்ட தலம் :
இத்தலத்திலுள்ள தீர்த்தம் மிகவும் பெருமை உடையது. குந்தி தேவி கர்ணனை பெட்டியில் வைத்து ஆற்றிடையே விட்ட பாவத்திற்கு பிராயச்சித்தமாக தெளமியா முனிவர் சொற்படி இத்தலத்தை அடைந்தாள். இத்தலத்திலிருந்த ரோமச முனிவரிடம் தனக்கு விமோசனம் கிடைக்க வழிகூறுமாறு வேண்டினாள். அவரும் குந்தியைப்பார்த்து, நாளை மாசி மகம். ஏழு கடலிலும் ஸ்நானம் செய்து வந்தால் உன் பாவம் தீரும் என்றார். நாளை எங்கனம் ஏழு கடல்களிலும் ஸ்நானம் செய்ய முடியும் என்று குந்தி ரோமசரைப் பார்த்து கேட்டாள். அதற்கு அவர் இறைவன் அருளால், 7 கடல்களிலும் நீராடினால் உண்டாகும் புண்ணியம் இத்தீர்த்தத்தில் நீராடினால் உனக்கு கிட்டும் என்றார். அவ்வாரறே குந்தி நீராடி சாப விமோச்சனம் பெற்றாள் என்று கூறப்படுகிறது. இதனாலேயே இத்தீர்த்தம். சப்த சாகர தீர்த்தம் என்று கூறப்படுகிறது. முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரனிடம் இருந்து தியாகராஜப்பெருமானைப் பெற்று திருவாரூர் செல்லும் போது இத்தலத்தில் 3 நாட்கள் இருந்து தியாகராஜப்பெருமானை எழுந்தருளுவித்து வழிபட்டான் என்றும் கூறப்படுகிறது .
இதர தகவல்கள் :
ஸ்வாமியைக் காண நான் சென்றிருந்த 3 முறையும் 3 வண்ணங்களைக் கண்டு தொழும் பாக்கியம் கிடைத்தது. ஒருமுறை கரும்பச்சை நிறத்திலும் , ஒருமுறை தங்கமயமாகவும் , ஒரு முறை தாமிர நிறத்திலும் காட்சியளித்தார். தங்கம் அல்லது தாமிரக்காப்பு சாத்தினாள் எவ்வாறிருக்குமோ அவ்வாறு இருந்தது. வேறெங்கும் காணமுடியாத அதிசயம். அனைவரும் ஒருமுறையேனும் கண்டு தொழ வேண்டிய பதி. இக்கோயிலின் எதிரே உள்ள சப்த சாகர தீர்த்தத்தில் உள்ள 12 படித்துறைகளிலும் நீராடி ஸ்வாமியை 12 முறை வளம் வருவோர் உடர்ப்பிணி மற்றும் பிறவிப்பிணியும் நீங்கப்பெறுவர் என்று கூறப்படுகிறது. கோச்செங்கட்சோழன் கட்டுவித்த கட்டுமலைக்கோயியில், இவ்வகைக் கோயில்கள் யானையாராகி கோயில்கள் எனப்படும். ஏன் யானை ஏறமுடியாதவாறு கட்டுவித்தான் என்பதற்கு திருவானைக்காவல் தலபுராணத்தில் விடை உள்ளது.
அருகிலுள்ள கோவில்கள் :
வலங்கைமான் செல்லும் சாலையில் 7 கிமீ கிழக்கே போனால் ஆவூரும் ,
அதற்கு சற்று முன்னர் கோவிந்தகுடியும்,
மேற்கே தஞ்சை செல்லும் சாலையில் 7 கிமீ திருப்பாலைத்துறையும்,
மேற்கே தஞ்சை செல்லும் சாலையில் பாபநாசம் சென்று அங்கிருந்து 4 கிமீ சென்றால் திருக்கருகாவூரும்,
வடகிழக்கே கும்பகோணம் செல்லும் சாலையில் 5 கிமீ வந்தால் திருவலஞ்சுழியும்,
ஆவூருக்கு கிழக்கையே 3 கிமீ பட்டீஸ்வரமும் , அதற்கடுத்த தெருவில் திருச்சத்திமுற்றமும்,
வடகிழக்கே கும்பகோணம் செல்லும் சாலையில் 8 கிமீ தாராசுரமும்,
மேலும் 2 கிமீ சென்றால் கும்பகோணத்தில் ஆதி கும்பகேஸ்வரர் கோயில் மற்றும் குடந்தை கீழ்க்கோட்டமாகிய நாகேஸ்வரன் கோயில் , மற்றும் குடந்தைக்காரோணமாகிய சோமேஸ்வரன் கோயிலும் உள்ளன.