Vandamar Poonguzhali Sametha Brahmapureeswarar, Tirukkuvalai
Location :
Tirukkuvalai is located about 30 kms from Tiruvarur and from Nagapattinam.
Sthala puranam and temple information :
This is one of the Sapta Vitanga Sthalams which house one of the maragatha Lingams that Muchukunda Chakravarti was able to obtain after his trials with Indra. This sthalam represents the Bhringa Natanam (dance of a bee hovering over flowers).
After Brahma was cursed by Lord Siva for lying having seen the top of the pillar of fire, he lost his role as creator, which upset the routine of the planets (grahas). Lord Brahma dug up a Theertham (Brahma Theertham) and made a Lingam with sand, and prayed to it for pardon. As he was pardoned here, the Lord takes the name Brahmapureeswarar at this temple. As the moolavar murti is made of sand, abhishekam is done by covering it with a vessel (kuvalai, in Tamil), and hence the town gets the name Tirukuvalai. On Amavasya day alone, the lingam is worshipped with sambrani deepam (benzoin).
Bheema, the Pandava, was relieved of the Brahmahathi dosham from killing Bakasuran, by praying to the Lord here. Agastyar, the Pandavas, and the Navagrahas are said to have also worshipped at this temple. The lingam worshipped by Sage Agastyar is in the prakaram.
This temple has the rarity of Ambal facing east, instead of south. Vinayakar here is known as Thyaga Vinayakar.
The temple puranam is closely connected with that of the nearby Sundareswarar temple at Kundaiyur. The Lord arrange for Sundarar to receive in Tiruvarur, the grains that he received from Kundaiyur Kizhaar.
This event is celebrated as the Sundarar Utsavam every year on Masi Magham.
There are inscriptions in the temple dating to the time of Kulothunga Chola I and Sundara Pandiyan.
Other information for your visit :
The Sundareswarar temple at Kundaiyur is located just 1km from this temple, and is a must-visit for its own sthala puranam. It is also a Tevaram Vaippu Sthalam.
வண்டமர் பூங்குழலி சமேத ப்ரம்மபுரீஸ்வரர், திருக்குவளை
இது மக்கள் வழக்கில் திருக்குவளை என்று வழங்கப்படுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்மலையை எடுத்துச் செல்ல ஆள்வேண்டிப் பாடிய சிறப்புக்கு உரியதாய் விளங்குவது இத்தலம். திருவாரூர் எட்டிக்குடி சாலையில் எட்டிக்குடிக்கு முன்னால் உள்ள தலம். திருவாரூரிலிருந்து 19 கி. மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரில் இருந்து அடிக்கடி பேருந்து உள்ளது.
திருவாருருக்கு அடுத்தபடியாக தியாகேசப் பெருமாள் இத்தலத்தில் சிறந்து விளங்குகிறார். இந்தத் தேவஸ்தாளம் தியாகராஜ சுவாமி தேவஸ்தானம் என்று வழங்குகிறது. சப்த விடங்கத்தலங்களுன் ஒன்று. (அவனி விடங்கத்தலம், பிருங்கநடனம்) பிரமன் வழிபட்ட தலம். அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது. பகாசுரனைக் கொன்றதனால் உண்டான பாவத்தை (ப்ரம்மஹத்தி தோஷம்) வீமன் இங்குப் போக்கிக் கொண்டான் என்பது வரலாறு. முன்கோபுரத்தில் பகாசுரன் உருவமும் ப்ரம்மஹத்தி உருவமும் உள்ளது.
இறைவன் – பிரமபுரீசுவரர், கோளிலி நாதர். திருவாரூரில் பெருமாள் புற்றிடங் கொண்டவராக விளங்குதல் போல இறைவன் வெண்மணலால் சிவமூர்த்தமாகக் காட்சி தருகிறார். இறைவி – வண்டமர் பூங்குழலி.
தீர்த்தம் பிரமதீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ளது.தலவிருக்ஷம் தேற்றா மரம் .
மூவர் பாடல் பெற்ற தலம்.
இத்தலத்திற்குப் பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றா மர வனம்) , புஷ்பவனம், தென்கயிலை எனப் பல பெயர்களுண்டு. நவக்கிரகங்கள் முதலியோர்க்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால் கோளிலி என்று பெயர் பெற்றது. “கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமாள்” ஞானசம்பந்தர் வாக்கு. இங்குள்ள தியாகராஜப் பெருமானின் பெயர் – ஊழிப்பரன், அவனி விடங்கத் தியாகர். அம்பிகை – நீலோற்பலாம்பாள். விநாயகர்- தியாகவிநாயகர், முருகன் – சுந்தரவடிவேலர்.
இத்திருக்கோயில் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய சந்நிதி. அழகான ராஜகோபுரம். உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம். துவஜஸ்தம்பம் தாண்டி இரண்டாம் உற்சவமூர்த்தியாகப் புறப் பாடாவது அறியத்தக்கது.
