Soundharanayagi sametha Satchinathar, Avalivanallur
Location :
Availvanallur is located south of Kumbakonam, and about 12km east of Alangudi, the famous guru sthalam.
Sthala puranam and temple information :
This is one of the Pancha Aranya Kshetrams (or five forest temples) near Kumbakonam, and according to sthalam puranam, the recommended route is to start a pilgrimage in the morning, and visit the 5 temples on the same day, in the following order (for pujas): Tirukarukavur (ushatkala puja, early morning), Avalivanallur (kalasandhi puja, morning), Haridwaramangalam (uchikala puja, midday), Alangudi (sayaratchai, evening) and Tirukollampudur (arthajamam, night). However, in today’s terms, these temples are within a total driving distance of about 36km, and can quite easily be completed in about 4-5 hours, including the temple visit time.
A temple priest who was a devotee of Lord Siva, got married to a good-looking girl and left for Kasi to pray to Lord Siva. When he was away his wife was affected by smallpox and lost her eyesight. Her younger sister who was equally good-looking, came to nurse her during the illness. The devotee returned after completing all the rituals but refused to accept the sick girl as his wife, instead stating that the sister was in fact his wife. The sick girl prayed to Lord Siva fervently to save her from the situation. On hearing her plea, Lord Siva appeared with Parvathi and explained to the devotee that the sick girl was the real wife and the sister was not. The Lord also advised the wife to bathe in the temple tank on the Amavasya (new moon) day in the Tamil month of Thai (January-February), which she did, and regained her beauty. Since the Lord stood witness for the wife, he is called Satchinathar (Satchi / Sakshi in Tamil means witness).
Those with skin diseases and poor eyesight are advised to pray here to get relief from their conditions.
Lord Vishnu prayed here to obtain Lord Siva’s pardon for digging the earth near the latter’s feet at Haridwaramangalam.
Sage Kashyapa, Sage Agastyar, Sage Kanva, Suryan, and Murugan have prayed here.
Sambandar and Appar have visited and sung here.
சௌந்தரநாயகி சமேத சாட்சிநாதர், அவளிவநல்லூர்
சோழநாட்டு – தென்கரைத் தலம்.
கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் உள்ளன. கும்பகோணத்திலிருந்து அம்மாப்பேட்டை செல்லும் நகரப் பேருந்து இத்தலத்தின் வழியாகச் செல்கிறது. தஞ்சையிலிருந்து அரித்துவார மங்கலம் செல்லும் நகரப் பேருந்தும் இத்தலத்தின் வழியாகச் செல்கிறது. அரித்துவார மங்கலத்திலிருந்து 3 கி. மீ. மன்னார்குடிச் சாலையில் சென்றால் இவ்வூரையடையலாம். சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது.
சிறப்பு :
திருமால், காசிபமுனிவர், முருகன், சூரியன். அகத்தியர்,கண்வமகரிஷி ஆகியோர் வழிபட்ட தலம். தீர்த்தம் -சந்திரதீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ளது. தலமரம் – பாதிரி, மதிலுக்குப் பக்கத்தில் உள்ளது. சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற தலம்.
அவள் – இவள் – நல்லூர் என்பது ஊர்ப் பெயர்.
இறைவன் – சாட்சிநாதர் , இறைவி – சௌந்தரநாயகி; சௌந்தரவல்லி.
கோவில் அமைப்பு :
ராஜகோபுரமில்லை. கோயில் முகப்பு கிழக்கு நோக்கியது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. நின்ற திருக்கோலம். வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் ஒருபுறமும். துவார பாலகர்களாக, ‘ஆட் கொண்டார்’, ‘உய்யக்கொண்டார்’ உருவங்களும் உள்ளன. உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். மூலவர் – சுயம்பு மூர்த்தி. கிழக்கு நோக்கியது. உள்ளும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால், தலவரலாற்றின் படி சாட்சி சொன்ன நிலையில் சாக்ஷிநாதராக -ரிஷபாருடர்,பார்வதி காட்சி தருகின்றனர்.
