Soundharanaayagi sametha Kokileswarar temple, Thirukkuzhambiyam
called Thirukkozhambam by locals now, this beautiful temple can be reached from either Kumbakonam or Mayavaram. From Kumbakonam, one should travel on Karaikal Road, take a left from S. Pudhur, and go north for about a mile. also reachable from Narasingampettai on Kumbakonam-Mayiladuthurai Road. about 20 km from Kumbakonam.
Sthalapuranam :
Ambal did penance in the form of a cow here to get together with Shiva. It is said the foot of the cow slipped on the lingam and brought the lingam up from where it was buried. The shoe of the cow is still visible on the lingam.
Indra worshipped the Lord here. Chora King Paranthaga’s wife is said to have built the temple.
One Vidhyadharan (a group like the Gandharvas and Kinnaras) named Chandhan got cursed by Indra to become a cuckoo. To get rid of that, he came to Thirukkulambiyam and worshipped Shiva. Hence, the Lord is called Kokileswarar. In Sanskrit, kokilam means cuckoo.
Nearby temples:
Thiruvavaduthurai is 3 km to the north; Vaigal Temple is 5 km to the northwest; Konerirajapuram is 2 km to the south; Karuveli is 8 km to the south; and Thiruveezhimizhalai is 10 km to the south-east.
One vaipu sthalam by the name of Peravur is also nearby.
Other details:
The temple is not open at all times due to poor visitation. only open around noon when the priest comes to Pooja. He comes from Thiruvavaduthurai. priests number 93677 28984.
Sung by Appar and Sambandar in Thevaram.
The first time we saw the temple, it was in very poor shape. Urchava Vigrahams were preserved in another temple. Now it is seeing some renovation. One can see some plant growth on the Raja Gopuram as well. Think of other parts of the temple. It is advised that the priest be called beforehand and notified of the visit.
Address
Soundharanaayagi Sametha Kokileswarar Temple,Thirukkurambiyam
Pincode: 612 205
Thiruvidaimarudhur circle
Thanjavur district.
சௌந்தர்ய நாயகி சமேத கோகிலேஸ்வரர் திருக்கோவில், திருக்குழம்பியம்
திருக்குழம்பியம் சோழநாட்டு(தென்கரை)த் தலம் மக்கள் வழக்கில் திருக்குழம்பியம் என்று மாறியுள்ளது. கும்பகோணம் – காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத் துள்ள “எஸ். புதூர்” வந்து, அங்கிருந்து திருக்குழம்பியத்திற்குச் செல்லும் தனிப்பாதையில் சென்றால் கோயிலையடையலாம். நரசிங்கள் பேட்டையிலிருந்தும் வரலாம். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், கருப்பூர் ஊராட்சியில் ஒருங்கே அமையப்பெற்றுது.
பெயர்காரணம் :
பசுவின் காற்குளம்பு இடறியபோது வெளிப்பட்ட மூர்த்தி இவ ராதலின் “கோகிலேசுவரர்” என்று பெயர் வந்தது.திருக்கொளம்பியம்- திருக்கோழம்பம் என்று திரிந்து அதுவும் மாறி இன்று வழக்கில் திருக்குழம்பியம் என்றாயிற்று.
திருக்கோவில் அமைப்பு :
கிழக்கு பார்த்த கோவில் சுவாமி கிழக்குப்பார்த்து அருள்பாலிக்கின்றார். அம்பாள் தெற்குப்பார்த்து அருள்பாலிக்கின்றார்.முன் மாட கோபுர அமைப்பு, உள்ளே நந்தி மண்டபம், பலிபீடம், ஐம்பொன் வேய்ந்த கொடிமரம், வலது பக்கம் அருள்மிகு சௌந்தர்யநாயகி அம்மாள். விநாயகர், முருகனுடன் தெற்குப் பார்த்து உள்ளார்.
திருவிழாக்கள் :
ப்ரம்மோத்சவம் என்பது எல்லாக் கோயில்களிலும் ஆண்டுக்கு ஒன்றுதான் நடக்கும். இங்கு ஆண்டுக்கு இரண்டு ப்ரம்மோத்சவம் நடக்கும். சுவாமிக்கு ஒன்று, கோகிலசுப்பிரமணியருக்கு ஒன்றாக சுவாமிக்கு வைகாசி விசாகத்தில் விடை கொடி ஏற்றி பத்துநாள் விழா சிறப்பாக நடைபெற்று, சுவாமி அரிசில் ஆற்றில் (காவேரி ஆற்றின் துணை ஆறு) தீர்த்தவாரி உற்சவத்துடன் முடிவடையும். மற்றொன்று அருள்மிகு கோகிலசுப்பிரமணியருக்கு, அஷ்டகொடியேற்றி (எட்டு கொடி) ஆடி கிருத்திகைக்கு 10 நாள் உற்சவம் நடைபெற்று கோவில் முன்புஉள்ள தெப்பத்தில் தீர்த்தவாரி முடித்து திருவிழா முற்றுப்பெறும்.
தலசிறப்பு :
திருமுறை பெரியோர் நால்வரில் திருஞானசம்மந்தப் பெருமான் , திருநாவுக்கரசர் பெருமான் இருவராலும் பாடப்பெற்ற சிறப்புப் பெற்றது. சோழ நாட்டு தலங்களின் 191-ல் இது 98வது தலமாகும்.