ஞானசம்பந்தர், தம் திருப்பதிகத்தில்; கோள்களின் தீமையகலும் குறிப்பினையும்,மார்க்கண்டேயன், சண்டீசர்க்கு அருள் செய்தது. பாண்டவர்கள் வழிபட்டது. பாணபத்திரர்க்கு, அர்ச்சுனனுக்கு, நமி நந்தியடிகளுக்கு, இராவணனுக்கு அருள் புரிந்தது போன்ற குறிப்புக்கள் உள்ளன.
திருக்கோளிலிச் சிறப்பு :
1. திருக்கோளிலி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச் சிறப்பும் உடையது.
2. தேவாரப் பாடல்பெற்ற 275 தலங்களில் காவிரித் தென்கரையில் விளங்கும் 123 ஆவது தலம். இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் பதிகம்ஒன்று. திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகம் ஒன்று ஆகிய நான்கு திருப்பதிகங்களும் மற்றும் 11ஆம் திருமுறையில் பரணர்பாடிய பாடலும் சேக்கிழார் பெருமான் பாடிய 12ஆம் திருமுறைப் பாடல்களும் தியாகராஜசுவாமி உலாவும் உள்ளன.
3. நவக்கிரகங்களால் ஏற்படுகின்ற துயரங்களை நீக்குகின்ற பதி. இத்தலத்தில் நவக்கிரகங்கள் வக்ரமின்றி ஒரே வரிசையில் தெற்கு நோக்கி உள்ள அமைப்பு உடையது.
4. இத்தலம் சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. தியாகராஜ மூர்த்தியின் திருநாமம் ஊழிப்பரன், அவனிவிடங்கத்தியாகர். விநாயகர், தியாகவி நாயகர். முருகப்பெருமான் சுந்தர வடிவேலர். இப்பதியில் தியாகராஜப்பெருமான் பிருங்க நடனம் ஆடுகின்றார். வண்டு மலர்களுக்குள் குடைந்து செல்வது போன்ற காட்சியை இந்நடனத்தில் காணலாம். மயனால் செய்து தேவேந்திரனால் பூசிக்கப் பெற்று முசுகுந்த மன்னனால் மண்ணுலகில் கொண்டுவரப்பெற்ற மூர்த்த மாகும்.
5. சுந்தரமூர்த்தி நாயனாருக்காக குண்டையூர்கிழார் கொடுத்த நெல்மலையைத் திருவாரூருக்கு எடுத்துச்செல்ல இறைவன் பூதங்கள் பல கொடுத்த பதி.
6. இத்தலத்து இறைவனை பிரம்மதேவர், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர், நவக்கிரகங்கள், ஹேமகாந்த மன்னன் உள்ளிட்ட பலர் பூஜித்து வரம்பெற்றுள்ளனர். இத்தலத்து விடங்கருக்கு காலைசந்தி மணி 9. சாயரக்ஷை மணி 6. ஆகிய இருவேளை களில் அபிஷேகம் நடைபெறும்.
7. இத்தலத்துமூலமூர்த்தி வெண்மணலால் பிரம்மனால் கூப்பிச் செய்து பூசிக்கப்பெற்றது. வெண்மணலால் ஆனதால் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் அர்த்தஜாம வழிபாட்டில் சாம்பிராணித் தைலத்தை அறுகம்புல்லால் தோய்த்து திருமேனிமீது தடவுவர். மற்றைய அபிஷேகங்கள் குவளை சார்த்தியே செய்யப்பெறுகின்றது.
8. இத்தலம் பஞ்ச பாண்டவர்களால் வழிபடப் பெற்றது.9. பீமன் பகாசுரனைக் கொன்ற பாவத்தினால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் நீங்கப்பெற்றது. இத்தலம் பிரமஹத்தி தோஷ நிவாரணத்தலம்.
10. இத்தலத்தில் பிர்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம் அகத்தியர் தீர்த்தம். விநாயக தீர்த்தம் சந்திர தீர்த்தம். சந்திரன் நதி முதலியன உள்ளன.
11. இத்தலத்தினை பிரம்மதபோவனம், சுதகாரண்யம் (தேற்றாமரவனம்) புஷ்பவனம்,தென்கயிலை, திருக்குவளை, திருக்கோளிலி என்றும் அழைப்பர்.
12. இத்திருத்தலத்தில் தியாகராசரின் பிரதிநிதியாக சந்திரசேகரர் புறப்பாடு ஆவது குறிப்பிடத்தக்கதாகும்.
13. வைகாசி வசந்த உற்சவமும், கார்த்திகை மாதத்தில்வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தலும் மார்கழியில் அகத்திய தீர்த்தம் கொடுத்தருளலும், தைப்பூசத்தில் இந்திர தீர்த்தம் கொடுத்தருளலும். மார்கழித்திங்களில் ஆருத்ராதரிசனமும், தியாக ராஜப்பெருமான் வசந்த மண்டபத்தில் காட்சியளித்தலும் மாசிமாதம் மகம் நாளில் நெல் மஹோற்சவமும் திருவிழாக்களாக நடைபெறுகின்றன