உள்சுற்றில் விநாயகர், நால்வர்,சந்நிதிகள் பரவையாருடன், கண்வமுனிவர், வீரபத்திரர், சப்தகனனியர், அறுபத்துமூவர் மூலத் திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி,நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ்அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. காலபைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக; அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.
தை அமாவாசையன்று பிரம்மோற்சவம் ஏகதின (ஒருநாள்) உற்சவமாக நடத்தப்படுகின்றது. 1960-ல் கும்பாபிஷேகம் நடை பெற்றுள்ளது. மூன்றாம் இராசேந்திரனின் கல்வெட்டுக்களில் (கி. பி. 1246-1279) இக்கோயிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. கல்வெட்டில் இறைவனின் பெயர் ‘தம்பரிசுடையார்’ என்று குறிக்கப்படுகிறது.
தலப்பெருமை :
கந்தபுராணத்தில் சேத்திரகாண்ட வைபவத்தில் சனத்குமார சம்ஹிதையில் நாரத மகா முனிவர்க்குச் சனத்குமார முனிவரால் மிகவும் விளங்கச் சொல்லப்பட்டது. இத்தலம் மிகவும் புராணப் பெருமையுடையது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்னும் இம்மூன்றில் சிறப்புடையது. தேவார ஆசிரியர்கள் மூவருள் அப்பர், சம்மந்தர் ஆகிய இவர்கள் இருவராலும் பாடப்பெற்ற பெருமையுடையது. திருமால் பிரமன், குமரன் சூரியன் கண்வமுனிவர், அகத்தியர் விஷ்ணுசர்மா, வீரகாந்தன், சுசீலன், இந்திர சோழன், விக்கிரவர்மன் முதலியோர் வழிபட்டு அருள் பெற்ற திருத்தலமாகும்.
திருமால் – பெண் பன்றியாக உருவெடுத்துத் தன் கொம்பை இழந்துப் பின் வழிபட்ட பெருமையுடையது.
பிரமன் – இவர் தம்மைத் தோற்றுவித்துப் படைத்தல் தொழிலை அருளி இத்தலத்தில் உறைந்தருளும் பெருமானை எண்ணினார். அவர்பால் பக்திமீதூர இங்கு பூசித்துப் போற்றினார். இறைவன் திருவருள் பெற்றனர்.
முருகன் – இங்குப் பெருமான் அழைத்திட முன் வந்து நின்றனர். பன்றி உருக்கொண்டு திரிந்த திருமாலை யானையின் ஒற்றைக் கொம்பை ஒடித்து அகந்தையை முருகப்பெருமான் அழித்து இறைவன் முன் கொண்டு வந்து சேர்த்து , ஒடித்த கொம்பை இறைவனுக்குச் சாத்தி வழிபட்டார். தன் வேலாயுதத்தால் முருகப் பெருமான் ஆலயத்தின் எதிரே சந்திர புட்கரணியைத் தோற்றுவித்து அதில் நீராடி இறைவனை வழிபட்டார்.
சூரியன் – இவர் ஆவணி ஞாயிறு இங்குற்றுச் சந்திரப் புட்கரணியில் நீராடி ஒரு சிவலிங்கத்தைத் தாபித்துப் பூசித்து அருளுற்றனர்.
கண்வர் – இறைவரை வழிபட்டு அண்மையில் வசித்து வந்தார். அகத்தியர் அங்குவர அவரை வழிபட்டார். அவருடைய அருள்நோக்கால் சூரிய மந்திரம் உபதேசிக்கப்பெற்றார். அதனைத் தியானம் பண்ணச் சூரியன் தோன்றினார். சுக்கில யசுர்வேதத்தை உபதேசித்தார். இக்காரணம் பற்றியே சுக்கில யசுர்வேதம் கண்வர்சாகை என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. முனிவர் தங்கியிருந்த இடம் முனியூர் என்னும் பெயருடன் திகழ்கிறது.