அம்பிகை பசு வடிவங்கொண்டு, சாபநீக்கங்கருதிப் பல தலங்களையும் வழிபட்டவாறே ஆவடுதுறைக்கு வரும்போது இத்தலத்தை யும் அடைத்து வழிபட்டதாகத் தலவரலாறு கூறுகிறது.
இந்திரன் வழிபட்ட தலம்.
சாப விமோசனம் தரும் தலம் :
கைலாயத்தில் சொக்கட்டான் விளையாடும்போது சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் போட்டி வந்துவிடுகிறது. அப்போது பார்வதிதேவி நடுவராக இருந்த நிலையில் தவறான தீர்ப்பு கூறியமைக்காக சிவபெருமானால் பசுவாக கடவது என்று சாபம் பெறுகின்றார் . பசுவாக உருமாறி வந்த அன்னை பூமியில் தடம் பதித்த இடம் ஈசனின் லிங்கத்திருமேனியாகும். பசுவின் கால் குளம்பு தடம் லிங்கத்திருமேனியில் உள்ளதால் ஈசனுக்கு கோழம்பநாதர் என்றும், திருக்குழம்பியம் என்றும் வழங்கப்படுகின்றது.
வித்தியாதரன் (சந்தன்) சாப விமோசனம் பெற்றது:
சந்தன் என்னும் வித்யாதரன் இந்திரனின் சாபத்தால் குயில் உருவம் பெற்றான். அந்த சாபம் நீங்க சிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வழிபட்டு வந்தான். ஒரு வைகாசி விசாகத்தன்று சிவபெருமான் தோன்றி உன் சாபம் நீங்க முருகனை வேண்டி தவம் செய். முருகன் உன் சாபம் தீர்ப்பான் என்றும், நானும் முருகனும் வேறு வேறு அல்ல என்று காட்டி முருகனை வழிபடும்படி பணித்தார். உடனே ஈசனுக்கு பின்புறம் சுப்பிரமணியரை பிரதிஸ்டை செய்து பூசிக்க ஒரு ஆடி மாதம் கிருத்திகை அன்று முருகன் வெளிப்பட்டு குயிலுக்கு சாப விமோசனம் அளித்தார். எனவே கோகில சுப்பிரமணியர் என்றும் முருகனும், கோகிலேஸ்வரர் என்று ஈசனும் பேர் பெற்றனர். (கோகிலம் என்றார் குயில்)
சிவனின் அடிமுடி கானும் விசயத்தில் பிரம்மதேவன் பொய்சொன்னதால் பெற்ற சாபம் தீர இங்கு வந்து தீர்த்தம் கொடுத்து இறைவனை வழிபட்டு அந்த சாபம் நீங்கப்பெற்ற திருத்தலம் இது.
அதேபோல அடி- முடி தேடும் படலத்தில் பொய் சொன்ன தாழம்பூ பெற்ற சாபம் நீங்கப்பெற்ற தலம். சிவபூசைக்கு உரிய மலர்களில் நீ அதற்கு தகுதி அற்றுப்போவாய் என்று சிவன் கொடுத்த சாபம் நீங்கி, இறைவன் தாழம்பூவை தன் இடது கையால் ஏற்றுக்கொண்டு தன் சடாமுடியில் சூழக்கொண்ட தலம். இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களை எல்லாம் கொண்டது இத்திருதலம்.
வசிஷ்டரின் சகோதரரான அகஸ்தியர் ஜோதிடத்தில் நிபுணராகத் திகழ்ந்தார் பிறருக்கு ஜோதிட பலன்களைக் கூறும்பொழுது அவர்களது ஆயுள் காலங்களைக் கூறி எவ்வளவு ஆண்டுகள் உயிரோடு இருப்பார்கள் என்ற ரகசியத்தை தெரிவித்தார். எந்த ஒரு ஜோதிடரும் ஆயுள் காலத்தை மற்றவர்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். அப்படிச் சொல்வது கால புருஷனின் சாபத்திற்கு வழி வகுத்துவிடும். அகஸ்தியர் இவ்வாறு மற்றவர்களுக்கு ஆயுட் காலங்களைக் கூறியதால் இவருடைய வாழ்நாள் காலம் குறைந்துவிட்டது. அதனால் கோகிலேஸ்வரரை வேண்டி அதற்கு வேண்டிய பூசைகளையும், ஜெபதபங்களையும் செய்து தன் ஆயுட்காலத்தை நீட்டிக் கொண்டார்என்று தெரிகிறது.
அருள்மிகு கோகிலேஸ்வரரை வணங்கி வழிபட்டால் நம்முன்னோர் சாபங்கள் நீங்கி நம் வாழ்வு சிறக்கும் என்பது உறுதியான அற்புதத் திருத்தலம். சாப விமோசன திருத்தலம். எப்பேர்பட்ட கடுமையான சாபங்கள்கூட தீரும் தலம். தீரும் தலம் என்பதை விட நம் சாபங்களையும் பாவங்களையும் தான் பெற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வு வழங்குகிறார் ஈசன் என்பது உண்மை.