அகத்தியர் – இவர் கண்வ முனிவருக்கு மந்திர உபதேசம் புரிந்திட வந்தவர். இங்குற்றுத் தம்பரிசுடையாரை வழிபட்டு அவரருள் பெற்றார்.
வீரகாந்தன் – இவர் காஞ்சி மன்னர் அரசுரிமையை இழந்த நிலையில் வைகாசி நிறைமதி நாளன்று இங்குற்றுப் புட்கரணியில் நீராடி இறைவரை வழிபட்டனர். அவரருள் பெற்றனர்.
விக்ரமன் – இவன் ஓர் அரசன். இவனுடைய மகனைக் கள்வர்கள் கடத்திச் சென்றுவிட்டனர். அதனை அறியாது தேடினர். காணவில்லை. புத்திர சோகத்தால் வாடினர். வருந்தினர். ஆடி அமாவாசையன்று இங்குற்று நீராடி இறைவரை வழிபட்டனர். அவரருள் மகனை மீண்டும் பெற்றனர்.
பனைப்பழுத்த நல்லூரான வரலாறு -ஆதியில் இவ்வூரின் பெயர் நல்லூர். எங்கோ சுற்றித் திரிந்த ஒளவையார் அங்குற்றார். மிகுந்த பசி. அருகில் ஒரு குடிசை. அதில் ஒரு சிறுமி. பெற்றோர் வேலைத்தலை சென்றிருந்தனர். சிறுமியிடம் தன் பசி தெரிவித்தார். சிறுமி தன்னிடமிருந்த, தனக்காகப் பெற்றோர் வைத்துவிட்டுச்சென்ற கம்பங்கூழைக் கரைத்து ஒளவையாரின் பசி தீரக் கொடுத்தாள். உண்ட ஒளவையார் உவகை எய்தினார். அது காலை வேலைத் தலையிலிருந்து வந்த பெற்றோரிடம் அப்பெண்ணின் திருமணத்தைத் தனக்குத் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு சென்றார். அவ்வண்ணமே அச்சிறுமியின் திருமணம் ஒளயைாருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒளவையார் அத்திருமணத்திற்கு முடியுடை மன்னர் மூவருடன் வந்திருந்தார். அதுகாலை அம்மூவேந்தர்களும் அங்குக்கிடந்த பனந்துண்டங்களைப் பார்த்து இப்பனந்துணங்கள் எங்களுக்குப் பழந்தருமாறு பாடுக என்று ஒளவையாரை வேண்ட அவர் பங்குக்கு மூன்று பழந் தர வேண்டும் பனந்துண்டமே என்று பாட அத்துண்டங்கள் ஒன்றாக இணைந்து மரமாகிக் காய்காய்த்துப் பழங்களை நல்கின. அன்று முதல் அவ்வூர் பனைபழுத்த நல்லூராயிற்று. அவ்வூர்க் கிராம தேவதையைப் பனையாத்தாள் என்று மக்கள் அழைக்கலாயினர்.
அவளிவணல்லூர் ஆன வரலாறு :
இவ்வூரில் ஆதி சைவ சிவாச்சாரியார் ஒருவர் இருந்தார். அவர் முப்போதும் இறைவன் திருமேனியைத் தீண்டும் உரிமை பெற்றார். அவருடைய மனைவியார் திருமகளை ஒத்த பேரழகு உடையவர் இவர்கட்கு இரு பெண்கள். மூத்தவள் சுசீலை. பேரழகி; ஆறிரு பருவத்தாள் ஆயினள். அவளைத் திருவலஞ்சுழியில் வாழ்ந்து வந்த விஷ்ணுசர்மா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். தக்க சீர்வரிசைகளுடன் மகளைப் புக்ககம் அனுப்பிவைத்தார். இருவரும் இல்லறத்தை இனிதே நடத்தினர். விஷ்ணுசர்மா வடநாட்டுக்கு யாத்திரை செல்ல விரும்பினார். மனைவியை பிறந்தகம் அனுப்பி விட்டு வடநாட்டுயாத்திரையை மேற்கொண்டு வடநாடு சென்று விட்டார். இமயம் முதல் குமரி வரையுள்ள சிவத்தலங்கள் அனைத்தையும் தரிசித்தார். பின்னர் திரும்பித் தன்னூருக்கு வந்து சேர்ந்தார்.
இடையில் இவருடைய மனைவி சுசீலை அம்மைநோயால் பீடிக்கப் பெற்றுக் கண்கெட்டு அழகிழந்து அவல நிலையிருந்தாள். அவள் தங்கை வளர்ந்து பெரியவளாகிப் பேரழகியாய்ப் பொலிவுற்று விளங்கினாள். மனைவியை அழைத்துச் செல்வந்த விஷ்ணுசர்மா மைத்துனியைத்தன் மனைவி என வாதானடினார். யார் சொல்லியும் கேட்கவில்லை. அரசனிடம் முறையிட்டார். அரசன் சிவாச்சாரியாரக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தான். வேறுவழியின்றி நள்ளிரவில் சிவாச்சாரியார் ஆலயத்துள் புகுந்து சிவலிங்கத்தைக்கட்டிப்பிடித்துக் கொண்டு இதற்கு வழி வகுக்கவில்லை என்றால் லிங்கத்தின் மீது என்தலையை மோதிக்கொண்டு இறந்துவிடுவேன் என்று கூறி மயக்கமுற்ற நிலையில் இருந்தாரர். அதுபோது இறைவர் அவரது கனவில் தோன்றித் தம் ஆலயத்திற்கு மறுநாள் அரசனையும், ஊர் மக்களையும், தன் புதல்விகளையும், விஷ்ணுசர்மரையும் அழைத்துக் கொண்டு வருமாறு கூறினார். அங்ஙனமே மறுநாள் அழைத்துக் கொண்டு வந்து ஆலயத்தைக் குறுகும்வேளை எதிரே தண்டு அகமண்டலங்களுடன் முனிவர் ஒருவர் வரக் கண்டு எல்லோரும் அவரடியில் வீழ்ந்து வணங்கினர்.
அம்முனிவர் விஷ்ணு சர்மாவைப் பார்த்து ‘நீர் அந்தணராய் இருந்தம் ஏன் இவ்வாறு கோபித்துக் கொள்கிறீர்’ என்று கேட்டார். அதற்கு விஷ்ணுசர்மர் தன் குறையைக் கூறினார். உடனே முனிவர் சுசீலையும், விஷ்ணுசர்மரையும், மற்றோரையும் சந்திரப் புட்கரணியில் நீராடி வருமாறு பணித்தார்.என்ன ஆச்சரியம் நீராடியவுடன் சுசீலை அன்று மணமேடையில் எப்படிக் காட்சியளித்தாளோ அப்படிப்பட்ட பேரழகுடன் திகழ்ந்தாள்.
பெயர்காரணம் :
முனிவர் விஷ்ணு சர்மாவைப் பார்த்து ‘அன்று நீர் அக்கினி சாட்சியாக அப்பு வார்த்துக் கரம் பற்றிய ‘அவள் இவள்’ என்று சென்று கூறினார். கூறிய அளவில் முனிவரை யாரும் காணவில்லை. அவள் இவள் என்ற சொற்கள் எட்டுத்திக்கும் எதிர் ஒலித்தன. இறைவர் விண்ணில் வெள்ளேற்றின் மீது இறைவியோடு இரந்து எல்லோர்க்கும் காட்சி அளித்தார். அன்று முதல் அவ்வூரின் பெயர் அவளிவணல்லூர் பற்றுக என்றும், சாட்சி சொல்லப்பட்டமையால் சாட்சிநாதபுரம் என்றும் வழங்கப்படலாயிற்று. சான்று பகர்ந்த காரணத்தால் இறைவருக்குச் சாட்சிநாதர் என்ற திருப்பெயர் வழங்கலாயிற்று. இத்தலத்திற்குப் ‘புல்லாரண்யம்’, ‘சாட்சிநாதபுரம்’,’பாதிரிவனம்’ எனப் பலபெயர்களுண்டு.